ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

FRUSTRATING WEEK

வெளிநாட்டில் பணிபுரியும்/வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் வருவது போன்றதுதான் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான பிரச்சினை எனக்கு இந்த வாரம் முழுவதும். என் பெரியப்பா எண்பது வயதை பூர்த்தி செய்வதால் அவருடைய எண்பதாவது பிறந்த நாளை  வெகு விமரிசையாக கொண்டாட குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுத்து, தேதி முடிவு செய்யும் முன்னரே என்னிடம் கேட்டனர், நானும் ஏப்ரல் 9 -ல் இரண்டு நாட்கள் விடுமுறையில் தாயகம் வந்து செல்ல சம்மதித்தேன்(இப்போது breeding season என்பதால் என்னால் ஜூன் வரை நீண்ட விடுமுறைகள் எடுக்க இயலாது). மார்ச் மாத கடைசியில் என்னுடைய மேலாளரிடம் நான் ஏப்ரல் 8 சென்று 10 தேதியில் திரும்பி விடுவதாக விடுமுறை கேட்டேன், அவரும் ஒரு சிறிய நிபந்தனையுடன்   செல்ல அனுமதி அளித்தார், அதாவது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த குதிரை குட்டி போட்டவுடன் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என கூறினார், அந்த குதிரை மார்ச் 30 தேதி due ஆகவே நானும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டேன். என்னுடைய கஷ்ட காலம் ஏப்ரல் பதினைந்தில் குட்டி போட வேண்டிய குதிரை ஏப்ரல் ஒன்றாம் தேதியே குட்டி போடுகிறது, அந்த அமெரிக்க குதிரைக்கு பிறகு குட்டி போட வேண்டிய ஆறு குதிரைகள் வரிசையாக ஒரு வாரம் முன்னரே குட்டி போட்டு விட்டன, ஆனால் நான் எதிர் பார்த்த குதிரை மட்டும் இன்று இந்த நிமிடம் வரை குட்டி போட வில்லை. நாளை விடிந்தால் குடும்ப விழா..நொந்து போய் இங்கே குதிரை குட்டி போடுமா என்று உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். அந்த குதிரை இனிமேல் குட்டியை போட்டால் என்ன விட்டையை போட்டால் என்ன? குடும்பத்தினருடன் குதுகலமாக இருக்கும் வாய்ப்பு போனது போனதுதான் ....

கரையான்.

3 கருத்துகள்:

  1. குறைந்த பட்சம் "கட்டி"யை யாவது போட்டு இருக்கலாம்.
    இந்த குதிரைகளே,இப்படித்தான்.

    பாய்

    பதிலளிநீக்கு
  2. miga adhigam and punniyam 80 vayadhu
    namellam 60 thanduvoma
    theriyadhu
    un periappavin assigalai vendugirom

    பதிலளிநீக்கு
  3. My regular consulting physician asked about my working nature as I had BP above 140 during check up.I told the nature of the job and less time spent with family etc etc.Then he said "ätleast the person working in abroad can spend his total hours for a month whenever he is back to India on holidays.In domestic job even people are on job during Sundays also due to the nuisance of mobile phones"It's true.
    So Karaiyan you are missing only occasions .Here we miss family itself most of the days.
    Chocks

    பதிலளிநீக்கு