சனி, டிசம்பர் 31, 2011

கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
--------------------------------------------------------------------------------

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

--------------------------------------------------------------------------------

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...

--------------------------------------------------------------------------------

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு
சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே...!
--------------------------------------------------------------------------------

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு,
நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா
தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா
கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
--------------------------------------------------------------------------------



மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

--------------------------------------------------------------------------------


கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------


டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
---------------------------------------------------------------------------------

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
---------------------------------------------------------------------------------


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

பிரியமுடன் ,
பாய். 

பராக் ....பராக்...

பாய் தான்.
தாயகம் சென்று விட்டு ,நேற்று திரும்பினேன்.
பல பணிகளால்,ப்ளாக்கிற்கு வரமுடியவில்லை.
இன்று ப்ளாக்கில் நுழைந்து பார்த்தால்,எக்கச்சக்க போஸ்டிங்குகள்.
படித்து முடிக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகியது.
ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
பாமா வந்தது ,பரவச மூட்டியது.
GFK வந்தது ,கும்முன்னு இருக்குது.
தாயக தகவல்கள் ,தொடராக தருவேன்.
அன்புடன்,
   பாய்.

புதன், டிசம்பர் 28, 2011

Please do not open e mail from Gujili

Hello Folks,
My hotmail account got hacked so if you received a message in the past 48 hrs from me please do not open it. Some of the members in my address book have already sent me an e mail asking if I sent this e mail and I did not. I can't get into my account now so hopefully it will get sorted out soon. Meanwhile if any of you ever receive an e mail from me, there will always be a note saying something, even if it is a forward. So keep that in mind before opening any forwards if I happen to send any. Also any e mail I send will always have a word or two in the subject line, it will not be empty.
My apologies in advance if your account got hacked because of me.
Gujili









CUTE LOVE MESSAGES- no copyrights...anyone can use it....

Do you believe in love at first sight .. or do I have to walk by again??

Love is sweet poison: .. Do not consume without your beloved's advise .. and keep out of reach of children .. and keep it in cool and dark place.

If you fall in river there is a boat .. if you fall in well there is rope .. but if you fall in love there is no hope..

L O V E .. L = Lake of Sorrows .. O = Ocean of Tears .. V = Valley of Death .. E = End of life....

You must be a good runner because you arealways running in my mind, you must be a good thief because you have stolen my heart, and i am always a bad shooter because I Miss You Always...

I have the "I",I have the "L",I have the "O",I have the "V",I have the
"E",... so pls can I have "U"?

Sometimes My eyes get jealouse of my Heart!!!
You Know Why?Bcoz.....You Always Remain close to my HEART n far from my EYES...

I have liked many but loved very few.yet no-one has been as sweet as u.I'd stand and wait in the worlds longest queue.just for the pleasure of a moment with u....

Dont give password of our Love and friendship to anybody,Because if u will say this password "I LOVE U" It means he will hack u from me and u will go out from my hands..

Without Love -- dayz are
"Sadday,
moanday,
tearsday,
wasteday,
thirstday,
frightday,
shatterday... so be in Luv everyday...

கரையான்....

sardarji jokes

கொஞ்சம் எல்லாரும் சிரித்து மகிழ்ச்சியாக கருத்தை பதிவு செய்ய சில சர்தார்ஜி ஜோக்ஸ்.....

A sardarji Doctor falls in Love with a Nurse.He writes a love letter to the Nurse :- I Love U sister....

One day Sardar happened to see a marathon race.
"What the guys are doing" asked the sardar.
" We are running a marathon. The winner will get prize" replied one
runner.
"Only the winner will get prize! Then why others are participating!!"
Exclaimed the sardar.

Sardarji calls Air India. "How long does it take to fly to Amritsar?"
"Just a sec," says the receptionist. "Thank you." says the Sardar and
hangs up.

Why did 18 Sardars go to a movie?
Because below 18 was not allowed.

One tourist from U.S.A. asked to Sardar: Any great man born in this village???
Sardar: no sir, only small Babies!!!

After returning back from a foreign trip, sardar asked his wife,
Do I look like a foreigner?
Wife: No! Why?
Sardar: In London a lady asked me Are you a foreigner?

Teacher to Sardar: Write your best friend's name in English.
Sardar wrote: ' Beautiful Red Underware'
Teacher: What?
Sardar: His name is Sundar Lal Chaddi.

Manager asked to sardar at an interview
Can you spell a word that has more than 100 letters in it?
Sardar replyed: -P-O-S-T-B-O-X.

in an interview,
interviewer: How does an electric motor run?
SARDAR: dhuurrrrrrrrrr..
Interviewr shouts: stop it !
SARDAR: dhurr dhup dup dup dup..

What is Common between : Krishna, Ram, Gandhiji & Jesus..?
Sardar ji Replied : All are Born on Government Holidays...

2sardars go for a drive. . . .OYE zara khidki ke bahar dekhi indicators working or not. . .sardar puts his head out & says yes..No..Yes..No..Yes..No..

 A sardar on an interview for the post of detective was
asked a question
Interviewer - Who killed Gandhiji ?
Sardar - Thanks for giving me the job, I will
investigate.

