வெள்ளி, மே 29, 2009

மாணவர்களின் கட்டுகதைகள்

எல்ல நாட்டிலும் இருப்பது போல் இந்த ஊரிலும் மாணவர்கள் பொய், மட்டும் கட்டு கதைகள் சொல்வது சகஜம். எங்கள் ஊரில் ஸ்ப்ரிங் செமஸ்டர் இல் அதிகமாக SNOW இருக்கும். 1 அடிக்கு மேல் SNOW இருந்தால் எங்கள் ஊரில் வகுப்புகளை CANCEL செய்து விடுவர். கடந்த செமஸ்டர் பெப்ரவரி மாதத்தில் அதிக SNOW இருந்ததால் காலை வகுப்புகளை மட்டும் CANCEL செய்தனர். நானும் என் கண் கண்ட தெய்வமும் (KKD) ஒரே கல்லூரியில் ஆசிரியர்கள இருப்பதால் அவ்வப்போது என் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் KKD இன் வகுப்பிலும் இருப்பார்கள். அன்றைக்கு KKD இன் காலை வகுப்பில் பரீட்சை. காலை வகுப்புகள் CANCEL செய்ததால் KKD பரீட்சையை மதியம் கொடுப்பதாக திட்டம் பண்ணியிருந்தார். KKD இன் வகுப்பிலும் என் வகுப்பிலும் இருந்த ஒரு மாணவி KKD இன் பரீட்சையை எழுதுவதற்கு சோம்பல் பட்டு எங்கள் தெருவில் இன்னு SNOW PLOUGH வரவில்லை, ஆகையால் என்னால் பரீட்சை எடுக்க முடியாது என்று பீலா விட்டு அவருக்கு E MAIL எழுதினாள். எங்கள் வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களின் vaguppu schedule எங்கள்ளுக்கு access இருப்பதால் KKD அவள் வகுப்பு schedule கண்டு என் வகுப்பிலும் அந்த மாணவி இருப்பதை கண்டு என்னிடம் - இந்த மாணவி இன்றைக்கு வகுப்பிற்கு வரமுடியாது என்று உனக்கும் E MAIL அனுபினாள்ள என்று வினவினார்? அந்த மாணவி என்னகு ஒரு E MAIL அனுப்பவில்லை என்று கூறினேன். அப்பொழுது KKD நிலைமையை சுதாரிதுகொண்டார். பின்னர் அன்றைக்கு மதியம் என் வகுப்பு அறையின் வழியை சென்று ஜன்னல் வழியாக பார்த்தால் பீலா உட்ட மாணவியை கண்டார். அந்த மாணவி அடுத்த நாள் அவரிடம் சென்று நேற்று SNOW அதிகமாக இருந்ததால் நான் வகுப்பிற்கு வரவில்லை என்று நன்றாக பீலா விட்டாள். உடனே KKD அவளிடம் நீ என் இவ்வாறு பொய் சொல்லுகிறாய் நான் உன்னை நேற்று வேறு வகுப்பில் உட்கர்ந்திருந்தடை பார்த்தேனே என்று வினவினார். உடனே அந்த மாணவி KKD இடம் - மதியம் போல் என் boy friend எனக்கு அவர் வாகனத்தில் சவாரி கொடுத்தார் என்று மேலும் பீலா விட்டால்! KKD மிக்க கோபம் அடைந்து அவழுக்கு பரீட்சையில் முட்டை கொடுத்துவிட்டார்.. நமது கால் நடை கல்லூரி நாட்களில் உட்ட பீலாக்கள் இப்போது மெதுவாக என் ஞாயபகத்திற்கு வருகிறது.
குஜிலி

