திங்கள், செப்டம்பர் 03, 2012

EMBARASSING QUESTIONS

குஜிலி என்னுடைய முந்தைய பதிவில் சம்பளம் பற்றிய கேள்விகள் நெருடலாக (embarassing) இல்லையா என்று கேட்டிருந்தார், இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு, ஒருவர் நம்முடைய வருவாய் எவ்வளவு என்று கேட்பதில் என்ன தவறு என்பது என் கருத்து. பல சந்தர்ப்பங்களில் இதை விட அதிக நெருடலான கேள்விகளை சந்திப்பதுண்டு. உதாரணத்திற்கு , எனக்கு திருமணம் ஆனா புதிதில் நம் கல்லூரிக்கு சென்றிருந்தேன், அப்போது நம் தோழியர் சத்தியபாமா மற்றும் பிரேமலதா ஆகியோரை சந்தித்தேன், அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி," உன்னுடைய மனைவி எங்களை விட அழகாக இருப்பாளா", இதை விட embarassing ஆனா கேள்வி உண்டா. இதற்கு ஆம் என்றால் தோழியர் கோபமடைவார்கள், இல்லை என்றால் பொய் சொன்னதாகி விடும்(அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை துணை தான் most beautiful in the world) , இன்னுமோர் நெருடலான கேள்வி "நீ ஏன் PG பண்ண வில்லை" என்ற கேள்வி , நான் நினைத்தாலும் கல்லூரியில் சேர்த்து கொள்ள மாட்டார்களே( குறைந்தது 3 OGPA இருக்க வேண்டுமே.)  இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம், உன் குழந்தை எத்தனையாவது ரேங்க் என்ற கேள்வியும் சில நேரங்களில் நெருடலாக அமைவது உண்டு. என் குழந்தைகள் என்னைப்போலதானே இருப்பார்கள்... முதல் ரேங்க் எல்லாம் வாய்ப்பில்லை.... ஏன்  commerce க்ரூபில் சேர்த்தாய், டாக்டருக்கு படிக்க வைக்கலையா ? இப்படி பல கேள்விகள் embarassing ஆக இருப்பதுண்டு...

கரையான்.

3 கருத்துகள்:

  1. Embarrassing Questions:
    It looks painful, but it doesn’t hurt.
    I remember one of my friends (who is well known for being acidic and sarcastic) who was asked by a distant aunt (who was harassing everyone with such questions) "So, when are you going to get married?"

    My friend's response was "Dunno. When are you going to die?"

    That stopped the conversation!

    Karaiyan-You can also reply like this.

    BHAI.

    பதிலளிநீக்கு
  2. Talking about embarassing questions - I suppose the concept of privacy differs in each culture. But somethings we ask of people in India are very intrusive in my opinion. The question - "when are you getting married, why aren't you married" was repeated so many times, that it was very annoying. I could have tried - when are you going to die seems appropriate but it is hard to try it on elder people especially when we revere our elders so much in our culture.
    I have sometimes resorted to ignoring the question and changing the subject hoping that the person gets the idea and moves on. That has worked for me sometimes.
    Gujili

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஜிலி மற்றும் பாய் அவர்களின் கருத்துப்படி ஒரு விஷயம் நன்றாக புரிகிறது பெரும்பாலான மக்கள் கல்யாணம் செய்து கொள்வதும், சாவதும் ஒன்று என நினைக்கிறார்கள்( சரியாக சொல்வதென்றால் திருமணம் தற்கொலைக்கு சமம்).

      கரையான்.

      நீக்கு