எங்களுடைய ரைசிங் இஸ்டபிளில் கொஞ்சம் குதிரைகளுக்கு கேள்டிங் மற்றும் கஸ்லிக்க் செய்ய வேண்டி இருந்ததால் அங்கு சென்று விட்டு பணி முடிந்த வுடன் அந்த பகுதியில் நான் ஏற்கனவே வேலை செய்தபோது அறிமுகமான என்னுடைய பழைய நண்பர்களை சந்திக்கலாம் என சென்றேன். அப்போது என் நண்பர் எகிப்து நாட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் அவருடைய open-air surgical theatre - ல் (அதுதான் பிக் அப் டிரக்கின் பின் புறம்) வைத்து ஒரு ஆட்டுக்கு mammectomy செய்து கொண்டு இருந்தார், அவர் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து விட்டு அந்த ரத்தம் வடியுமிடத்தில் தயாராக வைத்திருந்த கல் உப்பை வைத்து அழுத்திகொண்டிருந்தார், அவர் அருகில் மற்றொரு கால்நடை மருத்துவ நண்பரான ஒரு சூடானி கவனித்துக்கொண்டு இருந்தார். நான் அருகில் சென்று நண்டப்பதை பார்த்து விட்டு மனதுக்குள்ளேயே "கடவுளே அவர் rigor mortis set ஆவதற்குள் சர்ஜரியை முடித்து விடவேண்டும்" என வேண்டிக்கொண்டேன், பின்னர் சூடானி நண்பரை அழைத்துக்கொண்டு அவரிடம் கொஞ்சம் கதை அளந்து விட்டு வரலாம் என எண்ணி அவருடைய பார்மசியை நோக்கி நடந்தேன். அந்த சுடானிக்கு அந்த எகிப்திய டாக்டர் ஏன் ரத்தம் வரும்போது உப்பை வைத்து அழுத்தினார், அதனால் என்ன பயன் என தெரிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருந்தார், என்னிடம் அது பற்றி கேட்டுக்கொண்டே இருந்தார், அந்த எகிப்து நாட்டு மருத்துவருக்கு தெரியும் இந்த ஆடு எப்படியும் செத்து விடும் என்று அதனால் செத்த பிறகு உப்பு கண்டம் போடுவதற்கு பதில் இப்போதே தொடக்கி விட்டார், இது ஒரு வகையான pickling (ஊறுகாய் போடுவது) என்று கூறினேன் . நண்பர்கள் உங்களுக்கு ஏதாவது இந்த சிகிச்சை பற்றி தெரிந்தால் தெளிவு படுத்தவும்.
கரையான்.
that is some picking allright.. yikes!!
பதிலளிநீக்குGujili
Hi,
பதிலளிநீக்குAwarukku retthatthai parthaal mayakkam warum.
BHAI.
Hi:
பதிலளிநீக்குI have a theory:
He wanted to start the process to make his Biriyani when the animal was alive.If you had waited a little longer he would have started taking out manja podi, malli thool etc from his bag!!! Paavum animals they get stuck with butchers sometimes!
GFK