சனி, ஜூலை 13, 2013

கிறுக்கல்கள்....

"After all life is 1% what happens to you and 99% of how you react to it
"அனைத்து வாழ்க்கை "நீங்கள் அதை எப்படி 1% என்ன நடக்கிறது மற்றும் 99% பின்"
குஜிளியின் வாக்கியத்தை கூகுள்  மொழிபெயர்ப்பில் போட்டபோது வந்த அர்த்தம்...
இந்த தமிழுக்கு குஜிலி சொன்ன ஆங்கில வாக்கியமே கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கு.
அதை புரிந்து கொண்ட என்னதான் நம்ம கவலைப்பட்டாலும் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது.... வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அதில பயணிப்போம்...இப்படிதான் நான் அர்த்த படுத்தி கொள்கிறேன்.   சில சமயங்களில் நம்மை பெரிய அளவில்  கோபப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போது நம்முடைய ரியாக்சன் -ஐ கொஞ்சம் தள்ளி போட்டு பின்னர் ரியாக்ட் செய்தால் விளைவுகள் நமக்கு சாதகமாகவே முடியும். பொதுவாக வேலை செய்யும் இடங்களில் vet -க்கும் manager க்கும் எப்போதுமே ஒரு பனிப்போர் அல்லது ego யுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கும். நம்முடைய ஒரு சில முடிவுகளை mangers நம்மை தட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றுவார்கள். அந்த நேரங்களில் கோபம் வந்தாலும் கொஞ்சம் அடக்கி கொள்வது நமக்கு நன்மை பயக்கவே செய்யும். விற்பனைக்கு செல்லும் குட்டி குதிரைகளை வாகனங்களில் எடுத்து செல்லும்போது sedate செய்வது என் வழக்கம், என்னுடன் பணி புரிந்த மேலாளர் என்னை தட்டி வைப்பதற்காக அதெல்லாம் தேவை இல்லை என்று கூறி ஊசி கொடுப்பதை தடுத்து விட்டார். நானும் சும்மா இருந்து விட்டேன், ஐந்து கிலோ மீட்டர் கூட சென்று இருக்காது, மேலாளர் பதட்டமாக தொலை பேசியில் அலறினார்," டாக்டர் தயவு செய்து உடனே வரவும், கொண்டு சென்ற எட்டு குட்டிகளில் மூன்று பயங்கர கலாட்டா  செய்து வண்டிக்குள்ளேயே விழுந்து விட்டது என்ன செய்வது " என்றார். திரும்பவும் பண்ணைக்கே எடுத்து வந்து எல்லாவற்றையும் இறக்கி அந்த மூன்று குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து திரும்ப sedate செய்து அனுப்பி வைத்தேன், இப்படி பலவும் புதிதாக இங்கு வேலைக்கு சேர்ந்த நேரத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் நபர் என்னை எதிரியாக  பார்த்தார், ஒவ்வொருமுறை மாற்றங்கள் செய்யும்போதும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருப்பார், எதற்கும் சளைக்காமல் react செய்யாமல் நம்  வழிக்கு கொண்டு வந்து அதனால் எவ்வளவு பயன் உண்டு என்பதை உணர்ந்த பின் இப்போது சிறிய வேலை என்றாலும்  நம்மிடம் கேட்க ஆரம்பித்து விட்டார். நிறைய விஷயங்களில் நம்முடைய எதிர் வினையை கொஞ்சம் தள்ளி போட்டாலே பெரும்பால பிரச்னைகள்  தீர்ந்து விடும். 

சில சமயங்களில் குழந்தைகளை படுத்துவதைபார்த்தால் சிரிப்பாக இருக்கும். என்  மகள் அக்ஷயா ஒரு முறை கணித பாடத்தில் 98% எடுத்திருந்தால், என் மனைவி குழந்தையிடம் அந்த ரெண்டு மார்க் கூட எடுத்திருந்த நல்லா  இருக்கும் என வருந்தி கொண்டு இருந்தார், அந்த கணத்தில்  98 பெருசா 2 பெருசா ? அந்த குறைந்த ரெண்டை எண்ணி 98 ஐ கொண்டாட மறந்து விடுகிறோம்.. 
 என்னதான் ஆயிரம் குதிரைகளை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி இருந்தாலும் செத்துப்போன விலை உயர்ந்த குதிரைதான் எப்போதும் நினைவில் இருக்கும் "செத்தும் கெடுத்தான் " என்பது போல்....
சொக்கன் என்னதான் கோடி கோடியாக மருந்து விற்று கம்பெனிக்கு கொடுத்தாலும் , collection பண்ண முடியாம விட்ட பத்தாயிரம் ரூபாய் ஒரு பிளாக்  மார்க்தான். ...

கரையான். 


3 கருத்துகள்:

  1. Karayaan - once again it brings it down to what one's expectations are regarding life, isn't it? And the right attitude. I read this morning that no matter what criticisms, trials and tribulations one goes through the right attitude makes all the difference. I can see Akshaya's and your Shakila's perspective of looking at the marks she got. As for the loss of life you are right, the one valuable horse that died will always haunt you even if you have saved the rest. But I think that is the right attitude to have for life. On the other hand when life throws us with several calamities that are not fatal, we ought to pick the good things, otherwise it is hard to survive. If we are negative all the time, one would be bitter and resentful all their lives and that is no way to live a short life that we have on this earth.
    Gujili

    பதிலளிநீக்கு
  2. If we pretti well know certain things we cannot change better to leave it as it is. Most of the times we tried to change the behaviour of others on the spot and expressing our feelings.If we can controll our emotions little bit or if we are able to postpone atleast for a minute to reactmost of the issues will be resolved smoothly. But it is very difficult
    Chokcs

    பதிலளிநீக்கு
  3. சொக்கு,கணக்கில் மக்கு...
    இதிலே,கோடி-கோடியாக கணக்கு வேறையா?

    பாய்.

    பதிலளிநீக்கு