அஜால் குஜால் என்றவுடன் பயணத்திற்கு முன் சில நண்பர்களிடம் அறிவுரைகள் வேண்டி பேசியவைதான் நினைவுக்கு வருகிறது. முன்னரே இங்கிலாந்து சென்று வந்திருந்த நண்பர்கள் சிலரிடம் என்னுடைய விஜயம் பற்றி கூறி எங்கெங்கு போகலாம், எவைஎவை பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன், அவர்கள் கூறியவற்றில் பெரும்பாலான விஷயங்கள் எழுத முடியாதது. பயணத்திற்கு முன் விசா விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பித்தபின் காத்திருந்த பொது என பல கட்டங்களில் என் மனைவி தீவிர பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டிருந்தார், விசா வெல்லாம் கிடைத்து நான் இங்கிலாந்து சென்ற பின்னர் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்தபோது பூஜை செய்துகொண்டிருந்தார், அதுதான் இங்கிலாந்து விஜயம் செய்து விட்டேனே பின்னரும் என்ன விசேஷ பூஜை என்று கேட்டேன், "நீங்க பத்திரமா வரணும்மில்ல" என்றாள், இந்த பத்திரத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதாக எனக்கு பட்டது. பொதுவாக நம் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் போல என்று நான் நினைத்துக்கொண்டேன். எல்லா ஊர் பெண்களுக்குமே அந்த பயம் இருக்கும் என அங்கிருந்த டாக்ஸி ஓட்டுனர் மூலமாக தெரிந்து கொண்டேன். அவர் வெளிநாடு சுற்றுபயணம் செல்லும்போது அவருடைய மனைவி ஒரே ஒரு கண்டிஷன்தான் போடுவாராம்,"Don't bring AIDS" என்று கூறுவாராம். கொஞ்சம் பழகியவுடனே மிகவும் நட்பாகி விட்டார், அவருக்கு திருமணமாகி நாற்பத்தி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டதாம், மிகவும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார், அவரே என்னிடம் "என் மனைவி இப்படி கூறினாலும் என் மீது மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறாள்" மேலும் அவளே "If someone wants to do something, he
need not go to a foreign country, he can do it at home" என்று கூறுவாள் என்றார். நான் பத்திரமாக வந்து சேர வேண்டி இருந்ததாலும் இது சொக்கனின் கவிதைபோன்ற காதல் கதை என்பதாலும் குத்து பாட்டுக்கெல்லாம் இடம் இல்லாமல் போய் விட்டது. இருந்தாலும் சில சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை....அதை பின்னர் எழுதுகிறேன்....
need not go to a foreign country, he can do it at home" என்று கூறுவாள் என்றார். நான் பத்திரமாக வந்து சேர வேண்டி இருந்ததாலும் இது சொக்கனின் கவிதைபோன்ற காதல் கதை என்பதாலும் குத்து பாட்டுக்கெல்லாம் இடம் இல்லாமல் போய் விட்டது. இருந்தாலும் சில சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை....அதை பின்னர் எழுதுகிறேன்....
கரையான்.
Very interesting perspective. Perhaps it goes both ways for either spouse!
பதிலளிநீக்குGujili