செவ்வாய், மார்ச் 31, 2009

நண்பர் பாய் அவர்கள் வரும் தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்து கவிதை
ஒரு அடி ஸ்கேலில் உள்ள அனைத்து பதில்களும் கேள்வியாய் வரட்டும்
திருத்துபவர் டாடிஆகி கிரிக்கட்டுபற்றிய செய்திக்கும் மார்க்கு அள்ளி கொட்டட்டும்
அந்துவன் போல் நண்பர் கிடைத்து பிட்டுகளை ஜெராக்ஸ் செய்து கொடுக்கட்டும்
சப்பாதிபோல் ஆசிரியர் கிடைத்து கேள்வித்தாள் அவுட் செய்யட்டும்
மேலும் பல வெற்றிகளை குவித்து "A" கிரேடு களாக வாங்கி குவிக்கட்டும்.
கரையான்.

பாய் படும் பாடு

நண்பர்/நண்பிகளே,

நான் எங்கு சென்றாலும் ,அரசாங்கங்கள் ,விட மாட்டேன்கின்றன.அதுவும் ஒரு நாட்டில் இருந்து, கால்நடை நோய்களை விரட்ட வேண்டுமேன்றால்,என்னை தான் கெஞ்சுகிறார்கள்.தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்த உடன் "றிந்டெர்பெஸ்த்" நோயை விரட்டினேன்.தற்போது கத்தார் அரசு ,அதே நோயை இங்கு விரட்ட கோரியுள்ளார்கள்.தினமும் செம வேலை.சரியான அலுப்பு.ஆதலால் ,ப்லொக்கில் வரமுடியவில்லை.எப்போது முடியுமோ தெரியவில்லை.இதற்கிடையில் M.B.A. முதல் வருட தேர்வுக்கு படித்து வருகிறேன்.[Examiner களாக நம் வெட் பல்கலைக்கழக வாத்தியார்கள் வந்தால் ,படிக்க வேண்டியது இல்லை. இம் .என்ன செய்ய!].

பாய்.

புதன், மார்ச் 25, 2009

நாயூறான் தண்ணியை போட்டு விட்டு செய்யும் தமாசுகளை பெரும்பாலும் தூர நின்று தான் நாங்கள் வேடிக்கை பார்ப்போம், சில சமயங்களில் நம் நண்பர்களில் சிலர் அவனை சமாதானம் செய்வதாக நினைத்து வம்பில் மாட்டிகொள்வதுண்டு. அப்படி ஒரு முறை நம் நண்பர் எம்பிரியோ செல்வராசு, நாயூரானிடம் மாட்டிக்கொண்டு மரண அவஸ்தை பட்டது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. ஒரு முறை நாயூறான் காசு இல்லாத காரணத்தால் பக்கத்தில் உள்ள நாவல் ஆஸ்பிடல் ரோட்டில் கிடைக்கும் பாக்கெட் சரக்கை அடித்து விட்டு, ஓவராகி விட்டது. திடீர் என்று ஞானோதயம் பிறந்து, தாம் தவறு செய்து விட்டோமே என எண்ணி வருந்தி, இனியும் நான் உயிர் வாழ்வது தவறு ஆகவே தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என அறிவித்தார், பின்னர் விறு விறு வென்று நம் கல்லூரி ஆஸ்டலில் நியூ பிளாக், sun shade மேலே ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எல்லோரையும் மிரட்டிகொண்டு இருந்தார். நம் நண்பர்கள் குழாம் அவன் குதிப்பதை live ஆக பார்க்கும் ஆசையில் கீழே வரிசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தார்கள், அப்போது நம் நண்பர் எம்பிரியோ செல்வராசு வெளியில் சென்று விட்டு வந்தவர், பதறிப்போய், நம் நண்பர்களை பார்த்து திட்டி விட்டு, நாயூரானை காப்பாற்ற விடு விடு வென்று மாடியில் ஏறி, நாயூரானிடம் பக்குவமாக எடுத்து சொல்லி அவனை கீழே இறக்க முயற்சி செய்தார், அந்த முயற்ச்சியில் மாடியில் நின்று கொண்டு அவர் தன்னுடைய கையை கொடுக்க, நாயூறான் செல்வராசுவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு மேலே எழ முயற்சி செய்தான்,நாயூரன் செல்வராசுவை விட எடை அதிகம், செல்வராசுவால் நாயூரானை மேலே தூக்க முடியாது, அவரால் முடியாததால் அவரும் அவனுடம் சேர்ந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவரும் கத்த தொடங் கி விட்டார் (நாயூறான் துணைக்கு அவனையும் அழைத்து செல்லாலாம் என நினைத்தானோ என்னவோ), பின்னர் ஒரு வழியாக செல்வராசுவின் கையை விட்டு விட்டு அவனாகவே ஏறி வந்து சேர்ந்தான். மற்ற நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நண்பர் செல்வராசு விடம் சென்று" நாங்கெல்லாம் என்ன கேணையங்களா, நீயும் நின்று வேடிக்கை பாத்துட்டு போவது தானே, அதை விட்டு விட்டு வீராப்பா பேசுனே" என நக்கல் அடித்து விட்டு சென்றார்கள்.
கரையான்.