செவ்வாய், மே 26, 2009

எங்களுடைய ரைசிங் இஸ்டபிளில் கொஞ்சம் குதிரைகளுக்கு கேள்டிங் மற்றும் கஸ்லிக்க் செய்ய வேண்டி இருந்ததால் அங்கு சென்று விட்டு பணி முடிந்த வுடன் அந்த பகுதியில் நான் ஏற்கனவே வேலை செய்தபோது அறிமுகமான என்னுடைய பழைய நண்பர்களை சந்திக்கலாம் என சென்றேன். அப்போது என் நண்பர் எகிப்து நாட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் அவருடைய open-air surgical theatre - ல் (அதுதான் பிக் அப் டிரக்கின் பின் புறம்) வைத்து ஒரு ஆட்டுக்கு mammectomy செய்து கொண்டு இருந்தார், அவர் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து விட்டு அந்த ரத்தம் வடியுமிடத்தில் தயாராக வைத்திருந்த கல் உப்பை வைத்து அழுத்திகொண்டிருந்தார், அவர் அருகில் மற்றொரு கால்நடை மருத்துவ நண்பரான ஒரு சூடானி கவனித்துக்கொண்டு இருந்தார். நான் அருகில் சென்று நண்டப்பதை பார்த்து விட்டு மனதுக்குள்ளேயே "கடவுளே அவர் rigor mortis set ஆவதற்குள் சர்ஜரியை முடித்து விடவேண்டும்" என வேண்டிக்கொண்டேன், பின்னர் சூடானி நண்பரை அழைத்துக்கொண்டு அவரிடம் கொஞ்சம் கதை அளந்து விட்டு வரலாம் என எண்ணி அவருடைய பார்மசியை நோக்கி நடந்தேன். அந்த சுடானிக்கு அந்த எகிப்திய டாக்டர் ஏன் ரத்தம் வரும்போது உப்பை வைத்து அழுத்தினார், அதனால் என்ன பயன் என தெரிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருந்தார், என்னிடம் அது பற்றி கேட்டுக்கொண்டே இருந்தார், அந்த எகிப்து நாட்டு மருத்துவருக்கு தெரியும் இந்த ஆடு எப்படியும் செத்து விடும் என்று அதனால் செத்த பிறகு உப்பு கண்டம் போடுவதற்கு பதில் இப்போதே தொடக்கி விட்டார், இது ஒரு வகையான pickling (ஊறுகாய் போடுவது) என்று கூறினேன் . நண்பர்கள் உங்களுக்கு ஏதாவது இந்த சிகிச்சை பற்றி தெரிந்தால் தெளிவு படுத்தவும்.
கரையான்.

செவ்வாய், மே 19, 2009

நண்பர்களே நண்பிகளே
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் நம் வகுப்பின் get-to-gether நடைபெற உள்ளது, இடம் அனேகமாக Yercaud அல்லது Pondicherry ஆக இருக்கும், அனைவரும் குடும்பத்துடன் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அனைத்து ஏற்பாடுகளும் நண்பர்கள் SKB மற்றும் Kumaravel இணைந்து செய்ய இருக்கின்றார்கள்.(கொசுவாயனிடம் கெட்ட விலாசங்கள் மற்றும் தொலை பேசி எண் களை அவர் இதுவரை தர வில்லை.)
கரையான்.

வெள்ளி, மே 15, 2009

When I read Karaiyan's point about life and maturity, my thoughts flew back to Gujili and my behavior in first year of College. We both were only 16 years old and of course thought we were all grown up and mature to be in College.!!
This incident that I am going to narrate happened in Physiology lab. We had to Urine analysis and of course everybody in our blog knows what samples we used. After much giggling and discussion between the two of us we managed to get a sample and started our experiments. Then I have no clue what possessed us but we decided to chase each other carrying the test tubes around the lab!!
A PG student was supervising us and was extremely shocked at our behavior and promptly sent us off to the professor's office.(as usual can't remember who it was,gujili might help here) And we got yelled at and thrown out of the lab. We of course continued laughing and giggling all the way to the canteen!!
Now my question is, how will gujili's students react if they got to know about this story of their strict and mature professor!!!!
GFK

