நிறைய நெருடலான கேள்விகள் பல நேரங்களில் சந்திப்பதுண்டு. எனக்கு மட்டும்தான் இப்படியா இல்லை மற்றவருக்கும் இப்படிதானா தெரியவில்லை.
சமீபத்தில் பண்ணையில் எனக்கு நிர்வாகத்தில் உதவியாக இருக்கும் துணை மேலாளர் விடுமுறையில் சென்று விட்டார், அதனால் பணியாளர்களுக்கு காஸ் வாங்குவது முதல் குதிரைக்கு மருந்து வாங்குவது வரை எல்லா வேலைகளும் என் தலையில். ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும் ரசீது வாங்கும்போது தர்மசங்கடாமான நிலை என்றே சொல்ல வேண்டும். காஸ் சிலிண்டர் வாங்கிய பின் கடைக்காரரிடம் ரசீது கேட்டேன், அவர் உடனே என்னிடம் எவ்வளவுக்கு ரசீது வேண்டும் என்றார், நான் வாங்கியதற்குதான் என்றேன், அவர் என்னை விநோதமாக பார்த்து கொண்டே நான் வாங்கிய ஐந்து சிலிண்டெருக்கு ரசீது கொடுத்தார். நான் அவரிடம் ஒரு சிலிண்டர் பதினாறு ரியால் என எல்லோருக்கும் தெரிந்ததுதானே எப்படி அதிகமாக கொடுப்பாய் என்றேன், அவர் ஐந்துக்கு பதிலாக ஆறு சிலிண்டர் வாங்கியதாக கொடுத்தால் போச்சு என்றார். மருந்து வாங்க கடைக்கு போனாலும் இதே நிலைதான், ஒரு எகிப்திய கால்நடை மருத்துவர் 5% கமிஷன் என்பது நோர்மல் என்றார், நான் எனக்கு கமிஷன் எல்லாம் வேண்டாம் அதை discount ஆக கொடுத்து ரசீதில் எழுதி கொடு என்றேன், அவன் கடும் கோபம் அடைந்து விட்டான், அடுத்த முறை உனக்கு பதிலாக வந்து வாங்குபவனை மாட்டி விடுகிறாயா என்று சண்டைக்கு வந்து விட்டான். ஒரு vial 10% xylazine 350 ரியால் அனால் ரசீது 450 ரியாளுக்குதான் தருவேன் என்றான், உனக்கு 100 ரியால் என்றான், நான் அதெல்லாம் முடியாது எனக்கு உண்மையான தொகைக்கு ரசீது வேண்டும் என்றேன், " மூளை இல்லாதவனே இப்படியெல்லாம் இருந்தால் இங்கு ரொம்ப நாள் வேலை செய்ய மாட்டாய்" என்றான். எனக்கு அதுதான் வேண்டும் உண்மையான தொகைக்கே ரசீது கொடு என்றேன். ரசீதை முகத்தில் எறியாத குறையாக கொடுத்தான்.
இதெற்கெல்லாம் மகுடம் வைப்பது போன்ற சம்பவம்.....
என்னுடைய முதலாளியின் மகன் என்னிடம்" டாக்டர் ஒரு ஒட்டகம் வாங்க போகிறேன், உன்னுடைய புதிய காரில் செல்வோம் வா " என்றான், நானும் கொஞ்சம் பாலைவனத்திற்குள் பயணம் செய்து வரலாமே என்று கிளம்பினேன், போகும் வழியில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பங்கிலிருந்த பெங்காளியிடம் ரசீது கேட்டேன். அவன் " கித்நேக்கா சாப்"(எவ்வளவுக்கு)" என்று கேட்டான். இந்த கேள்வியில் கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டேன், நல்ல வேலையாக என்னருகில் உட்கார்ந்திருந்த முதலாளி மகன் அவனுடைய செல் பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான்.
(நண்பர் அருண் பிரசாத் அவர்களை சென்னை நட்சத்திரங்கள் அன்புடன் வரவேற்கிறது...)
கரையான்.

நெருடலான கேள்விகளை சமாளிப்பது ,ரொம்ப ரொம்ப கஷ்டம்.
பதிலளிநீக்குகரையான்-உன் நேர்மை ,நாணயம் தொடரட்டுமாக!
பாய்.
Karayaan, I join with Bhai to congratulate your integrity! It is a society built for exploitation and the cunning one survives. However for those of us who believes in "what goes around comes around" a.k.a karma, integrity will be honored and corruption will reap its consequences.
பதிலளிநீக்குGujili
There is a big cry over corruption in govt depts. but i see more in private companies. i notice the expats here in a hurry to make a fast money. The egyptians are the most greedy, and would do anything to make money or reach higher positions.
நீக்குkaraiyan.