என்ன ஆனார்கள்?

1. பிய்சரில் [Pfizer] பைசா இல்லையா?
2. குவைத்தில் குழப்பமா ?
3. மலேசியாவில் மயக்கமா ?
விடைக்காக காத்திருக்கும் ,
பாய்.

ஞாயிறு, மார்ச் 22, 2009

நம் கல்லூரி ஆடிடோரியத்தில் ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது, அதற்கு தலைமை டாக்டர் ரிச்சர்டு மாசிலாமணி, அவர் மேடையில் வந்தமர்ந்தவுடன் நம் வகுப்பு தோழர்கள் சிலர் விசில் அடித்தார்கள், இதை பார்த்த அவர் டென்சன் ஆகி விட்டார்,(முகம் சிவந்து அல்லது கருத்து விட்டார் என்று சொல்லவே முடியாது-இந்த இரண்டுமே அவருக்கு பொருந்தாது),உடனே மைக்கை பிடித்த அவர் கிட்ட தட்ட அரை மணி நேரம் நம் கழுத்தில் ரத்தம் வரும் வரை கத்தி போட்டு பலவிதமாக அறிவுரை கூறினார், அவரின் கோபத்தை பார்த்து auditorium நிசப்தமாகி விட்டது. ஒரு வழியாக அவர் கோபம் தணிந்து , அவரிடமிருந்த அறிவுரைகள் எல்லாம் காலியாகிய வுடன் இனியாவது திருந்தி மாணவர்கள் போல் நடந்து கொள்ளுங்கள், ரவுடிகள் போல் நடக்காதீர்கள் என்று கூறி முடித்தார், அவர் முடிக்கவும் நம் நண்பர்கள் திரும்பவும் விசில் அடிக்க அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று பின்னர் நொந்து நூடுல்ஸ் ஆகி எக்கேடோ கேட்டுப்போங்கள் என்று கூறி அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.
கரையான்.

2008 பிற்பகுதியில் பாய்











சனி, மார்ச் 21, 2009

நம் கல்லூரியில் நானும் நாயூரானும் படித்தோமோ இல்லையோ மற்ற விஷயங்களில் நன்றாகவே அனுபவித்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். நம் கல்லூரி inter-class games பல முறை எதோ இந்தியா -பாகிஸ்தான் போர் போன்ற சூழலை உருவாக்கும், அதுவும் volley-ball போட்டியில் நம் ஜுனியர் (immediate juniors) களுடன் மோதும் பொது பெரிய போர் களம் போல் காட்சி அளிக்கும். ஒரு முறை அந்த மாதிரியான போட்டியில் மிகப்போராடி நம் வகுப்பு வெற்றி பெற்று விட்டோம், அதை கொண்டாடும் விதமாக நாயூறான் ஆர்வ மிகுதியில் நம் வகுப்பு நண்பர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என வசூல் செய்து ஒரு பீர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து விட்டான், அந்த பாட்டிலை திறந்து நுரை வருமாறு குலுக்கி எல்லார் மேலும் பீச்சி அடித்து கொண்டாடினான், அதை பார்த்து விட்ட நம் Physical Director வேகமாக ஓடி வந்து மிக கோபமாக கத்த ஆரம்பித்தார் மேலும் வழக்கம் போல் அவருடைய தங்லிஷில் எங்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார்" see you know how much கஷ்டப்பட்டு your father and mother படிக்க வைக்கிறாங்க you people don't understand their கஷ்டம். you people are drinking in the வேர்வை சிந்தி உழைத்த பைசா." இப்படியாக அவர் கூறி முடித்து விட்டு இனிமேல் அப்படியெல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன் என அவரே அவருக்கு உறுதி கூறிவிட்டு திரும்பி செல்ல முனைந்தார், அப்போது நயூறான் அவன் கையில் இருந்த பீர் பாட்டிலை parasitology department முன் இருந்த சுவற்றில் வேகமாக அடித்து உடைத்தான், Physical Director முகம் சிவந்து, உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, என்று கூறி விட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.

