செவ்வாய், ஜூலை 16, 2013

மன்னிக்கவும்-1

பல மாதங்களாக நம் பூவலைக்குள் வராததற்கு...
கடந்த ஜனவரி முதலே,கடுமையான வேலைப்பளு-அலுவலகத்திலும் சரி;வீட்டிலும் சரி.
எம் மருத்துவமனையிலோ,கடும் கூட்டம்.நானும்,நண்பன் ஜாஹிரும் வைத்தியத்தில் வல்லவர்கள் என்பதால்.அரபிகள் எங்களைத்தான் நாடி வருகிறார்கள்.எகிப்து-சூடான் மருத்துவர்கள் பக்கம் போவதில்லை[கரையான் சொல்லியிருப்பான் போல..]
வீட்டுப் பணியை எடுத்துக் கொண்டால்,சென்னை-டி.நகரில் வீடு கட்டும் பணி குறித்து அன்றாடம் பொறியாளருடன் உரையாடல்.என் குடும்பத்தை அங்கு குடியமர்த்தான் வேண்டி ,இந்தியாவில் பல்வேறு ஏற்பாடுகள்-மின் இணைப்பு, பள்ளிக்கூடங்கள் சேர்ப்பு,ரேசன் கார்ட் பெறல்,எரிவாயு இணைப்பு,மனைவி பெயரில் வங்கி கணக்கு தொடங்கல்,மகனை ஐ.ஐ.டி.கோச்சிங்கில் சேர்த்தல் .....[அவனுக்கு குஜிலி வேலை தருவதாக கூறியுள்ளதால்].
கத்தரிலோ,பள்ளிக்கூடத்தில் செட்டில்மென்ட்,வீடு மாற்றல்,வீட்டுப் பொருட்களை பேக்கிங் செய்து ஊருக்கு அனுப்பல்,குடும்பத்தாரை  ஊருக்கு அனுப்பல்.....இத்தியாதி...இத்தியாதி...

பாய்

3 கருத்துகள்:

  1. Bhai - congrats on the move. When are you leaving QATAR? Or are you folks trying to manage life in both places? I didn't realize T.Nagar still had space for houses!

    பதிலளிநீக்கு
  2. Congrats on the strategig move for children studies.
    Hope you will enjoy bachelor life in Qatar now
    When are you going to join in TN govt again
    Chocks

    பதிலளிநீக்கு