வெள்ளி, மே 08, 2009

படிப்பை முடித்து வேலையில் சேரும்போது நமக்கெல்லாம் தெரியும் என்ற ஒரு சிறய கர்வத்துடனே கொஞ்ச நாட்களுக்கு இருப்போம், வாழ்க்கை சக்கரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கி பக்குவப்பட்டு போவோம். நான் செட்டிநாடு பண்ணையில் சேர்ந்த புதிதில் ஒரு குதிரைக்கு காலிக், நான் அந்த குதிரையை பரிசோதனை செய்து கொண்டு இருக்கும்போதே என்னுடைய hospital assistant விறு விறு வென 20 cc Novalgin, 20cc Buscopan and 10cc Avil சிரிங்கில் எடுத்து வைத்து விட்டான், மேலும் tube இல் கொடுப்பதற்காக Liquid paraffin, bloatosil எல்லாமும் தயார் செய்ய ஆரம்பித்து விட்டான், எனக்கு கடும் கோபம் வந்து விட்டது, அதெப்படி, நான் ஒரு படித்த டாக்டர் , நான் சொன்ன பிறகுதானே இதெல்லாம் தயார் செய்ய வேண்டும், அவனே எல்லாம் தெரிந்த மாதிரி எப்படி தயார் செய்யலாம், இப்படியெல்லாம் மனதில் நினைத்து கொண்டே அவனை கடிந்து கொண்டேன். அடுத்த முறை காலிக் வந்தால் நான் சொன்ன பிறகுதான் நீ எல்லா மருந்துகளையும் தயார் செய்ய வேண்டும் என instruction கொடுத்தேன்.அடுத்த முறை காலிக் வந்தபோது பல்ஸ், mucous membrane எல்லாம், பரிசோதித்து விட்டு "பத்து சிசி அவில், இருபது சிசி பஸ்கொபன், இருபது சிசி நோவல்ஜின் எடுத்து விட்டு , லிகிட் பாரபின் புலோடோசில் டியுப் தயார் செய்" என்று கூறினேன். "இதைத்தானே நானும் செய்தேன்" போன காலிக் வந்தப்ப இவுரு ஏன் அவ்வளவு கோவபட்டாரு என கண்டிப்பாக மனசுக்குள் நினைத்திருப்பான்.

கரையான்.

4 கருத்துகள்:

  1. Hi K,
    Atleast you said the names of drugs to your assistant.But, I had to say the colour of drugs to my assistants in Pollachi.
    BHAI.

    பதிலளிநீக்கு
  2. Hello Karayaan,
    Good to know that you have competent assistants. Is there an equivalent of Livestock inspectors in Saudi too?
    Gujili

    பதிலளிநீக்கு
  3. Hi Karaiyan:
    There is nothing to beat the confidence and brashness of youth! Like you said life smoothes all our rough edges.
    GFK

    பதிலளிநீக்கு
  4. yes there is a Diploma course for veterinary science, and also there is a veterinary college saudi. But the incident i mentioned happened in chettinad stud. The pin-pricks and insults continue to happen even now in our life, but now we are matured enough to take it in our strides....
    karaiyan.

    பதிலளிநீக்கு