வெள்ளி, செப்டம்பர் 28, 2012

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....

(கீழ் உள்ள கவிதை யார் எழுதியது என்று நினைவில்லை எப்பொழுதே எடுத்து கோப்பில் வைத்தது)

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!

என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது

காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..

ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு ...கெஞ்சுபவனைப்போல...

மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்

சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது

குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...

அழுவதும்... அணைப்பதும்...

கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...

இடைகிள்ளி... நகை சொல்லி...

அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...

எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...

என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்...

கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!

இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்

நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...

தேவை அறிந்து... சேவை புரிந்து...

உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...

தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...

இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்

விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு...

நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?

பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்

ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது -

என் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு -

அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!


Bhai

வியாழன், செப்டம்பர் 27, 2012

தாயகம்2012 --- 8

செமினார் -இரண்டாவது நாள் 
படத்தை பெரிதாக்கிஆட்களை ,
நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

பாய்.








திங்கள், செப்டம்பர் 24, 2012

நட்சத்திரங்களின் வேண்டுகோளுக்கு இணங்க [தமிழாக்கமாக தரப்படுகிறது]


நட்சத்திரங்களின் வேண்டுகோளுக்கு  இணங்க....
   [தமிழாக்கமாக தரப்படுகிறது]


சிவமோகன்:---லிடியா ,தனம்மாள்,கிறிஸ்டோபர் .....என்ன...உங்க அப்பா,தாத்தா,பூட்டன் பெயரையெல்லாம் சொன்னால் தான் ,எலுந்திருப்பியா!   மேலே உள்ள விளம்பரத்தில் உள்ள "FOURTS"என்ற வார்த்தையை உச்சரி.
லிடியா:---        "FOURTS"         
(பாயின் குறிப்பு:லிடியா,நம்ம குஜிலி மாதிரி சூப்பெராக  கரெக்டாக தான் உச்சரித்தாள்.ஆரம்பம் முதலே,அவள் ஆங்கில வழி கல்வியில் படித்தவள் ஆயிற்றே!)
சிவமோகன்:---லிடியா,உக்காரு,என்ன உச்சரிக்கிறாய்!உனக்கு "ஃப்" தான் தருவேன்.
சிவமோகன்:--இப்ராஹீம்,நீ அதை உச்சரி.
இப்ராஹீம்:--     "FOURTS" 
(பாயின் குறிப்பு:ஏதோ உச்சரித்தேன்.  ஆரம்பம் முதலே,நான் தமிழ்   வழி கல்வியில் படித்தவன்   ஆயிற்றே!)      
சிவமோகன்:-இப்ராஹீம்,நீ ரொம்ப கரக்டாக உச்சரித்தாய்.ஒரு நாள்,நீ லண்டன்,பாரிஸ்,நியூ யார்க் ஆகிய இடங்களுக்கு சென்று,எனது ஆங்கிலத்தை பரப்புவாய்.உனக்கு : "ஏ " கிரேடு  தருவேன்.

 குறிப்பு:சிவமோகன் வாயில் சீனியை அள்ளிப் போடுங்கள்.லண்டன்,பாரிஸ்,நியூ யார்க் ஆகிய இடங்களுக்கு போகாவிட்டாலும்,தோஹா-மக்கா என பாதி தூரம் வந்து விட்டேன்.


பிரியமுடன்,
பாய்.
ஹாய் ,


வரவேற்புக்கு நன்றி, பாய்  மற்றும்  choka அவர்களுக்கு ....




 



 I had Recently flushed one Red sindhi cow in a Govt.farm at Utranchal . I am sharing the photo containing 7 day old embryos. It is a great feeling to see a life of 7 day old under the microscope. some of the embryos are really a copy book style (blastocyst).

என்னடா ! வந்ததும், வராததுமா  சுப்ஜெக்ட் பேசி  ரம்பம் போடுறன்னு நினைகவேண்டம் .

சந்திப்போம் ......

சனி, செப்டம்பர் 22, 2012

ASAD-அசத்தல் பிரசாத்


வருக....வருக...வருக...

அருண் பிரசாத் அவர்களே!
உங்கள் வரவு ,
அருமையான பிரசாதம்,
போல் நல்வரவாகுக...

பிரியமுடன்,
பாய்.

குறிப்பு:
கட் அவுட் கரையானே,
நம் அசத்தல் பிரசாத்திற்கு ,
ஒரு கட் அவுட் வை!
Hi,




Guess how Mr.Sivamohan (our English teacher) would have reacted to this notice??? put up on a convenient store.

Bhai wud've started to miming him right away....

Happy week end..

ASAD
 

Hello every one...

Hello,

A big thanks to Bhai for helping me to come in to blog.

Thanks for your welcome Karayanchavadi ( I doubt how many of us know, that this is the basis for you nick name)

It has become a routine for me to chk the blog as soon as I open my PC. Helps us to forget all our worries at work . I invite more and more of our friends to join in and share their views in the blog.

HF cow in my friend's farm
These two guys (Bhai and karayan) are simply great in their postings. So hilarious!!!

ASAD..

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

தாயகம்2012 --- 7

தாய்க் கல்லூரியில்,செமினாரில் 
நானும்-கரையானும் கலந்து கொண்டோம்.
வழக்கம் போல் அடியேன்,நம் நண்பன் பாபுவின் 
அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன்.

நேரில் சந்தித்தால்,பாபுவைப் போன்று 
யாரும் கவனிக்க மாட்டார்கள்.
அவன் நன்றாக வாழட்டும்.

குறிப்பு:கரையான்-நீ வாங்கிய சான்றிதழை ,ப்ளாக்கில் ஏற்றவும்.



பாய்.











வியாழன், செப்டம்பர் 20, 2012

புதன், செப்டம்பர் 19, 2012

கரையான் படும் பாடு

எவ்வளவு கஷ்டப்பட்டு ,நம்ம கரையான் ப்லாக்கிர்க்காக டைப் அடிக்கிறான்.
நீங்களோ,ஒரு கமென்ட் கூட அடிப்பதில்லை.

பாய்.

செவ்வாய், செப்டம்பர் 18, 2012