கரையான்.

செவ்வாய், டிசம்பர் 27, 2011


சும்மா ஒரு படம் காட்டணுமேன்னு இந்த படம். நானும் குதிரை வாங்க போனேன்னு காட்ட ஒரு படம் தேவைப்பட்டதால் இதை போட்டுள்ளேன். இது நியு மாட்கட்டில் உள்ள டாட்டர்சால்ஸ் குதிரை விற்பனை வளாகம். (நண்பர் பீர் அவர்களுக்கு நான் ஜனவரி பத்தாம் தேதி foal care பயிற்சி பெறுவதற்காக வருகிறேன், மூன்று நாட்கள் மட்டுமே தங்குகிறேன்.)
                                (சில சவுதி குதிரை முதலாளிகளுடன் நான்)

கரையான்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

வெள்ளி, டிசம்பர் 23, 2011

இந்த படமே ஒரு கவிதை தான்

தனியா வேற 'கவித' வேணுமா

அரிது அரிது....
 மானிடராய்  பிறத்தல் அரிது .....
அப்படியே பிறந்தாலும்
தாவணி போட்ட
தாமரை

(தாவும் மரை அதாவது தாவும் மான் )

 பார்த்தல் அரிது...
கொஞ்ச நாளல்ல புடவை கூட
பார்த்தல்/போர்த்தல் அரிதாகும்
அதை கட்டிக்கிட்டு
ஓடுறது அதை விட அரிது

(உன்னை கட்டிகிட்டு வாழறதை விட
இப்படி ஓடுறது ....better 
...மனைவிகளின் மனசாட்சி )

 அதிலும் இந்த படத்தை  பார்த்தால்
......அதுக்கு முன்னாடி ஒரு quiz...

 (நம்ம batchula  கடைசி வரைக்கும் புடவை மட்டுமே கட்டினவங்க
 எத்தனை பேர் ...?
.....சரியாய் சொல்றவங்களுக்கு, நல்லா சாம்பார்ல ஊரி
 உப்ப்பி போன மெது  வடை பரிசு)

மேலும் ரத்தத்தின் ரத்தங்களே...
பார்வையின் படி மேற்கண்ட
 புகை படத்தில் ....
ஓடும் நமது த/நங்கைகளை
பார்க்கும் பொது
எனக்கு நம்ம காலேஜ்
ஸ்போர்ட்ஸ் மீட்
ஞாபகத்துக்கு வருது

அதை விடு மாப்பு

கவித... கவித...


எதை நோக்கி ஓடுகிறாய்
வரப்பபோகும் மாப்பிள்ளையை பார்க்கவா?
இல்லை மாமியாருக்கு பயந்தா?
இல்லை தங்கம் விலை
 என்ன வென்று பார்க்கவா?
(அதை பார்க்க உன்  அப்பனலவா ஓடணும்?)
இல்லை,,,
அம்மா உடன் பிறவா...(censored)
எதிராக....
எடுக்கும்
 நடவடிக்கைக்கு பயந்தா?
ரேஷன் கடைக்கா?
அஜித்,சூர்யா, ரஜினி
(கண்டிப்பா விஜய் பேர் சொல்ல மாட்டேன் )
ஷூட்டிங் பார்க்கவா?
இல்லை கதிரேசன் சார்
NCC  paradekku  க்கு கூப்பிடுவார்னா ?

(அதெப்படி
paradekku  மட்டும் வராதவங்க எல்லாம்
horse  riding  மட்டும் கரெக்டா போறீங்க? )
தனபால் ரிச்சர்ட் மாதேசை விட உங்களால
வேகமா (messukku ) ஓட முடியுமா சவால்....

செரி செரி ......
எல்லோரும் என்னை தான்
 பார்க்க வர்றீங்கன்னு
 யார் கிட்டயும்  சொல்ல மாட்டேன்
 நீங்களும் சொல்லிராதீங்க....!












kavidha...kavidha....

sokkanaatha plz comment and hope babu likes this

galeejba...

advice is for others only

Elei singam pola

Another time anna was aksed to define 'WIFE'
he replied...................
intha kelvikku bathil therinjukka
virumbravanga thaniya linela vaanga
naan udhai vaanga thayaraga illai
ithu yellorkume therinjathu thaan
because cant b used thrice in a sentence bcos bcos is a conjunction
when another time anna was asked to say some thing about 'church' he said
begining is the end, end is the beginning in between you are
(ch is the begining and end & in between is ur)
like to share some pun, intelligence and command over English of C.N.Annadurai
when a foreign reporter wanted to take a ride on him and pull his legs asked him if he knew about UNO!....Anna replied - I know UNO, I know you know UNO, You don't know i know UNO..! the reporter left aghast

வியாழன், டிசம்பர் 22, 2011

??????