கரையான்

வெள்ளி, மார்ச் 20, 2009




புழுதிப்புயல் இங்கு அடிக்கடி நாங்கள் அனுபவிக்கும் ஒன்று . குதிரையில் பணிபுரிவதால் பெரும்பாலான பணி நேரம் திறந்த வெளியில்தான் இருக்க வேண்டிய கட்டாயம். நான் இங்கு பணிக்கு வந்த புதிதில் தூசு ஒவ்வாமை (dust allergy) இருந்தது, தொடர்ந்து தூசியிலேய இருந்து விட்டதால் இப்போது அந்த பிரச்னை ஏற்படுவதில்லை. இந்த முறை ஏற்பட்ட புயல் கொஞ்சம் பலமாகவே இருந்தது, இருபதடி தூரத்தில் இருக்கும் பொருட்கள் கூட சரியாக தெரிய வில்லை.என்னுடைய கவலை, paddock இல் இருக்கும் yearlings கண் மண் தெரியாமல் ஓடி கை கால் ஒடிந்து விடுமோ என்பதுதான். இரு வருடங்களுக்கு முன்னர் என் நண்பர் பணி புரியும் பண்ணையில் இந்த மாதிரி புழுதி புயலின் பொது paddock ல் இருந்த ஐந்து yearlings கண் மண் தெரியாமல் ஓடி fencing post இருப்பது தெரியாமல் அதில் மோதி கால்கள், தலை முதலியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டு euthanise செய்யப்பட்டன., அந்த நினைப்பு எனக்கு உண்டாகி கொஞ்சம் கவலை அளிப்பதாக இருந்தது. மேலே உள்ள புகைப்படங்கள் இந்த முறை எடுத்தது இல்லை, நான் பணி புரிந்த பழைய கிளினிக்கில் எடுத்தது. நான் பணிபுரிந்து வீட்ட்க்கு செல்லும் பொது, எதோ கட்டடம் கட்டும் தொழிலில் இருந்து வரும் தொழிலாளி போல் காட்சி அளிப்பதாக என் குழந்தைகள் கிண்டலடித்தனர் , அந்த அளவுக்கு என் மேல் தூசு ஒட்டியிருந்தது.
கரையான்.

வியாழன், மார்ச் 19, 2009

இன்னும் சில படங்கள் from ஜூன் 08




நான் ஜூன் மாடத்தில் இந்தியா செல்லும் போது எடுத்த படங்களை போஸ்ட் செய்திருக்கிறேன். போட்டு சித்ரா பாபு மற்றும் கௌரி அவர்களை MVC இல் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது
- குஜிலி








இன்னும் சில படங்கள் - Gujili










திங்கள், மார்ச் 16, 2009

என்னுடைய இன்டர்நெட் கனக்ஷன் கடந்த சில நாட்களாக பழுதடைந்து விட்டதால் என்னால் எழுத முடியாததற்கு வருத்தம் தெரிவித்து கொண்டு தொடருவோம்.
நாயூறான் எதற்கு தகராறு செய்கிறோம் என்பதே தெரியாமல் சில சமயங்களில் தகராறு செய்து விட்டு வம்பில் மாட்டிக்கொள்வான். மெஸ்ஸில் ஒரு முறை அவனுக்கு கொடுக்கப்பட்ட உணவு சரியாக இல்லை என்று மெஸ் செகரெட்டரி (அவரும் நம் வகுப்பு தோழர்தான்) இடம் சென்று புகார் செய்தான், அவர் என்ன மன நிலையில் இருந்தாரோ என்னவோ, சாப்பாடு அப்படிதான் இருக்கும் இஷ்டம் இருந்தால் சாப்பிடு இல்லை என்றால் போ என கூற, வாக்குவாதம் முற்றி, நாயூரன் அவரை அடிக்க முயல அவர் தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்து கையில் hair line fracture ஆகி விட்டது, உடனே அவர் கையில் பெரிய கட்டு போட்டுக்கொண்டு வந்து அப்போதைய கல்லூரி முதல்வர் டாக்டர் ரிச்சர்டு மாசிலா மணி இடம் புகார் செய்து விட்டார், நாயூரன் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்பது நிச்சயமாகி விட்டது(அனேகமாக சில நாட்கள் suspend செய்யப்படுவார் என்ற நிலை). நாயூரன் அன்று இரவே அவன் சொந்த ஊர் MLA வை சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சென்று சந்தித்து நடந்தவற்றை எடுத்து கூறி நடவடிக்கை எடுக்காமல் செய்ய வேண்டி கொண்டார் அவர் உடனே அப்போதைய தி.மு.க அமைச்சரிடம் கூறி அவரை விட்டே தொலைபேசி மூலம் கல்லூரி முதல்வரிடம் பேச சொல்லி விட்டார். பிறகு கண் துடைப்பாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டது. அது நடந்து சில நாட்களில் டாக்டர் ரிச்சர்டு மாசிலாமணி நம் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார், அவருக்கு மாணவர்களின் சார்பில் முதல் வாழ்த்து சொன்னது நம் நண்பர் நாயுராந்தான். அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து சொல்லும்போது அவர் அவனிடம்" தம்பி நீ போயி பாத்த MLA வையும் எனக்கு தெரியும், மந்திரியையும் எனக்கு தெரியும், இனியாவது, இந்த மாதிரி ரவுடி தனம் செய்யாமல் ஒழுங்காக படிச்சு முடிக்கிற வழியை பாரு" என்று கூறினார்.இந்த அனைத்து பிரச்சனைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது யார் என்றால் இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாத Dr.Paulraj (நம் co-ordinator department -ல் இருந்த ஒரு Associate Professor), அவரை இந்த பிரச்சினையை விசாரிக்க கல்லூரி முதல்வர் நியமித்திருந்தார், அவர் விசாரணைக்கு அழைக்கும் ஒவ்வொரு முறையும், நாயூறான் கண்டு கொள்ளாமல் இருக்க ஏன் விசாரணையை முடிக்கவில்லை என்று அவருக்கு கல்லூரி முதல்வர் memo கொடுத்து விட்டார், ஓய்வு பெரும் நேரத்தில் எனக்கு மெமோ வாங்கி கொடுத்து விட்டாயே என்று அவர் ஒரு பக்கம் அவனிடம் புலம்பி கொண்டு இருந்தார்.
கரையான்.

