குடும்பத்தினருடன் கழிக்க நேரம் கிடைப்பதில்லை என்பது பொறுப்பிலிருந்து தப்பிக்க தம்மை தாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு யுக்தி என்பது என் கருத்து. ஒரு மணி நேர தூக்கத்தை தியாகம் செய்து அந்த நேரத்தை குழந்தைகளுடனும் மனைவியுடனும் செலவிடலாமே. நாம் நேர மேலாண்மை (time management) -இல் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. அலுவலக நேரம் முடிந்தவுடன் நாம் அவருக்கு முன்னாள் கிளம்பி விட்டால் நம் மேலதிகாரி தப்பாக நினைத்து கொள்வாரோ என்ற தயக்கம் நாம் எவ்வளவு உயரம் சென்றாலும் இருக்கத்தான் செய்கிறது...அதே நேரத்தில் கடைக்கு அழைத்து செல்வதாக காலையிலேயே வாக்கு கொடுத்ததால் மனைவி/வாழ்க்கை துணை நமக்காக காத்திருப்பாரே, குழந்தைகள் ஏமாற்றம் அடைந்து விடுவார்களே என்ற எண்ணம் நமக்கு எழுவதில்லை. இந்த வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை தேடிக்கொள்ளலாம்,குடும்பத்தினரை அந்த வகையில் சேர்க்க இயலாது.
நான் பண்ணையில் resident vet -ஆக இருப்பதால் சில சௌகரியங்கள் இருந்தாலும் அசௌகரியங்களும் உண்டு. இரவு பகல் என்று பார்க்காமல் எப்போதும் அழைப்பு வரலாம், ஆனால் பணி நேரத்தை நம் வசதிக்கு அமைத்து கொள்ளலாம் என்பது வசதி. "அப்பா வேலைக்கு போறா மாதிரியே தெரியல, எப்ப பாத்தாலும் வீட்டுலேயே இருக்காரே என என் குழந்தைகள் "சில நேரங்களில் கமென்ட் அடிப்பது உண்டு, அவர்களே சில நேரங்களில் அப்பா என்ன "கெஸ்ட் மாதிரி அப்பப்ப வீட்டுக்கு வந்து போறாரு" என்றும் நக்கல் அடிப்பது உண்டு. மார்ச் ஏப்ரல் மாதங்களில் பிரீடிங் சீசன் உச்சத்தில் இருக்கும் என்பதால், தொடர்ந்து வேலைப்பளுவும் அதனால் உண்டாகும் டென்சன் களும் குறைவில்லாமல் இருக்கும். அந்த நேரங்களில் இரவுகள் சில பல நாட்கள் என்னுடைய கைப்பேசி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும்(சில நேரங்களில் காலை மூன்று மணி போன்ற நேரங்களில் இந்த மாதிரி தொல்லை பேசி அழைப்புகள் சந்தோஷ அனுபவங்களையும் கொடுக்கும்-குடும்பஸ்தர்களுக்கு புரியும்.).
பெரும்பாலான வியாழக்கிழமை இரவுகள் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் உட்கார்ந்து கொண்டாடும் barbecue இரவுகள். கோழிய சுட்டு திங்கிற இரவு. நெருப்ப போட்டு விட்டு சுத்தி உட்கார்ந்து கோழியை சுட்டு தின்னும் சுகம் (அனுபவித்துப்பாரு சொக்கா...ஓட்டல் போறத விட அவ்வளவு சூப்பரா இருக்கும்..உங்க வீட்டு மொட்ட மாடியிலேயே போடலாம் வாரத்துல அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை முயற்சி செய்து பார் ரத்த கொதிப்பெல்லாம் பக்கத்துக்கு வீட்டு காரனுக்கு போய் விடும்.)
மேலும் எழுதுவேன்....
கரையான்.
When you cross 40,these sort of things are common.
பதிலளிநீக்குOne has to justify and satisfy both sides.
BHAI.
There is an article in Today's Dinamalar.Due to powercut in night hours most of the people in TN are suffering from mental stress with disturbed sleep.
பதிலளிநீக்குI feel mobile phones cause the major stress as we don't allow time to cure so many things on its own like olden days
Chocks