 
பேசப்படாத வார்த்தைகளில்
அறியப்படாத மனநிலைகளில்
தெரியப்படாத ரகசியங்களில்
உணரப்படாத துயரங்களில்
பங்களிப்பில்லா சேவைகளில்
நினைவிலில்லா உறவுகளில்
புரிந்து கொள்ளா நேசங்களில்
நெருக்கமில்லாத் தருணங்களில்
ஒளிந்து கொண்டிருக்கிறது
ஏராளமாய் ...
இன்னமும்
எழுதப் படாத கவிதைகள்
வரையப்படாத ஓவியங்கள்
இயக்கப்படாத குறும்படங்கள்
தொடுக்கப்படாத இசைமலர்கள்
அரங்கம் காணா நடனங்கள் ..
எப்போது எழுதப்போகிறாய்
தெளிவான திரைக்கதையில்
உனக்கான பாத்திரத்தை
 
Chocks

புதன், டிசம்பர் 21, 2011

Dont ask me how ..

veterinary jurissprudence for cd  batch 
was taken by Dr. T.N.ganesh
after a series of boring 
 monotonous classes came -
the topics
maiming......snega
tsu posoning..... shimran
vetero legal cases... nametha
beastiality... அமலா பால்


 ரிச்சா கங்கோபாதியயாய...

 இனியா...


இலியானா...


 இன்னும்...
ஹி ஹி ஹி ஹி!

அது இருக்கட்டும் :
விஷயத்துக்கு வருவோம்...!

பொதுவாகவே
நிறைய சென்சிடிவான
 விஷையங்கல்ல...
 நம்ம குடும்பம்..
 சொந்தம்...
 ஊரு...
 ஜாதி...
 மதம்...
 நாடு...
 பற்றி யாராவது புகழ்ந்து பேசினா
 நமக்கு ஜிவ்வுன்னு full அடிச்ச மாதிரி
 எகிறிடும்!

அப்டித்தான்...
 யாரு யாரு சேலத்து காரங்கன்னு
 வாத்யார்...
கேட்ட உடனே
நெறைய பேர் கை தூகினாங்க
பொறாமையாக  இருந்துச்சு ;
எம்பரயோ,
சக்திவேல்
இன்னும் சிலர் உட்பட
மத்தவங்களை
புழு ...
மாதிரி
பார்த்ததை மறக்க முடியாது..
 
Dr. T.N.Ganesh Continued ...

I am glad to see so many faces from salem dt.,
 and continued his lecture
after nearly explaining every thing  about beastiality
 nearing  the end of the class
 he stated
"beastiality in Tamil Nadu  is more prevalent in and around  salem district"
 that too in fowls.......
 and uttered ...


 ...DON'T ASK ME HOW?




Don't ask me how?

தனுவாஸ்
கழக கண்மணிகளே !

 தீபா ஒளியில்
சொக்க வைக்கும்,
தேவதை (angel) ஒன்று
 கரையானாக மனதை
செமியாக அரித்து
 பாய் கடை
பீர்கங்காய் கூட்டுக்கு
 தாசன் போல
( ஏல எந்த பாய் கூட்டு பண்றாருன்னு 
கேட்க கூடாது! - ஒரு மோனைக்காக சேர்த்தது )
புதிதாய் BA-MA  படித்தவர்களுக்கும்
சேர்த்து
 இன்னும் வராதவர்களுக்கும்
புனித கிறிஸ்துமஸ்
புத்தாண்டு 2012 
பொங்கல்
மாட்டு பொங்கல்
வாழ்த்துக்கள்
msk 



கிசு கிசு

இப்போ புதிதாக அரசு கால்நடை மருத்துவர் நியமனம் செய்யப்படுவதைப்பற்றிய காற்று வழியே வந்த செய்தி......நம்ம கவிதைபாடி கலக்குற சொக்க வைக்கிற சிவ பெருமான் அரசு வேலைக்கு முயற்சி செய்வதாக கேள்விப்பட்டோம்....சில வருஷத்துல ஓய்வு பெறப்போகுற வயசுல தனியார் துறைல குப்ப கொட்டினது போதாதுன்னு இப்ப அரசு துறைல வேற கலக்க போறாராம். இதை நமக்கு சொன்னவர் அவர் கலரால அழைக்கபடுபவர், இப்ப ரூபாய் நோட்டடிக்கிற ஊருல பறவை வியாபாரம் செய்றார்.

சம்பந்தப்பட்டவர்தான் விளக்கனும்....

சென்னை நட்சத்திரங்கள் என்ற பெயரில் செல்லரிக்கும் ஊர்க்காரர்.

ஞாயிறு, டிசம்பர் 18, 2011


பிளாகிற்கு சில காலங்களாக வராமல் இருக்கும் GFK மற்றும் குஜிலி அவர்களை திரும்ப விரைந்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.....

சென்னை நட்சத்திர நண்பர்கள்.....

வாழ்த்துக்கள் இது நம்முடைய ஆயிரமாவது பதிவு.....

நம்முடைய ஆயிரமாவது பதிவை எப்படி கொண்டாடலாம்னு நண்பர்கள் கூடி ஆலோசனை செய்து கொண்டிருக்கொறோம். விரைவில் கொண்டாட்டம் பற்றிய அறிவிப்பு வரும்....

சென்னை நட்சத்திரங்கள்...

தாசு,செந்திலு,சொக்கன் வந்ததுக்கு நன்றி....