வெள்ளி, மார்ச் 13, 2009

NCC நாட்கள்

கரையானின் கதிரேசன் கதைகளை வாசித்ததும் NCC நாட்கள் அனுபவங்கள் உடனே என் நினைவுக்கு வந்தது. MVC இல் இரண்டாம் வருஷம் நான் NCC இல் சேர்ந்தேன். நான், மற்றும் gfk, தங்கநிர்மலாஎல்லோரும் CAVALRY UNIT இல் இருந்தோம். ஆகையால் குதிரை சவ்வாரி செய்வோம். எங்கள் CAVALRY UNIT இல் ஒரு malaysian பெண்ணும் இருந்தாள். அவள் நமக்கு ஒரு வருஷம் சீனியர். அவள் பேர் கிம் என்று நினைக்கிறேன். gfk இன் குதிரை பெயர் ungad. எல்ல குதிரைகளும் ஒரு திசையில் சென்றால் ungad எப்போதும் எதிர் திசையில் செல்லும். வாரத்தில் இரண்டு முறை மீட் science department பக்கமுள்ள field ஐ சுத்தி சவாரி செய்தோம். ஒரு முறை சவாரி செய்யும் போது கிம் உடைய குதிரை ருமானி ஓட ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் trot செய்து கொண்டிருக்கும் போது ருமானி gallop செய்ய ஆரம்பித்து பின்னர் ஓட ஆரம்பித்து விட்டது. கிம் உடனே லுமாணி no! லுமாணி no! (அவள்ளுக்கு ஆங்கில எழுது r சொல்ல இயலாது ருமானி என்று சொல்வதுர்க பதிலாக லுமாணி என்பாள்) என்று கூக்குரல் விட்டால். சிறிது நேரம் பிறகு அவள் சத்தம் கேட்கவில்லை, ருமானி அவளை காலேஜ் சுத்தி எங்கோ சென்று விட்டது, அவள் அந்த குதிரை கழுத்தை கட்டிக்கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தால் ஆணால் குதிரையில் இருந்து விழவில்லை. கடைசியாக ருமானி அவளை அங்கும் இங்கும் சுத்தி பிறகு field பக்கமாக கூட்டி கொண்டு வந்தது. கடைசியாக ஒரு வட நாட்டு NCC officer ருமனியை பிடித்து நிறுத்தினார். டும் mugam சிவப்பாகி நடுங்கினாள் . இந்த அனுபவத்திற்கும் பின்னும் அவள் குதிரை சவாரி செய்வாள். ருமானி வேறு சில மக்களையும் அவ்வபோது கிழே தள்ளிவிடும்.. NCC நாட்கள் வேறு சில நினைவுகளையும் கொண்டு வருகிறது. ஒவ்வொரு NCC மீட்டிங் இருக்கும் போது ஓசி சாப்பாடு கிடைக்கும் - Gujili