வியாழன், மே 14, 2009

குஜிலி அவங்க கல்லூரியில பெற்றோர் தொல்லை பற்றி எழுதி இருந்தார், நம்ம கல்லூரி நாட்களில் கடைசி ஆண்டோ அல்லது நான்காம் ஆண்டோ சரியாக நினைவில் இல்லை animal husbandary economics டாக்டர் திருநாவுக்கரசு எடுத்தார், final exam இல் நம் நண்பர் பல்லு ஜெயராமன் கேள்வித்தாள் கொடுத்தவுடன் அதை மேலு கீழும் திருப்பி பார்த்தார், பக்க வாட்டில் மற்றும் எந்தெந்த கோணத்தில் பார்க்க முடியுமோ எல்லா வகையிலும் பார்த்தார், ஆனால் அந்த கேள்வித்தாளில் அவர் படித்த பகுதியிலில் இருந்து ஒன்றும் கேட்கப்படவில்லையோ அல்லது அவர் எடுத்து வந்திருந்த பிட்டில் இருந்து எந்த பகுதியும் கேட்கபடவில்லையோ தெரியவில்லை, கோபமாக அவருக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துக்கொண்டு விறுவிறு வென்று வகுப்பை விட்டு வெளியேறி விட்டார். டாக்டர் திருநாவுக்கரசு மிகுந்த கோபம் அடைந்து விட்டார், அவன் எப்படி பாஸ் செய்து வெளியே போகிறான் என பார்த்து விடுகிறேன், இந்த பாடத்தில் அவன் எத்தனை வருஷம் ஆனாலும் பாஸ் செய்யவே முடியாது அவன் என கருவிக்கொண்டே இருந்தார். வெளியேறிய நண்பர் ஜெயராமன் பின்னர்தான் தன்னுடைய தவறை உணர்ந்தார், உடனே அவருடைய ஜாதியை சேர்ந்த பேராசிரியர் சுந்தரராசு (கோழி துறை) விடம் சென்று நடந்தவற்றை கூறி காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார், அவரும் கவலைப்படாதே டாக்டர் திருநாவுக்கரசும் நம்ம ஆளுதான் நான் பேசி சரி செய்து விடுகிறேன் என அவனுக்கு தேறுதல் கூறினார், டாக்டர் திருநாவுக்கரசு ஜாதியாவது மண்ணாவது அவனை தண்டிக்காமல் விடமாட்டேன் என கண்டிப்பாக கூறி விட்டார், விஷயம் பெரிதாவதை உணர்ந்த நண்பர் ஜெயராமன் parasitology professor டாக்டர் லலிதா ஜான் அவர்களிடம் சென்று அவனை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார், பின்னர் டாக்டர் லலிதா ஜான் கேட்டுக்கொண்டதால் அவனுக்கு re-test வைத்து பாஸ் போட்டு அனுப்பி வைத்தார். குஜிலி அவர்கள் இந்த மாதிரி links தொல்லைகள் இல்லையே என்று எண்ணி சந்தோஷ பட்டுக்கொண்டு இந்த மாதிரி D grade வாங்கும் மாணர்வகளை பார்க்கும் பொது கரையான் போன்ற நண்பர்களை மனதில் நினைத்து(அவங்கல்லாம் எங்க ஜாதி -D grade ஜாதி),உதவி செய்ய வேண்டி கொள்கிறேன்.
கரையான்.

மாணவர்களுடைய பெற்றோரின் தொந்தரவுகள்.