மாங்கு மாங்குன்னு இல்லாத மூளைய கசக்கி நாங்க எழுதறோம் ஒருத்தனும் வந்து கருத்து எழுதலேன்னா கஷ்டமா இருக்குமா இருக்காதா, அதுக்குதான் உங்கள வர வைக்க அந்த  மாதிரியெல்லாம் படம் போட வேண்டியிருந்தது. குஜிளிக்கும் GFK உக்கும் சீக்கிரம் படம் ஏதாவது போட்டுடலாம். மேலே உள்ளது OASIS DREAM என்ற stallion, அதற்கு covering fees 85000 யூரோக்கள். அந்த படத்துல் செவப்பு கம்பளி ஆடை போர்த்தி இருப்பவர் யாருன்னு உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
சரி விஷயத்திற்கு வருவோம், இங்கிலாந்து போய் ரெண்டு நாள் ஆகியும் சரியான கம்பனி கிடைக்காமல் தாக சாந்தி  முடியாமல் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, நல்ல வேலையாக ஒரு சவுதி காரரே என்னிடம், டாக்டர் தாக சாந்தி போகலாம் என்று கூறினார், அவர் குடிப்பதை பார்த்து கொஞ்சம் பயமாக இருந்தது, எங்கே மட்டை ஆகி நம்மள படுத்தி எடுத்துடுவாரோ என்று நினைத்தேன், ஆனால் மனுஷன் செம ஸ்டிராங். அடுத்த நாள் நான் தனியாக சென்று ஒரு பப்பில் மப்பாகலாம் என்று சென்றேன், எதிர்பாராமல் இன்னொரு சவுதி நண்பர் அதே பப்பிற்கு வந்து விட்டார், என்னை பார்த்து அவருக்கு ஷாக்(இவன் பார்த்து விட்டானே என்று), சில சுற்றுக்கள் முடித்த பின்னர் அவரிடம்" உன்னுடைய நண்பரை ஏன் அழைத்து வர வில்லை(முந்தின நாள் என்னுடன் அருந்தியவர்)" என்று கேட்டேன். "ச்சே ச்சே அவர் ரொம்ப நல்லவரு, இதை எல்லாம் தொடவே மாட்டார்" என்று கூறினான். ஆமாம்..ஆமாம் தொட மாட்டாரு அப்படியே முழுங்கிடுவாறு என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்... அடுத்த நாள் ஒரு இந்திய நண்பர் அவருடைய வெள்ளைக்கார நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதாகவும் என்னையும் கலந்து கொள்ள அழைத்தார்,  வந்திருந்த அனைத்து வெள்ளைக்காரர்களும் இந்திய தயாரிப்பான ஒரு பீரை  விரும்பி அருந்தினார்கள், அது அந்த நாட்டுக்காரர்களையே அசைத்து ஆட வைத்ததை பார்த்து அசந்து விட்டேன். ரூமுக்கு திரும்பும்போது நான் தங்கி இருந்த ஓட்டலின் பாரில் மூன்றாவதாக ஒரு சவுதி தாக சாந்தி அடைந்து கொண்டிருந்தான்.....ச்சே நாமதான் இவங்களை பத்தி தெரியாமல் முதல் ரெண்டுநாள வீணடிச்சிட்டோம் போல.... என்று நினைத்து கொண்டேன்....

கரையான்.

புதன், டிசம்பர் 14, 2011

வேற வழியே இல்லை.......



ரொம்ப நாட்களாக நம்ம பிளாகிற்கு எப்போதும் வருகைதரும் தாஸ், செந்தில்,சொக்கன் ஆகியோரின் வருகை குறைந்து விட்டதால், அவர்களை ஊக்குவிக்க நாமும் கமர்ஷியலாக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயம்...அதற்குதான் இந்த புகைப்படங்கள்.....

கரையான்.

செவ்வாய், டிசம்பர் 13, 2011

vetero-legal cases

என்னுடைய முந்திய பதிவுக்கு நம் நண்பரோ/நண்பியோ ஒரு நல்ல கேள்வி கேட்டிருந்தார்கள். vetero-legal கேஸ் பத்தி,  நல்ல வேலையா அப்படி எதுவும் இங்க இல்லை, இருந்திருந்தால் நாங்களெல்லாம் வாழ்க்கை பூரா சவுதியிலேயே கழிக்கிற நிலைமை வந்திருக்கும். நம்முடைய சிகிச்சைக்கப்புறம் அல்லது சிகிச்சையால் குதிரையோ/ஒட்டகமோ இறந்தால் "அல்லா கரீம்" என்று சொல்லி விட்டு விடுவார்கள், அதாவது எல்லாம் கடவுள்  செயல் என்று அர்த்தம்(அதனாலதான் நம்ம பொழப்பு ஓடுது, இல்லையின்னா இந்தியாவுல குப்ப கொட்ட முடியாம இங்க எதுக்கு வர்றோம்.) மேலும் ஒரு காரணம் என்னவென்றால்  இந்த நாட்டு மருத்துவர்கள், எகிப்திய,சுடானி,சிரியா மருத்துவர்களுக்கு இந்தியர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பதால், நாம் முடிந்த அளவுக்கு மிருகங்களுக்கு நல்லதையே செய்வோம் என்ற நம்பிக்கை இந்த ஊர் ஆட்களுக்கு உள்ளது.