செவ்வாய், மார்ச் 10, 2009

yaaah

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நரசிம்மனின் dairy science வகுப்பில் மும்முரமாக கண்ணை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தோம் பெரும்பாலான நண்பர்கள், சிலர் பின் வரிசையில் நிம்மதியாக படுத்து தூங்கி கொண்டு இருந்தார்கள். அப்போது Dr. கதிரேசன் அவர்கள் NCC யில் இருந்த நண்பர்கள் தங்களின் உடை மற்றும் பூட்ஸ் திரும்ப ஒப்படைக்க வில்லை என அது பற்றி விசாரிக்க வந்தார். அவர் வந்து கிட்ட தட்ட பத்து நிமிடம் அர்ச்சனை செய்தார், யு பீபில் ஆர் நாட் ரிடர்நிங் த பூட்ஸ் அண்ட் யுனிபார்ம், ஐ ஆம் டெல்லிங் மேனி டைம்ஸ் யு ஆர் எக்ச்பரிமேண்டிங் மை பேஷன்ஸ் (பொறுமையை சோதிக்கிறீர்கள்), யு திங்க் யு பீபில் ஆர் பிக் , என்று கூறி நிறுத்தி விட்டு "என்ன நீங்கெல்லாம் அவ்வளவு பெரிய ஆட்களா" என தமிழிலும் கேட்டார்,உடனே பின்னால் படுத்திருந்த நம் நண்பர்களில் ஒருவர்"yaah" என கூறியதும், அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்து விட்டது. அவருடைய கோபம் மேலும் பல மடங்கு அதிகரித்து விட்டது,"ஹூ இஸ் தட் .... ஹூ இஸ் தட் " என கேட்டுக்கொண்டே gallery ஏற ஆரம்பித்து விட்டார், உட்கார்ந்திருந்த நாங்களெல்லாம் மிகுந்த டென்சன் ஆகி விட்டோம், நல்ல வேலையாக சில படிகள் மேலே ஏறியவர், என்ன நினைத்தாரோ திரும்பி சென்று விட்டார்.

கரையான்.

உயிர்க் கப்பல்

பரந்தமணற் பெருங்கடலில்பயணம் செல்லும் கப்பல் -
இதுபக்குவமாய் உயர் முதுகில்பாரம் சுமக்கும் கப்பல்!
வறட்சி மிகு நீரிலாவனத்தில்போகுங் கப்பல் -
இதுவாலும் முதுகும் கால்கள் நான்கும்வாய்த்திருக்கும் கப்பல்!
நீர்குடிக்க வாய்ப்பிருந்தால்நிறையக் குடிக்கும் கப்பல் -
மிகநெடும் பொழுது தாகம் தாங்கிநிற்கும் உயிர்க் கப்பல்!
பார் முழுதும் உள்ள மக்கள்பார்த்து வியக்கும் கப்பல் -
இதுபாதம் மணலில் புதைந்திடாமல்பாங்காய்ப் போகும் கப்பல்!
ஊர்ப் பயணம் செல்ல மக்கள்ஓட்டிப் போகும் கப்பல் -
மிகஉயர்ந்த உடலும் தடித்த தோலும்உடையதிந்தக் கப்பல்!
பார்த்துப் புல்லை மேய்ந்து நல்லபால் கொடுக்கும் கப்பல் -
இதுபாலைவனக் கப்பல் தம்பிபார்! பார்! ஒட்டகக் கப்பல்!-
திட்டக்குடி முத்து முருகன்
Posted By Bhai.

திங்கள், மார்ச் 09, 2009

படங்கள் பிரோம் 1991

அன்பு நண்பர்களே,
படங்கள் யாவையும் JPEG FORMATIL போஸ்ட் செய்துள்ளேன். இருந்த எல்ல படங்களும் போஸ்ட் பண்ணியாச்சி. Please comment away
Gujili

ஆல் இந்தியா டூர் படங்கள் - gujili

FAREWELL PARTY, HOSUR NEW YEAR PARTY 1992, HYDERABAD EXPRESS மே, 30, 1991
இன் HYDERABAD EXPRESS, HYDERABAD, இன் THE BOAT TO TIRUVENI SANGAM

Chota Kashmir, Thiruveni sangam

Nainital மே 16, 1991
Missourie - மே 12, 1991

TAJ MAHAL & இன் THE BUS TO HARIDWAR, RISHIKESH

காந்தி MEMORIAL, BAHAI HOUSE OF WORSHIP, REDFORT, DELHI

Bombay, எல்லோர kugaigal

daulatabad fort, pseudotajmahal - 5-2-1991

சென்ட்ரல் ஸ்டேஷன் மே 29, 1991
qutubமினார், பரோடா - ஆனந்த் கால்நடை மருத்துவ நிலையம் மே 3, 4 1991

