குஜிலி அவங்க கல்லூரியில பெற்றோர் தொல்லை பற்றி எழுதி இருந்தார், நம்ம கல்லூரி நாட்களில் கடைசி ஆண்டோ அல்லது நான்காம் ஆண்டோ சரியாக நினைவில் இல்லை animal husbandary economics டாக்டர் திருநாவுக்கரசு எடுத்தார், final exam இல் நம் நண்பர் பல்லு ஜெயராமன் கேள்வித்தாள் கொடுத்தவுடன் அதை மேலு கீழும் திருப்பி பார்த்தார், பக்க வாட்டில் மற்றும் எந்தெந்த கோணத்தில் பார்க்க முடியுமோ எல்லா வகையிலும் பார்த்தார், ஆனால் அந்த கேள்வித்தாளில் அவர் படித்த பகுதியிலில் இருந்து ஒன்றும் கேட்கப்படவில்லையோ அல்லது அவர் எடுத்து வந்திருந்த பிட்டில் இருந்து எந்த பகுதியும் கேட்கபடவில்லையோ தெரியவில்லை, கோபமாக அவருக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துக்கொண்டு விறுவிறு வென்று வகுப்பை விட்டு வெளியேறி விட்டார். டாக்டர் திருநாவுக்கரசு மிகுந்த கோபம் அடைந்து விட்டார், அவன் எப்படி பாஸ் செய்து வெளியே போகிறான் என பார்த்து விடுகிறேன், இந்த பாடத்தில் அவன் எத்தனை வருஷம் ஆனாலும் பாஸ் செய்யவே முடியாது அவன் என கருவிக்கொண்டே இருந்தார். வெளியேறிய நண்பர் ஜெயராமன் பின்னர்தான் தன்னுடைய தவறை உணர்ந்தார், உடனே அவருடைய ஜாதியை சேர்ந்த பேராசிரியர் சுந்தரராசு (கோழி துறை) விடம் சென்று நடந்தவற்றை கூறி காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார், அவரும் கவலைப்படாதே டாக்டர் திருநாவுக்கரசும் நம்ம ஆளுதான் நான் பேசி சரி செய்து விடுகிறேன் என அவனுக்கு தேறுதல் கூறினார், டாக்டர் திருநாவுக்கரசு ஜாதியாவது மண்ணாவது அவனை தண்டிக்காமல் விடமாட்டேன் என கண்டிப்பாக கூறி விட்டார், விஷயம் பெரிதாவதை உணர்ந்த நண்பர் ஜெயராமன் parasitology professor டாக்டர் லலிதா ஜான் அவர்களிடம் சென்று அவனை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார், பின்னர் டாக்டர் லலிதா ஜான் கேட்டுக்கொண்டதால் அவனுக்கு re-test வைத்து பாஸ் போட்டு அனுப்பி வைத்தார். குஜிலி அவர்கள் இந்த மாதிரி links தொல்லைகள் இல்லையே என்று எண்ணி சந்தோஷ பட்டுக்கொண்டு இந்த மாதிரி D grade வாங்கும் மாணர்வகளை பார்க்கும் பொது கரையான் போன்ற நண்பர்களை மனதில் நினைத்து(அவங்கல்லாம் எங்க ஜாதி -D grade ஜாதி),உதவி செய்ய வேண்டி கொள்கிறேன்.
கரையான்.
Karaiyan:
பதிலளிநீக்குI second your request but I know that if gujili gave a D grade then that student must be really really really deserve it.
GFK
Dear Karayaan avargale,
பதிலளிநீக்குThis D grade was a huge act of mercy and to to give a C would have been unconsionable considering that one day this person could be your DOCTOR!! Imagine the terror if you see them at the hospital and you knew they didn't know their radius from their femur or their temporalis from their gastrocnemius!!! You are right.. at home - all the links helps out but here living in a sue-happy society you have to be extremely careful in being fair because they can drag you out mercilessly even with simple things like a grade. So one ought to be extremely careful and cannot rely on political influences.
GFK - thanks for the supportive comment
Gujili
Hi,
பதிலளிநீக்கு1.From Karaiyan's post,I realize that some of our waathiyaars gave grades according to their initials.[e-g]D grades for Karaiyan&Suresh,C for Aaaps,F for Anandaraj,anbalagan,Arumugam,their initial being P which stands in our language 'palam' or according to our Devanathan P =F.
2.Do you all remember that we all fought together to get Jahir Hussain's F grade changed into D?
Chappathi gave him D grade and it was put on the notice board.But,when Jahir went to register for 3rd year ,he was told that he has failed in LPM.So,we fought and got it corrected.
BHAI
Bhai gujili sonna vishayamellaam theriyaama(radius,blah,blah) namma kuppai kottalaiyaa, gujiliyoda students should be told that if they dont study well they will end up working in gulf countries.....if you tell them these sure they will study well(thalaikeezha ninnu thanni kudichchaavathu....)
பதிலளிநீக்குkaraiyan.
Karayan avargale,
பதிலளிநீக்குGood point!! I may have to try that in the future...
Gujili