(யாரப்பா இவுங்களுக்கு தெரியாத vetero-legal விஷயங்கள சொல்லி எங்க பொழப்புல மண்ண போட்டுராதீங்கப்பா...)

கரையான்.

திங்கள், டிசம்பர் 12, 2011

வயதாகிறது....

சில தருணங்களில் ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கும் அந்த மாதிரி தருணங்களில் ஒன்று ஒட்டகத்தில் ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டிய தருணம்.  குதிரைல எல்லாமே குதிரையின் விலையை பொறுத்து என்பதால்  எந்த குதிரையில் கை வைத்தாலும் ஒரு டென்சன் இருப்பது பழகிய ஒன்றுதான்.  குதிரை நம்முடைய சிகிச்சைக்குப்பின்னும் மண்டையைப்போட்டால் முதலாளியோ சக ஊழியர்களோ ரொம்ப காஸ்ட்லி குதிரை என்பார்கள்(அது கழுதையாக இருந்தாலும்).  ஒரு முறை நண்பர் ஒருவர் castration செய்தார் அந்த குதிரைக்கு கிட்டதட்ட ஐந்து மணி நேரமாக ரத்தம் நிற்கவே இல்லை, என்னிடம் புலம்பி தள்ளி விட்டார், "இந்த வேலைக்கு வந்ததற்கு பேசாம ஒரு அக்கவுண்டன்ட் மாதிரி வேலைக்கு சென்றிருந்தால் இந்த மாதிரி டென்ஷன் இல்லாமல் இருந்திருக்கலாம், என்ன பிழைப்பு இது என்று தொடர்ச்சியாக புலம்பி கொண்டிருந்தார், நானும் அவரிடம் எனக்கு கூட இப்படிதான் பல முறை தோன்றி உள்ளது கவலைப்படாதே சரியாகி விடும்" என்றேன். முந்தாநேற்று இரவு ஒரு குதிரைக்கு பிரச்சினை, இரவு இரண்டு மணி வரை வைத்தியம் பார்த்து சரியாக்கிய பின் சிறிது நேர தூக்கம், காலை ஆறு மணிக்கு ஒரு ஒட்டகம் அடி பட்டு விட்டது என அழைப்பு, ஒட்டக பராமரிப்பாளர் " டாக்டர் சாப் இந்த ஒட்டகத்தின் விலை ஐந்து மில்லியன் ரியால் அதனால் உடனே வந்து சிகிச்சை செய்யவும்" என்று மிரட்டல் கலந்த வேண்டுகோள் வைத்தார். நானும் எல்லா உபகரணங்களுடன் சென்றேன், அவர் வேறு மிக காஸ்ட்லி என்று கூறி விட்டாரே, மயக்க மருந்து கொடுப்பதற்கு   கொஞ்சம் தயக்கத்துடன் தான் கொடுத்தேன். கிட்ட தட்ட ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தையல் போட்டு முடித்தேன், ஒட்டக தோல் கிட்டத்தட்ட எருமை தோலை விட கொஞ்சம் வலிமையானது என்றுதான் கூற வேண்டும், கை முதுகு  சரியான வலி, திரும்ப பகல் பன்னிரண்டு மணிக்கு அழைப்பு, போட்ட தையல் எல்லாம் பிய்ந்து விட்டது, திரும்ப வந்து தையல் போட வேண்டுமென்று. திரும்ப மூன்று மணிக்கு எல்லா உபகரணங்களோடு சென்று, இந்த முறை மயக்கம் கொடுப்பதா கொடுக்காமல் செய்வதா என்ற குழப்பம்(ஏனென்றால் காலையில் கொடுத்த மயக்கமே மதியம் ரெண்டு மணிக்குதான் தெளிந்ததாக பணியாளர் கூறினார்), திரும்ப ஒன்றரை மணி நேரம் போராடி தையல் போட்டு முடித்தேன், முதுகு கிட்டத்தட்ட கூன் விழுந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும், சரியான முதுகு, இடுப்பு வலி. இதில்  குளிர் காற்று வேறு, காலையில் ஏழு டிகிரி சி மாலையில் கொஞ்சம் பரவாயில்லை பதினெட்டு டிகிரி. ஆனால் அந்த குளிரிலும் வேர்த்து விட்டது. எல்லாம் முடிந்து குதிரைகளுக்கான சிகிச்சை எல்லாம் முடித்து வீடு சென்று குளித்து உண்டு ஒன்பது மணிக்கே படுத்தேன், ஒன்பது பத்துக்கு தொலைபேசி அழைப்பு குதிரை ஒன்று உடல்நிலை சரி இல்லை என்று. இந்த நேரத்தில் என் மன நிலை அந்த நண்பரின் நிலைதான்.....


Age is catching up.....இப்படியே வேலை செய்வது கொஞ்சம் கடினம் , சொக்கன் பாபு மாதிரி மத்தவங்கள வேலை வாங்குற அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைப்பது  அரிதுதான்.

கரையான்.