இங்கு எனக்கு பிடித்த பல விஷயங்களில் ஒன்று simplicity. எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசலாம், அவர் நல்ல மூடில் இருப்பாரோ, ஓய்வில் இருப்பாரோ, இப்போது அழைத்தால் தவறாக எடுத்துக்கொள்வாரோ எனவெல்லாம் பயம் தேவையில்லை. சில நாட்களுக்கு முன் என் முதலாளி வீட்டு திருமணத்திற்கு அழைத்திருந்தார், பெண்களுக்கென தனியாக விருந்து நடந்தது, அதில் என் மனைவி, மகள்கள் கலந்து கொண்டனர், எந்த பாகு பாடும் இல்லாமல் அவர்களை நடத்திய விதத்தை இன்னும் சொல்லி சொல்லி மாய்ந்து கொள்கிறார்கள் மேலும் இவ்வளவு அழகான பெண்களை இது வரை என் மனைவி கண்டதே இல்லை என certificate வேறு கொடுக்கிறார். மற்ற பெண் அழகாக இருக்கிறாள் என்று ஒரு பெண் கூறுவது பெரிய விஷயம்தான்(உண்மையாகவே அழகாகத்தான் இருப்பார்கள் போல)

கரையான்.

Agronomy வாத்தியார் நம்மள வாரம் ஒரு முறை பல இடங்களுக்கும் அழைத்து சென்று நம் கல்லூரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக வைத்திருந்த நல்ல மனிதர், ஆனால் அவரையும் நோக அடிக்குமாறு, நம் நண்பர் பாபு அந்த வாத்தியாரின் அறை வாயில் சுவற்றில் "India Tourism Development Corporation" என்று எழுதி வைத்து விட்டார், அவர் அதை எல்லோரிடமும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.

கரையான்.

ஞாயிறு, மார்ச் 08, 2009

களப்பணியில் பாய்




வளைகுடா வசந்தங்கள்

1.landline to landline-எவ்வலவு நேரம் பேசினாலும் ,கட்டணம் இல்லை.
2.நீரை விட பெட்ரோல் விலை குறைவு.
3.ஒரு நொடி கூட மின் வெட்டு கிடையாது.ஒரு வேலை,தடங்கல் ஏற்பட்டால் , உடன் ,மின்வாரியதினர் வீட்டில் ஜெநேரடர் கொண்டு வந்து பொருத்தி விடுவார்கள் .பழுது சரி செய்யும் வரை,அனைத்தும் இலவசம்.
4.ஒரு நாளும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.ஒரு வேளை ஏற்பட்டால் , உடன்,நீர்வாரியதினர் லாரி மூலம் ,நீர் தருவார்கள்.பழுது சரி செய்யும் வரை அனைத்தும் இலவசம்.
5.எந்த ஒரு கட்டிட வேலையும் ,3 மாதத்தில் முடிந்து விடும்.
6.பாலைவனமாக இருந்தாலும், பல இடங்கள் பச்சைபசெலேன்று இருக்கும்.
7.நேரம் வெகு விரைவாக கழிந்துவிடும்.வெள்ளி முடிந்தவுடன்,அடுத்த வெள்ளி வந்துவிடும்.
8.ஒவ்வொரு 5 மீட்டருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சலூன்.
9.மளிகை கடை முன்னால் நின்று ஹாரன் அடித்து ,சாமான்களை சொன்னால் , காரில் கொண்டு வந்து வைப்பார்கள்.இறங்க வேண்டியது இல்லை.
10.ஒவ்வாரு 2 கீ.மீ. ல் ,ஒரு ஷாப்பிங் மால்.
11.பிரதான ரோடுகள் ,மெதுவாக மற்றும் வேகமாக வோட்டு பவர்களுக்காக , அடையாள மிடப்பட்டுள்ளது.
12. பிரதான சாலைகளில் rash அண்ட் super fast driving செய்பவர்களை பிடிக்க காமெராக்கள் உள்ளன.minimum fine Rs.4000/-.ஒரு fine carries 2 points. 12 points accrue ஆனால் ,driving Licence ,முடக்கப்படும்.
13. கார் வாங்குவதை விட ,ல்ய்சன்ஸ் எடுப்பது வெகு சிரமம்.[பொள்ளாச்சியில் நான் VVIP ஆதலால் ,Motor Vehicle Inspector ல்ய்சன்சை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து தந்தார் .லஞ்சமில்லை.]
14. பெண்களுக்கென்று எந்த அலுவலகத்திலும் கியூ கிடையாது.வந்து நின்றதும் , உடன் கவனித்து அனுப்பிவிடுவார்கள் .[பெண்களை அல்ல,அவர்களது வேலைய்யை.]
15. ஒரு Starbucks ,ஒவ்வொரு கீ.மீ. ல் .
16. ஒவ்வொரு செலவழியும் பொருட்களுக்கும் [expendable articles] ,கட்டாய expiry தேதி உண்டு. காலாவதி ஆனா பொருட்கள் ஒன்று மட்டும் கடையில் இருந்தாலும் , கடை சீல் வைக்கப்படும்.
17. பூங்காக்களில் ,family recreational இடங்களில் ,bachelors அனுமதி இல்லை.
18. Hierrarchy[bossism] கிடையாது.கடை நிலை ஊழியர்,முதல் நிலை அலுவலரை பெயர் சொல்லி அழைக்கலாம்.அவர் முன்பாக புகைக்கலாம்.அவர் நிற்க,இவர் இருக்கலாம்.[நமதூரில் ,immediate boss இக்கு முன்பு,நெளியிற நெளிவு இருக்கே, அப்பப்பா!]
19. லஞ்சம் என்றால் என்ன என்பது ,பலருக்கு தெரியாது.[ நமதூரில்,லஞ்ச ஒழிப்பு துறை தான்,லஞ்சத்தை ஆரம்பித்து வைத்தது.]
20. எந்த அலுவலகம் சென்றாலும் , டி ,காப்பி ,mineral நீர் இலவசம்.
21. எல்லாருக்கும் சம்பளம் ஆன்லைன் வசதியில்.[நான் பேங்கிற்கு போயி பல வருடங்கள் ஆகிறது.]
22. அதி தீவிர சிகிச்சை தேவைப்படின், ஹெலிகாப்டர் வந்து , இலவசமாக தூக்கி செல்லும்.
இன்னும் பல இருக்கலாம்.அவற்றை எனதருமை கரையான் எழுதலாம்.
பாய்.