கடந்த semesteril நான் நான்கு விதமான course teach பண்ணினேன். ஒரு course anatomy and physiology (A&P). மாணவர்கள் A&P இல் C க்ரடே வாங்கினால் தான் அவர்களுடைய வெவ்வேறு program இற்குள் நுழைய முடியும். இல்லாவிட்டால் அந்த ப்ரோக்ராமில் இருந்து அந்த மாணவர்களை நீக்கிவிடுவார்கள். நான் பரீட்சைகள் யாவற்றையும் திருத்தி முடித்த பின்னர் ஒவ்வொரு செமஸ்டர் முடிவில் D grade வாங்குகிற சில மாணவர்கள் வந்து எப்படியாவது C grade வாங்க முடியுமா என்று முறை போடுவார்கள். C grade இற்கும் D grade இற்கும் கிட்டதட்ட 30 மார்குகள் வித்தியாசம் உண்டு. ஏதோ ஒன்று அல்லது இரண்டு மார்குகள் என்றால் மனம் இறங்கி கொடுத்துவிடுவேன், ஆனால் 30 மார்குகள் கூடவேண்டும் என்றால் முடியாது என்று ஏன் மனசாட்சிக்கு கீள்படிந்துவிடுவேன். இந்த செமஸ்டர் முடிவிலும் ஒரு மனைவி ஏன் ஆபீஸ் இல் வந்து முறையிட்டால். அவள் வாங்கினது D grade ஆனால் C கொடுக்க வேண்டும் என்று கெஞ்சினாள். அவளுடய grade C ஆவதற்கு நான் 30 மார்க் கூடவேண்டும். என்னால் இயலாது, இந்த மாதிரி செய்வது மற்ற மாணவர்களுக்கு நியாயம் இல்லை என்றும் சொல்லி அனுபிவிட்டேன். கடவுளின் கருணையால் அவள் D grade வாங்கிநேது பெரிய காரியம். மேலும் நான் grade கொடுக்கவில்லை அவழுடைய முயற்சியால் அவள் அதை வாங்கினால் என்றெல்லாம் சொல்லி அவள்ளுக்கு விளக்கினேன். அவள் தன் அம்மாவிடம் சொல்லியிருப்பள் போல. ஏனெனில் அவளுடைய தாய் எனனக்கு 4 போன் MESSAGES விட்டிருந்தால் . மேலும் காலேஜ் DEAN, பல்கலை கழகத்தின் PRESIDENT மற்றும் LEARNING COORDINATOR எல்லோரையும் கூப்பிட்டு இந்த ஆசிரியர் ஏன் மகளுக்கு C grade கொடுக்க மாட்டேன் எங்கிரல் என்று ஒப்பாரி வைத்து தொலை பேசியில் எல்லோரிடமும் பெசியுள்ளல். நல்ல வேழை DEAN, PRESIDENT யாவரும் asiriyaridam நாங்கள் grade maatra சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டனர். நல்ல வேழை என்று கடவுள்களுக்கு நன்றி சொல்லி போய்விட்டேன். எங்கள் கல்லூரியில் அவபோது தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளுக்கு குறிப்பன grade வேண்டும் என்று தொந்தரவு seyvadhu சகஜம். நம்ம நாட்களில் நமது பெற்றோர்கள் ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடவென்று நமக்கு போதித்து வழர்ததினால் இந்தா மாதிரி பெற்றோர் ஆசிரியர்களை கூப்பிட்டு தொந்தரவு செய்வது நமக்கு பேஜார்..
Gujili