சனி, டிசம்பர் 10, 2011

பயண அனுபவம்

அஜால் குஜால் என்றவுடன் பயணத்திற்கு முன் சில நண்பர்களிடம் அறிவுரைகள் வேண்டி பேசியவைதான் நினைவுக்கு வருகிறது.  முன்னரே இங்கிலாந்து சென்று வந்திருந்த நண்பர்கள் சிலரிடம் என்னுடைய விஜயம் பற்றி கூறி எங்கெங்கு போகலாம், எவைஎவை பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன், அவர்கள் கூறியவற்றில் பெரும்பாலான விஷயங்கள் எழுத முடியாதது. பயணத்திற்கு முன் விசா விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பித்தபின் காத்திருந்த பொது என பல கட்டங்களில் என் மனைவி தீவிர பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டிருந்தார், விசா வெல்லாம் கிடைத்து நான் இங்கிலாந்து சென்ற பின்னர் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்தபோது பூஜை செய்துகொண்டிருந்தார், அதுதான் இங்கிலாந்து விஜயம் செய்து விட்டேனே பின்னரும் என்ன விசேஷ பூஜை என்று கேட்டேன், "நீங்க பத்திரமா வரணும்மில்ல" என்றாள், இந்த பத்திரத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதாக எனக்கு பட்டது. பொதுவாக நம் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் போல என்று நான் நினைத்துக்கொண்டேன். எல்லா ஊர் பெண்களுக்குமே அந்த பயம் இருக்கும் என அங்கிருந்த டாக்ஸி ஓட்டுனர் மூலமாக தெரிந்து கொண்டேன். அவர் வெளிநாடு சுற்றுபயணம் செல்லும்போது அவருடைய மனைவி ஒரே ஒரு கண்டிஷன்தான் போடுவாராம்,"Don't bring AIDS" என்று  கூறுவாராம். கொஞ்சம் பழகியவுடனே மிகவும் நட்பாகி விட்டார், அவருக்கு திருமணமாகி நாற்பத்தி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டதாம், மிகவும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார், அவரே என்னிடம் "என் மனைவி இப்படி கூறினாலும் என் மீது மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறாள்" மேலும் அவளே "If someone wants to do something, he
need not go to a foreign country, he can do it at home" என்று  கூறுவாள் என்றார். நான் பத்திரமாக  வந்து சேர வேண்டி இருந்ததாலும் இது சொக்கனின் கவிதைபோன்ற காதல் கதை என்பதாலும் குத்து பாட்டுக்கெல்லாம் இடம் இல்லாமல் போய் விட்டது. இருந்தாலும் சில சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை....அதை பின்னர்  எழுதுகிறேன்....


கரையான்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

படித்ததில் பிடித்தது

நீ, நான், அவன்.!