சனி, மார்ச் 07, 2009

புதுசா கல்யாணமானவுங்க பொண்டாட்டிய பாத்து(சுமாரா இருந்தா கூட) ஐஸ்வர்யா ராய் சுஸ்மிதா சென்னு, அப்படியெல்லாம் புகழுவாங்க, கல்யாணமான ரெண்டாவது நாளே பொண்டாட்டிய பாத்து பேய் இன்னு சொன்னது என்னோட கண்கண்ட தெய்வம் ஆகத்தான் இருக்கும். கல்யாணமான புதுசுல கோவிலுக்கு போனோம். சாமியெல்லாம் கும்பிட்டு முடிச்சதும், எங்களோட வந்த என் பெரியம்மா, கோவில்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்து போகனும்னு சொன்னாங்க. இவரு அவங்ககிட்ட "அதான் சாமியெல்லாம் கும்பிட்டாச்சே போக வேண்டியது தானே" என்று கேட்டாரு. அவுங்க "நாம கோயிலில் இருந்து உடனே போனால் இங்க சுத்திக்கிட்டு இருக்கிற பேய்கள் நம்ம பின்னாலேயே வந்துடும்றது ஐதீகம் அதனால் இங்க உட்கார்ந்து இருந்து போனால் அது திரும்ப போய்டும் நம்ம பின்னால் வராது" என்றார். கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு கிளம்பி நடக்க ஆரம்பித்தோம், இவரு விடுவிடு வென்று எனக்கு பத்தடி முன்னாள் நடந்து சென்று திரும்பி பார்த்து எங்க பெரியம்மாவிடம் "பேய் வராதுன்னு சொன்னீங்க பின்னாலேயே வருதேன்னு" என்னை காட்டி சொல்றாரு.

திருமதி கரையான்.