Construction வேலை and self-sufficiency

அன்புக்குரிய நண்பர்களே, எங்கள் ஸ்ப்ரிங் செமஸ்டர் முடிந்து விட்டது. ஆகையால் கோடி கால விடுமுறை ஆரம்பித்து விட்டது. திங்கள் கிழமை மாணவர்களின் GRADES submit செய்து முடித்துவிட்டேன். இவ்வளவு நாட்களும் பரீட்சைகளும், திருத்துவதிலும் பிஸி ஆக இருந்ததால் ப்லோக் செய்யவில்லை, மன்னிக்கவும். இன்னும் மூன்று மாதத்திற்கு விடுமுறை ஆவதால் நிம்மதி. ஆனால் ஒரு மாதிரியா RELAX பண்ண இயலவில்லை, ஏனெனில் எதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது. எங்கள் வீட்டில் எப்போதும் REMODELING construction projects நடந்து கொண்டே இருக்கிறது. நமது நாட்டில் ஆட்களை வைத்து வேலை வாங்கி கொள்ளலாம், ஆனால் இங்கு எல்ல வேலையும் நாம் தான் செய்ய வேண்டும். ஆட்கள் வைத்து வேலை செய்வதற்கு கொள்ள காசு தேவை... மேலரை ஒன்றை முற்றுமாக DEMOLITION செய்து அதை புதுசாக REMODEL செய்கிறோம். சுவர் மற்றும் CEILING யாவையும் இடித்து PLASTER எல்லாவற்றையும் சுத்தம் செய்து மர SLATS எல்லாவற்றையும் போன வாரம் எடுத்து விட்டோம். எங்கள் வீடு ஏறக்குறைய 80 வருஷதிற்கு முன்னர் kattapattadhu. வீடு முழுவதிலும் பழைய கால மர வேலை ஒவொரு அறையிலும் உள்ளது. நம்ம ஊரில் பழைய வீடெல்லாம் வாங்க மாட்டோம் , ஆனால் இங்கு அந்த மாதிரி ஆட்சேபனை ஒன்றும் கிடையாது. பழைய வீடு என்பதற்கு பதிலாக "ANTIQUE" என்று சொல்லிகொள்ளுவார்கள்.. அதை REMODEL பண்ணி பாடுபடுவது பெரிய தலைவலி. இந்தியாவில் இருக்கும் போது சுவரோ CEILING, drywall, PLASTER என்று ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் இப்போதோ இதை எல்லாம் கற்று கொள்ள ஆரம்பித்து விட்டேன். இந்த ஊரில் "self-sufficiency" மிக்க இன்றியமையாதது!
gujili

வெள்ளி, மே 08, 2009

படிப்பை முடித்து வேலையில் சேரும்போது நமக்கெல்லாம் தெரியும் என்ற ஒரு சிறய கர்வத்துடனே கொஞ்ச நாட்களுக்கு இருப்போம், வாழ்க்கை சக்கரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கி பக்குவப்பட்டு போவோம். நான் செட்டிநாடு பண்ணையில் சேர்ந்த புதிதில் ஒரு குதிரைக்கு காலிக், நான் அந்த குதிரையை பரிசோதனை செய்து கொண்டு இருக்கும்போதே என்னுடைய hospital assistant விறு விறு வென 20 cc Novalgin, 20cc Buscopan and 10cc Avil சிரிங்கில் எடுத்து வைத்து விட்டான், மேலும் tube இல் கொடுப்பதற்காக Liquid paraffin, bloatosil எல்லாமும் தயார் செய்ய ஆரம்பித்து விட்டான், எனக்கு கடும் கோபம் வந்து விட்டது, அதெப்படி, நான் ஒரு படித்த டாக்டர் , நான் சொன்ன பிறகுதானே இதெல்லாம் தயார் செய்ய வேண்டும், அவனே எல்லாம் தெரிந்த மாதிரி எப்படி தயார் செய்யலாம், இப்படியெல்லாம் மனதில் நினைத்து கொண்டே அவனை கடிந்து கொண்டேன். அடுத்த முறை காலிக் வந்தால் நான் சொன்ன பிறகுதான் நீ எல்லா மருந்துகளையும் தயார் செய்ய வேண்டும் என instruction கொடுத்தேன்.அடுத்த முறை காலிக் வந்தபோது பல்ஸ், mucous membrane எல்லாம், பரிசோதித்து விட்டு "பத்து சிசி அவில், இருபது சிசி பஸ்கொபன், இருபது சிசி நோவல்ஜின் எடுத்து விட்டு , லிகிட் பாரபின் புலோடோசில் டியுப் தயார் செய்" என்று கூறினேன். "இதைத்தானே நானும் செய்தேன்" போன காலிக் வந்தப்ப இவுரு ஏன் அவ்வளவு கோவபட்டாரு என கண்டிப்பாக மனசுக்குள் நினைத்திருப்பான்.

கரையான்.