ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

சொக்கனுக்கு ஒரு விளக்கம்

அண்ணா ஹஜாரே அவர்களின் உண்ணா விரதத்தின் மூலம் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக்கும் பெரு முதலைகளின் பணம் மட்டும் இந்தியாவுக்கு வந்து பயனில்லை, நம்மில் உள்ள சிறு முதலைகளின் மனமும் மாற வேண்டும் என்பதுதான் என் ஆசையும். கோடியில் வைத்திருப்பவனுக்கு நூற்றுக்கணக்கான கோடி குவித்திருப்பவனைப்பற்றிய கவலை, அடுத்த வேலை கஞ்சிக்கே ஆளாய் பறக்கும் சுப்பனுக்கும் குப்பனுக்கும் ஐந்து பத்து லஞ்சமாக பெருபவனைப்பற்றிய கவலை. என்னால் நூறு அல்ல ஆயிரம் கூட கொடுத்து காரியம் சாதிக்க முடிகிறது, அதே வேலையை தினம் நூறு ரூபாய் கூலி பெருபவரால் சாதிக்க முடியுமா, நம் நாட்டில் கோடிகளில் வாழ்பவரை விட அன்றாடம் காய்ச்சிகள்தான் கோடிக்கணக்கில்.
             சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சென்றேன், உண்டபின் பணம் செலுத்தினேன், 285 ரூபாய் பில் ஆனது, 500 ரூபாய் கொடுத்தேன், காசாளர் மீதம் 215 க்கு பதிலாக 315 ரூபாய் சர்வரிடம் கொடுத்தனுப்பினார், நான் அந்த சர்வருக்கு டிப்ஸ் கொடுத்து மேலும் அந்த  காசாளர் தவறுதலாக நூறு ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டார் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினேன் அவரும் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு காசாளரிடம் கொடுப்பதாக கூறி எடுத்து சென்றார், நானும் எழுந்து வந்து விட்டேன், வெளியில் வந்தவுடன் என் மகன் என்னிடம் நீங்களே அந்த பணத்தை சென்று கொடுத்திருக்கலாமே என்றான், நான் அவனிடம் ஏன் என்று வினவினேன், இல்லை நீங்கள் கொடுத்த பணத்தை அந்த அங்கிள் காசாளரிடம் கொடுக்காமல் அவர் பையில் போட்டுக்கொண்டார், நீங்கள் பார்க்கும்போது காசாளரிடம் செல்வதுபோல் சென்று அவர் பையில் போட்டுக்கொண்டு சென்று விட்டார் என்றான்.  அவனிடம், நான் என்ன செய்ய முடியும் நான் நியாயமாக பணத்தை திரும்பி கொடுத்து விட்டேன், அவரை ஏமாற்ற வில்லையே என்றேன், நீங்கள் ஏமாற்ற வில்லை ஆனால் அவர் நூறு ரூபாய் குறையும் பொது உங்களைத்தானே திட்டுவார், மேலும் அவருடைய சம்பளத்தில் பிடித்து விடுவார்களே" என்றான். அவனின் இந்த கேள்வி என் மனதில் இன்னமும் குடைந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் அவன் சொல்லியவுடன் நானே சென்று காசாளரிடம் சொல்லி இருக்கலாம், இது பயமா இல்லை நமக்கேன் வம்பு என்ற அக்கறை இன்மையா.  நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இல்லாமல் உள்ளோமா ????  
ஆக திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்.....கதைதான் இது.

கரையான்.

2 கருத்துகள்:

  1. If multimillioners and billioners who may not be more than 0.25 % Indian population are changing their mind or properly punished for anauthorised savings in swiss bank and assets in binami's name I feel there will be a big turn arround in Indian econamy.And in each and every gove office if the top official is not corruptive the chances of open corruptions may not be much.But when we started voting for money we cannot blame anybody
    Chocks

    பதிலளிநீக்கு
  2. wonderful!
    this blog is now going in the right direction
    the argument is healthy and purposeful!
    itha itha ithathaan ethirparthom
    carry on the gud work
    msk

    பதிலளிநீக்கு