லஞ்சம் கொடுப்பது குற்றமா அல்லது வாங்குவது குற்றமா என்று விவாதம் செய்தால் கொடுக்கிற யாரும் முழு மனதோடு கொடுப்பதில்லை .
நிர்பந்தம் அல்லது லஞ்சம் கொடுத்து முடிக்கிற வேலை நேர்மையான வழியில் நடக்காது அல்லது கால தாமதம் ஆகும் என்கிற நிலையிலேயே கொடுக்க வேண்டி இருக்கிறது.ஒரு அரசாங்க கடை நிலை ஊழியர் வாங்குகிற ரூ 1000 லஞ்சத்திற்கும் அரசியல் வாதிகள் கோடிகணக்கில் அடிக்கிற ஊழலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. பெருச்சாளிகள் எண்ணிக்கை குறைவென்றாலும் 90 % கருப்பு மற்றும் ஊழல் பணம்,பினாமிகள் பேரில் கணக்கில் வராத சொத்துக்கள் என வரை முறை இல்லாத சொத்துக் குவிப்பு ரொம்பவும் ஆபத்தானது. இன்னமும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் நேரு ,கருணாநிதி, எடியுரப்பா,லல்லு,கல்மாடி குடும்பங்கள் இந்தியாவின் மொத்த சொத்தையும் அபகரிக்க நாம் காய் கறி விற்கும் பொன்னமாவிடம் ஐந்து ரூபாய் பேரம் பேசி கொண்டிருப்போம்,
அரசியல் வாதிகள் ஊழல் பற்றி இளைய சமுதாயத்தில் ஒரு விழிப்பு உணர்வு அன்ன ஹசாரே போன்றவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விளம்பர நோக்கத்தில் செய்தாலும் 70 வயதில் ஒரு மனிதன் 12 தினங்களாக சோறு தண்ணி இல்லாமல் உடலை வருத்தி நடத்துகிற போராட்டம் ஊழல் பெருச்சளிகளிடம் ஒரு பய உணர்வையும்,மக்களிடம் பொதுவான விழிப்பு உணர்வையும் அதிகப் படுத்தி இருக்கிறதையும் மறுக்க முடியாது . நானும் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கிற சாதாரண ஆத்மா என்றாலும் பில்லியன் கணக்கில் சுவிஸ் வங்கியில் யாருக்கும் பயனில்லாத பணக் கட்டுகள் ஒரு பகுதி யேனும் திரும்பி வரும் போது அல்லது இனியேனும் கணக்குகள் தொடங்கப் படாமல் இருக்கலாமே என்கிற நப்பாசையில் அண்ணா ஹசாரே போன்றவர்கள் செயலுக்கு ஆதரவு தெரிவித்து நம்மால் முடிந்த வரை இது போன்ற மெயில் forward ஆவது செய்வதை ஆதரிக்கிறேன்.
பட்டு வேட்டிகள் ஒரு பக்கம் பறி போய்க் கொண்டிருக்க லஞ்சம் கொடுக்காமல் அடம் பிடித்தால் கட்டியிருக்கிற கோவணமும் களவாடப் பட்டுவிடும் .
இன்றைய நிலையில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு துரும்பைக் கூட இங்கே நகர்த்த முடியாது.
அந்த அளவு லஞ்சம் வாழ்வின் ஒரு பகுதியாய் மாறி விட்டது.
பெருச்சாளிகளை பொறி வைத்தோ பிரம்பால் அடித்தோ ஒழிப்பது சாத்தியம்.
மூட்டைப் பூச்சிகள் இருந்து கொண்டே தான் இருக்கும்
Chocks
Chocks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக