வியாழன், நவம்பர் 01, 2012

மொழிப்பிரச்சனை

சென்னை விஜயத்தின் பொது நான் பார்த்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று வெளி மாநில தொழிலாளர்களின் அதிகரித்த எண்ணிக்கை. எங்கு பார்த்தாலும் பெங்காலிகளும் பீகாரிகளும் நிறைந்திருக்கிறார்கள். சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கட்டிட தொழிலாளர்கள், ஓட்டல் பணியாளர்கள் என எங்கும் வெளி மாநிலத்தவர்கள் பணி புரிகிறார்கள். சவுதியில் பெரும்பாலான உடல் உழைப்பு தொழில்களில் குறிப்பாக சாலை மற்றும் கட்டுமான தொழில்களில் பாகிஸ்தானிகளும், நம் நாட்டிலிருந்து தமிழகத்தவர்களும் அதிகமாக இருப்பார்கள். நம்மவர்களுக்கு சுத்தமாக எந்த மொழியும் வராது தமிழை தவிர, பாகிஸ்தானியர்கள் குறிப்பாக பஷ்டூ இனத்தவர்கள் உருது கூட பேச மாட்டார்கள், இவர்கள் எப்படி கூட்டாக  கட்டிடத்தை உருப்படியாக கட்டி முடிக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். கிட்ட தட்ட அதே நிலைதான் இப்போது நம் ஊரிலும். முன்னெல்லாம் நம்மூரில்  ஆந்திராவை சேர்ந்தவர்கள் கட்டுமான தொழில்களில் அதிகம் வருவார்கள், சென்னையில் தெலுங்கு பேச தெரிந்தவர்கள் அதிகம் என்பதால் பெரிதாக பிரச்னை இருக்காது. ஆனால் இப்போது நம் மக்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சென்ற வாரம் என் மனைவி பத்து நாள் விஜயமாக சவுதி வந்திருந்தார். அக்கம் பக்கம் இருக்கும் அவரது நண்பிகள் அவருக்கு பக்ரித் விருந்து கொடுத்தார்கள் கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் பெண்கள் மட்டும் என்  வீட்டில் உட்கார்ந்து அவரவர் செய்து எடுத்து வந்த திண் பண்டங்களை பகிர்ந்து  உண்டு அளவளாவி சென்றார்கள். இது என்ன பெரிய விஷயம் என்றால், வந்திருந்த ஆறு பெண்மணிகளில் ஒரே ஒரு பெண்ணுக்குத்தான் கொஞ்சம்(எஸ், நோ ,குட் ) என்கிற அளவில் ஆங்கிலம் தெரியும், என் மனைவிக்கு ( கோயிஸ்(fine), சலாம்) என்கிற அளவில்தான் அரபி தெரியும். அதில் ஒரு பெண் சமீபத்தில் குழந்தை பெற்றவள் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை என் மனைவி  எப்படி கேட்டார் என்பதை என்னிடம் விவரித்தார்,விழுந்து விழுந்து சிரித்தேன்,
என் மனைவி அந்த பெண்ணிடம் அந்த குழந்தையை காட்டி "what is his name" என்று இரண்டு மூன்று முறை கேட்டும் அந்த பெண்ணுக்கு புரிய வில்லை..பின்னர் என் மனைவி " I Shakila, You Samaha, He Mohammad என்று ஒவ்வொருவராக காட்டி அவர்கள் பெயரை சொல்லி கடைசியாக அந்த குழந்தையை காட்டி What is his name? " என்று கேட்டு அந்த குழந்தையின் பெயரை தெரிந்து கொண்டுள்ளார்.
சில சமயங்களில் சமையல் பற்றி அவர்களுடன் பேசியதாக சொல்லுவாள், அவர்களிடம் பேசி கற்று கொண்டதை தயவு செய்து எனக்கு சமைத்து கொடுக்காதே என்று கண்டிப்பாக கூடி விடுவேன், அவர்கள் சொன்னதை அரைகுறையாக புரிந்து கொண்டு என்னை இம்சிக்க வேண்டாம் என்பதால்தான் இந்த முடிவு........

கரையான்.

2 கருத்துகள்:

  1. Language issues are always very funny and sometimes can lead to either laughter or a fight! Remember our classmates from Nepal how you guys would teach them all the bad words?? It just brought back some memories of college days. Karayaan I am glad Shakila is visiting you now, I am sure it makes a huge difference to have home-cooked food and not have to come home to an empty house. You should be more open to the types of food Karayaan, who know Shakila may get some extra tips to cook even better food for you. Don't always assume it would not be good, be adventurous! I have several stories about my first few years here where I tried to say something and it got misunderstood or vice versa. I will blog it one of these days..
    Gujili

    பதிலளிநீக்கு
  2. This is similar to that of me speaking HINDI on behalf of our batch during our All India tour.
    BHAI.

    பதிலளிநீக்கு