திங்கள், ஜூலை 15, 2013

veterinarian

பாய் குறிப்பிட்ட "கால்நடை மருத்துவர்கள் தான் சிறந்தவர்கள்" குறிப்பை படித்தவுடன் என் நினைவிற்கு வந்தது செட்டிநாடு குதிரை பண்ணையில் பணிபுரிந்த போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது....
ஒரு முறை நான் பணியிலிருந்த பொது ஒரு குதிரை அதன் அறையில் சம்பந்தமே இல்லாமல் அதன் அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறது தலையை மேல் நோக்கி பார்த்துக்கொண்டே சுற்றி வருகிறது என்று கூறினார்கள்.  தலையில் ஏதாவது அடி பட்டிருக்குமோ, இல்லை காதுக்குள்ளே கட்டேறும்போ சித்தேறும்போ நிழைந்து விட்டதோ என்றெல்லாம் எண்ணி எனக்கு தலை  கிறுகிறுத்து விட்டது. பின்னர் ஒருவாறாக குதிரையை பிடிக்க சொல்லி சோதித்து பார்த்தேன், ஒன்றும் இல்லை (ஒன்றும் தெரிய வில்லை) எல்லாம் நார்மல். ஒரே ஒரு அறிகுறி மட்டுமே நார்மல் இல்லாமல் இருந்தது, அதாவது "showing the white of the eyes" கண்ணின் வெண்மை பகுதி(sclera) சாதாரண மாக அதிகம் தெரியாது, ஒரு சில குதிரைகள் கொஞ்சம் nervous ஆக இருந்தாலோ, பயந்தாலோ நன்றாக தெரியும்(அவைகளை fractious என முடிவு செய்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே அணுகுவோம்), பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விசாரணை செய்ய ஆரம்பித்தேன், ஒரு வழியாக  அது "kittipul syndrome" என்பதை கண்டு பிடித்தேன். பண்ணையில் பணியாளர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் அந்த குதிரை இருக்கும் கொட்டகை அருகில் கிட்டிபுல் (சென்னை பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் கில்லி) விளையாடிக்கொண்டு இருந்தார்கள் , அவர்களில் ஒருவர் அடித்த கில்லி அந்த குதிரையின் அறை கூரையில் வேகமாக வந்து சொருகி கொண்டது, இதை பார்த்து பயந்த குதிரை அதன் அறைக்குள்ளேயே வெகு வேகமாக ஓட ஆரம்பித்து விட்டது. அந்த கில்லியை அங்கிருந்து எடுத்த பின்னர் குதிரை சகஜ நிலைக்கு திரும்பி வந்தது.
சில நேரங்களில் இந்த மாதிரி CID வேலைகளெல்லாம் கூட செய்ய வேண்டும்.
நிறைய நேரங்களில் diagnostic aids இல்லாமல் பிரச்னைகளை கண்டு பிடிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஒருமுறை ஒரு stallion  கடுமையான colic இல் இருந்தது, அப்போது ஒரு வெள்ளைக்கார கால்நடை மருத்துவ நண்பரும் என்னுடன் இருந்தார், அந்த குதிரையின் testicle பெரிதாக வீங்கி இருந்தது, நாங்கள் இருவரும் அனேகமாக அது hernia வாக இருக்கும் என முடிவு செய்தோம், அப்போது அவர் "நான் சென்று ultrasound scanner எடுத்து வருகிறேன், அந்த வீக்கம் intestine தானா  என்பதை பார்ப்போம் என்றார், நான் அவரிடம் வெறும் steth வைத்துப்பார் intestinal sounds கேட்டால் உள்ளே intestine இருப்பது உறுதியாகி விடும் என்றேன், steth இலேயே உறுதி ஆகி விட்டது. மேலும் intestinal movements ம் தோலின் வழியாகவே நன்றாக தெரிந்தது. ரெண்டு பேராக இருந்தால் இது ஒரு plus தான். விவாதித்து விரைவாக  முடிவுகள் எடுக்கலாம்.
Dystocia சரி செய்து குட்டியை வெளியே எடுக்கும்போது குதிரை கடுமையாக strain செய்யும், அதை தடுப்பது எப்படி என்பதை அந்த நண்பர் எனக்கு சொல்லி கொடுத்தார் , epidural போட்டால் ஒரு சில குதிரைகள் நிற்க முடியாமல் கீழே படுத்து விடும், epidural -ம் போடக்கூடாது குதிரை முக்குவதையும் தடுக்க வேண்டும் எப்படி, ஒரு tube ஐ (naso - gastric  tube ) எடுத்து குதிரை மூக்கு வழியாக naso - tracheal ஆக insert செய்து விட்டால் அந்த குதிரையால் முக்க முடியாது, இதை அவர்தான் சொல்லி கொடுத்தார்.
(இந்த மாதிரி நிறைய விஷயங்கள் பாய் பகிர்ந்துகொள்வார்)
கரையான்.

7 கருத்துகள்:

  1. This is interesting information.. Perhaps I will share it with my friend here who is also an equine vet.

    The vet is also compared to a pediatrician as the babies just cry and stop eating and can't tell the doctor what is wrong with them.

    Gujili

    பதிலளிநீக்கு
  2. டேய் கரையான்,எனக்கு குதிரை வைத்தியம்னா ,குதிரை கொம்பு மாதிரி.நானாவது...நிறைய விசயங்கள் பகிர்வதாவது..


    பாய்.

    பதிலளிநீக்கு
  3. Babies have at least mother, who can give the history(anamnesis....am i right clical ward-la ezhuthuvome), many times we depend on the groom/syce/labourer who takes care of the animal.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  4. கரையானுக்கு குதிரை ஒட்டக வைத்திய நிபுணர் என்று பட்டம் கொடுக்க வேண்டுகிறேன் ..இந்த மாதிரி அனுபவ மருத்துவம் எந்த பாடத் திட்டத்திலும் இருக்க சான்ஸ் இல்லை என்று நினைக்கிறேன் ..வாழ்த்துக்கள்
    Chocks

    பதிலளிநீக்கு
  5. பாய் அவர்கள் தன்னடக்கம் காரணமாக அவருடைய கால்நடை மருத்துவ அனுபவங்களை எழுதாம இருக்கார், அவர் எழுதினால் "சகலகலா வல்லவர்(கால்நடை மருத்துவம்)" என்ற பட்டம் தேடி வரும். காலிக்குடம் சப்தம் எழுப்பும் என்பதால் நான் எழுதி கொண்டு இருக்கிறேன். நிறைகுடம்(பாய்) தலும்பாமல் வேடிக்கை பார்க்கிறது....

    கரையான்

    பதிலளிநீக்கு
  6. ஒரு வேலை பாய் அவரோட technique எல்லாம் ஓபன் secret ஆனா என்ன பண்றதுன்னு யோசிக்கிறாரோ ?

    பதிலளிநீக்கு
  7. சில விசயங்கள் இருக்கிறது.
    ரம்ஜான் மாத விரதம் இருப்பதால்,பிறகு எழுதுகிறேன்.

    பாய்.

    பதிலளிநீக்கு