இவர் எங்க வீட்டு டிரைவர் .படத்தில் உள்ள என் அப்பாவின் 1970 மாடல் அம்பாசடர் காரை ஓட்டுபவர்.
இந்த விஜயத்தில் ,கால்நடை மருத்துவம் குறித்து பேசினார்.
அதாவது ,[ஓட்டுபவர்]:நம்ம அரசு கால்நடை மருத்துவமனைக்கு வயிறு உப்பிய என் ஆடுகளை கொண்டு சென்றால் ,உறுதியான சாவு தான் ஏற்படுகிறது .
ஆகையினால் ,தற்போதெல்லாம்,இந்த பிரச்சினை ஏற்பட்டால்,ஒரு சிறிய செவென் அப்புடன் ,ஒரு குவார்ட்டரை கலந்து வாயில் ஊற்றி விடுகிறேன் .சூப்பர் ரிசல்ட் தான் என்றார் .
எனக்கோ,ஒரு பக்கம்,சிரிப்பை அடக்க முடியவில்லை,மறு பக்கம் தன் முதலாளி என்றும் பாராமல் என்னிடம் அவ்வாறு கூறியது,இன்னொரு பக்கம் கால்நடை மருத்துவராகிய என்னிடமே கூறியது,இறுதி பக்கம் நம் சக மருத்துவர்களை என்ன சொல்வது என்ற சிந்தனை .
பாய்.
இதத்தான் நாங்களும் சொல்லுறோம் தினமும் வயிறு லேசா உப்புசமா இருக்கும்போது கொஞ்சம் சரக்க பெப்சில கலந்து மிக்சர் சிப்ஸ் சேர்த்து கொண்டு குடிக்கிறோம் ....அது என்னவோ பெரிய தப்புன்னு சொல்லிக்கிட்டு திரியிராயிங்க... பாய் இந்த காருலதான் ஊருல சுற்று பயணமா??? மிகவும் பாதுகாப்பான கார்... திடமாகவும் இருக்கும் அதிக வேகமும் செல்லாது(திருமண ஊர்வலம் செல்வதுபோல்)....
பதிலளிநீக்குகரையான்.