டாஸ்மாக்கில் சைட் டிஷ் கொண்டுவர லேட்டானதால் கொட்டு வாங்கும் சட்டை பட்டனில்லா சிறுவன், கார் கண்ணாடியின் தூசிகளை தட்டிவிட்டு ஓம் படம் வரைந்து தலையை சொறியும் அழுக்கு சட்டைக்காரன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை முச்சந்திக்கு இழுத்து வரும் சாலை படம் வரைபவன், களைப்புக்கு தூங்கப்போறானோ , கொழுப்பு கரைக்க புணரப்போறானோ என்ற கேள்விகளை துறந்துவிட்டு தோள்கள் வலிக்க கட்டில் இழைக்கும் ஆசாரி, காற்று அமுங்கிப்போன சக்கரம் கொண்ட தள்ளுவண்டியை தள்ளிப்போகும் சோன்பப்டிக்காரன், சாமிகளை கண்ணாடி பிரேமிற்குள் அடைத்து விற்பவன், ரூ. 8 கடன்பாக்கியை மறக்காமல் தர வேண்டிக்கொள்ளும் கையேந்திபவன் ஓனர், ஐஸ் வேணுமா? வேணாமா? என அக்கறையுடன் கேட்டுக்கொண்டே ஈ ஓட்டும் கரும்பு ஜூஸ் கடைக்காரர், சூடா என்ன இருக்கு? என்ற கேள்வியை லட்சத்திநூறாவது தடவை கேட்டுவிட்டு டேபிள் துடைத்துக்கொண்டே கடகடவென ஒப்பிக்கும் இளைஞன், கோக்கையும் பெப்சியையும் சொன்ன விலைக்கு வாங்கிக்குடிப்பவர்களிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் இளநி விற்பவர், பழைய லாரி தில் 'இங்கு பஞ்சர் ஒட்டப்படும்' என எழுதி காத்திருக்கும் ஹை-வே பட்டறைக்காரன், பீடி வலித்துக்கொண்டே குப்பையை அள்ளி நகராட்சி வண்டியில் போடும் துப்புரவாளர், இந்தியாவில் விற்கப்படும் அத்தனை பவுடர்களையும் வியர்வை கலந்து சுவாசிக்கும் பேருந்து நடத்துனர், தினமும் குறைந்தது பத்து பேரிடமாவது திட்டு வாங்கியும் நேரத்திற்கு செல்ல ஹாரன் அடிக்கும் ஓட்டுனர், 'அடுத்து வரும் பாடலை பாடுபவர்கள் உங்கள் எஸ்.பி.பி மற்றும் சின்ன குயில் சித்ரா' எனும் ரேடியோவை கேட்டபடி மெஷின் மிதிக்கும் தையற்காரர், எப்பொழுதும் தலைகனமாய் திரியும் சித்தாள், காதை ரூல் பென்சில் ஸ்டான்டாய் கொண்டிருக்கும் கொத்தனார், ஆந்தையோடு குடித்தனம் நடத்தும் தமிழ் மற்றும் திபெத்திய கூர்க்கா, ஆசுவாசப்படுத்திக்கொள்ள டீயை உறிஞ்சி குடிக்கும் குடும்ப சுமைகளை குறைக்க மூட்டை தூக்கும் மீசைக்காரர், குருவாயூரப்பனையும் மோகன்லாலையும் மறந்துவிட்டு நோயாளிகளுடன் வாழும் மலையாள நர்ஸ், தன்னைவிட முப்பது வருடம் இளையவனுக்கு ஹார்லிக்ஸ் வாங்கிவரும் காக்கிசட்டை பியூன், ஆட்டுக்குட்டிக்கு பஸ் டிக்கெட் எடுக்கணுமா என்ற கவலையுடன் பஸ் ஏறும் விவசாயி, விசேஷத்திற்கு போட்டுக்கொண்டு போகும் சட்டையை தலையணைக்கு அடியில் இஸ்திரி போடும் கைத்தறி நெசவாளி, துணி துவைக்கும் சோப்பிலேயே முகம் கழுவி சாப்பிட தயாராகும் மெக்கானிக், இதுவரை ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பிரதி எடுத்து கொடுத்துவிட்ட ஜெராக்ஸ் கடை முதிர்கன்னி, எக்ஸ்போர்ட் துணி பிசிறுகளை எட்டு மணி நேரம் நின்றுக்கொண்டே வெட்டிப்போடும் தினக்கூலிகள், இயற்கை தந்த மூன்று நாள் லீவில் மூன்றாம் நாளை விரும்பி கேன்சல் செய்துவிட்டு பவுடர் பூசும் விலைமாது, நாய் பொம்மை விற்க நாயை விட அதிகம் குலைக்கும் பொம்மை விற்பவன், மாதம் ஒரு நாள் சம்பள கவர் வாங்க தினமும் ஆயிரம் கவர்களை டெலிவரி செய்யும் கொரியர் இளைஞன், மற்றவர்கள் காலில் கற்பழிக்கும் செருப்பை கையால் தடவி வேலை செய்யும் வெத்தலை வாய்க்கார செருப்பு தைப்பவன், கஞ்சனையும் கடவுளாக்கும் குருட்டு பிச்சைக்காரன், மீன் பிடிக்க போய் கருவாடாய் திரும்பி வரும் மீனவன், சோப்புகளை தூக்கிக்கொண்டு வீதி வீதியை அலையும் விற்பனை பிரதிநிதி, களைப்பு தெரியாமல் இருக்க கட்டிங் போட்டுவிட்டு கண்களால் கற்பழிப்பவனுக்கு ஆடிக்காட்டும் கரக்காட்டக்காரி, பத்து ரூபாய்க்கு பாயாய் குனியும் பூசாரி, ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாணி பூரி விற்கும் உ.பி'காரன், பத்து ரூபாய்க்கு சகல பிரியாணியும் போடும் நடமாடும் டிபன் வண்டிக்காரன், எல்லா அப்பார்ட்மென்ட்வாசிகளையும் தெரிந்து வைத்திருந்தும் இதுவரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய அனுமதி கிடைக்காத வாட்ச்மேன், டீ மாஸ்டர், பலகார மாஸ்டர், புரோட்டா மாஸ்டர், இந்த சமுதாயத்தை எப்படி நடத்த வேண்டுமென செய்துகாட்டும் பேப்பர் போடும் பையன், பிணத்தையும் சிரிக்க வைத்து போட்டோ எடுக்க கஷ்டப்படும் போட்டோகிராபர், கந்துவட்டிக்காரனுக்கு பாதி பணத்தை சம்பாதித்து கொடுக்கும் மார்கெட் காய்கறி கடைக்காரர்கள், வாழ்கையை வறுமையிலும் வண்ணமயமாய் வாழும் கோல பொடி விற்பவர், நைந்த கைலியுடன் பாய் விற்பவன், முட்டை இலந்தை நவாப்பழம் வெள்ளரி என சீசனுக்கு ஒன்று விற்று போகும் கூடைக்காரிகள், பாத்திரம் தேய்ப்பதற்கு சம்பளம் வாங்கி வீட்டு ஓனர் உடம்பை தேய்த்து போவதை சகித்துக்கொள்ளும் வேலைக்கார பெண்கள், இட்லி விற்கும் ரிட்டயர்ட் ஆகாத ஆயாக்கள், வாரம் நான்குநாள் லீவு விட்டுவிடும் குடிக்கார ஆட்டுக்கால் சூப் கடைக்காரர், ஜில் ஜில் ஜிகர்தண்டா விற்கும் சிடுமூஞ்சிக்காரர் என இந்த தேசத்தில் தான் எத்தனை கோடி மனிதர்கள்? எத்தனை கோடி கனவுகள்? எத்தனை கோடி தொழில்கள்? ஆனால் ஒரே ஒரு முதலாளி......................................................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் பெயர் 'பசி'...!!!!!
.
.
.
.

................................................................................................................................................................
( "இந்த உலகத்தில் கை இல்லாதவன் உண்டு, கால் இல்லாதவன் உண்டு, வயிறு இல்லாதவன் இல்லை" என்று எங்கோ படித்த கவிதை ஒன்றின் உந்துதலில் எழுதியது )

வியாழன், டிசம்பர் 08, 2011

பயண அனுபவம்

வழக்கமாக மேற்கத்திய நாடுகள் செல்லும் நம் நாட்டவர்களுக்கு வரும் பிரச்னைகள்தான் எனக்கும், சாப்பிடுவதில் தொடக்கி, சாப்பிட்டதை  வெளியேற்றுவது வரையான நம் பழக்கத்துக்கு ஒவ்வாத அல்லது பழகாத  முறைகள் தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும் இரண்டாம் நாளே பழகி விட்டது. சத்தம் எழுப்பாமல் கத்தி, குத்தி(fork) வைத்து சாப்பிடுவது என்பதை கொஞ்சம் பழகி கொள்ளவேண்டும். மேலும்  நான் சென்ற இடத்தில் இந்தியர்கள் அதிகம் வசித்ததால் அங்கிருந்த வெள்ளைக்காரர்களுக்கு  நான் உணவுடன் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தது புதிதாக  தெரியவில்லை போலிருக்கிறது யாரும் என்னை விநோதமாக பார்க்க வில்லை. மேலும் சில இந்திய ஓட்டல்களில் வெள்ளைக்காரர்களே கைகளால் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. இந்தியாவிலிருந்து குதிரை வாங்க வந்தவர்கள் என்னை விநோதமாக பார்த்தார்கள் ஏனென்றால் சவுதியிலிருந்து வந்திருந்த பலருக்கு மொழி பெயர்ப்பாளராக நான் உதவி கொண்டிருந்ததை பார்த்து ஒரு இந்திய குதிரை பண்ணையாளர் என்னிடம் " நீ துருக்கி காரன் என்று நினைத்தேன், நம்ம ஆள் மாதிரியே ஒருத்தன் அரபிகளுடன் சேர்ந்து குதிரை வாங்க வந்திருக்கின்றானே என்று யோசித்து கொண்டிருந்தேன்" என்றார்.  
தொடருவேன்.....

கரையான்.

திங்கள், டிசம்பர் 05, 2011

பயண அனுபவம்

கனவு தேசங்களில் ஒன்றான இங்கிலாந்து பயணம் கனவு போலவே முடிந்து விட்டது.  பல புது விஷயங்கள்,நீண்ட நாள் நண்பரை  நெடுநாட்களுக்குப்பின் சந்திக்கும்  வாய்ப்பு, புது மனிதர்கள், சொந்த நாட்டில் உள்ள எட்டாத மனிதர்களை சுலபமாக சந்திக்கும் வாய்ப்புகள் என மிக பயனுள்ள பயணமாக அமைந்து விட்டதில் மகிழ்ச்சி. பயண தொடக்கத்தில் போர்டிங் பாஸ் வாங்க வரிசையில் நின்றதிலிருந்து திரும்பி வரும் வரை excitement க்கு குறைவில்லாத பயணம். விசாவில் குறை கண்டிபிடித்து விமானத்தில் ஏற்றாமல் திருப்பி அனுப்பி விடுவார்களோ, இங்கிலாந்தில் நுழைய அனுமதிப்பார்களோ என எல்லாமே மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்ததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
ரியாதில் போர்டிங் பாஸ் வாங்க பாஸ்போர்ட் விசா செக் செய்யும் போது கவுண்டரில் இருந்த பாகிஸ்தானிக்கு என்ன வயிற்றெரிச்சலோ தெரிய வில்லை முதல் முறை பயணம் செய்கிறீர்கள் நீங்கள் செல்ல இயலாது என்று கூறி பெரிய அதிகாரியை பார்க்க சொன்னான், அவருடைய பெரிய அதிகாரி என்னுடைய ஹோட்டல் முன்பதிவு முதலானவற்றை சரி பார்த்து விட்டு, நீங்கள் செல்லலாம் என்று கூறி அனுப்பினார், விசா விண்ணப்பிக்கும்போதே இதை எல்லாம் காட்டினால்தான் விசாவே கொடுப்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நினைத்து கொண்டேன்.  இங்கிலாந்தில் நுழையும்போது எதற்காக வந்தீர்கள் போன்ற கேள்விகள்  பணம் ஏதும் சம்பாதிக்க கூடாது வேலை செய்யக்கூடாது போன்ற நிபந்தனைகள் இதை எல்லாம் தாண்டி விமான நிலையத்தை விட்டு வெளி ஏறிய பிறகுதான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

நாளை தொடருவேன்....

Sales ring Tattersalls, Newmarket

High Street, NewMarket.
கரையான்.

Super English by a Vet!!!


பாய்.

இது எந்த ஜாதி-2


பாய்.