பிசியாலஜி ,அந்த வாத்தியார் பெயர் சரியாக ஞாபகம் இல்லை(அனேகமாக விஸ்வநாதன்), அவருடைய வகுப்பு பெரும்பாலும் பதினொன்று முதல் பன்னிரண்டு வரை இருக்கும் மெஸ் செல்லும் நண்பர்கள் 11:45 க்கு lecture ஹால் இன் பின் பக்க வழியாக தப்பி விடுவார்கள், சீக்கிரமாக சென்று இடம் பிடிப்பதற்கு. இது பல நாட்களாக நடந்து கொண்டிருந்தது, சிலர் அவர் அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்த வுடன் தப்பி விடுவார்கள். ஒரு நாள் வழக்கம் போல் அவர் அட்டெண்டன்ஸ் எடுத்த பின் பல நண்பர்கள் தப்பி விட்டார்கள், சிலர் கடைசி பத்து நிமிடத்தில் சென்று விட்டார்கள்(பாய் போன்ற நல்ல மனம் கொண்ட நண்பர்கள்), எதோ காரணத்தால், அவர் வகுப்பு முடிந்தவுடன் சில பெயர்களை அழைத்தார், ஆனால் அந்த நண்பர்கள் வகுப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறி விட்டார்கள். அட்டேண்டன்சில் அவர்கள் present ,வாத்தியார் குழம்பி விட்டார், அட்டெண்டன்ஸ் திரும்ப ஒருமுறை எடுத்ததில் கிட்டத்தட்ட் இருபது பேருக்கும் மேல் வகுப்பில் இல்லை, ஆனால் அட்டெண்டன்ஸ் படி present. கடும் கோபம் அடைந்த அவர்"மவனுங்களே வாங்கடா நீங்க எப்படி என்கிட்டருந்து பாஸ் ஆவுரீங்கன்னு பாத்துடுறேன்" என கருவிக்கொண்டே சென்றது இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது.

கரையான்.

திங்கள், மார்ச் 02, 2009

ஒட்டகப்பால் குடிச்சா பேதி ஆவறது ஏன்னா அது ரொம்ப concentrated ஆக இருப்பதால்தான், ஒட்டகங்கள் இயற்கையாகவே தண்ணீர் இல்லாத பிரதேசங்களில் இருப்பதால் அதுடைய பால், சிறுநீர் எல்லாமே concentrated ஆகத்தான் இருக்கும் இது இயற்கை அதற்களித்த வர பிரசாதம். அதுடைய பாலில் fat, protein எல்லாமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மேலும் சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு பயன் உண்டு, மற்ற விலங்கினங்களின் பாலை விட ஒட்டகப்பாலில் insulin கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், எனவே பச்சையாக குடிக்கும்போது சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி அல்லது மாத்திரை மூலம் செலுத்திய பயன் உண்டாகிறது. மேலும் பசு அல்லது எருமை மாட்டுப்பால் பச்சையாக குடித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வயிற்று போக்கு நிச்சயம். மேலும் நான் எடுத்துக்கொண்டது கொஞ்சம் அதிக dose கிட்ட தட்ட ஒரு லிட்டர். இங்கு ஒட்டகப்பால் குடிக்க சென்றால், ஒட்டகம் வைத்திருப்பவர்கள் ஒரு பெரிய bowl ல் தருவார்கள், கொஞ்சமாக குடித்து விட்டு கீழே ஊற்றுவதை சவுதிகள் விரும்புவதில்லை.

கரையான்.

படங்கள் - ஆல் இந்தியா டூர், ஹோசூர்.

மதிப்பிற்குரிய சென்னை நட்சத்திரங்களே,
இப்போது எங்களுக்கு ஒரு வாரம் வசந்த காலம் விடுமுறை; என்றாலும் வேலை அதிகம் ஏனெனில் இந்த நேரத்தை வகுப்பு தயார் செய்வதற்கு உபாயோகிக்க வேண்டும். நான் அதுக்கு பதிலாக நேரத்தை முக்கியமான விஷயங்களிற்கு உபயோகிக்கிறேன். எனது ஆல் இந்தியா டூர் படங்களை கண்டுபிடுத்து விட்டேன். அதோடு சில ஹோசூர் படங்களும் உள்ளது. கிட்டத்தட்ட 34 படங்கள் இருப்பதால் படங்களை இன்ச்டல்மேன்டில் போஸ்ட் செய்கிறேன். மேலும் என்னிடம் SCANNER இல்லாதலால் ஆபீஸ் SECRETARYயின் SCANNER உதவியை நாட வேண்டும். படங்கள் ஒவ்வுன்றாய் காணும் போது நினைவுகள் மெதுவாக வருகிறது. DEHRA DUN இல் எடுத்த படம் ஒன்றில் மாதீச்வரன் ஒரு GORKA வேஷம் போட்டுள்ளான், ஆனால் மோகன்தாஸ் ஒரு மலை வாசி பெண்ணின் கோலத்தை அணிந்துள்ளான்..
திருவேணி சங்கம் padangalai பார்க்கும் bodhu அந்த தண்ணீரின் நிறம் என் மனதில் பச்சையாக தோன்றுகிறது..
அஜந்தாa elloraa குகைகளில் கூத்தடிச்சி விழையாண்ட நினைவுகள்; அங்கு சோறு கிடைக்காமல் அதிக பிரெச்சனை எனக்கு, ஏனென்றால் எனக்கு சோறு சாப்பிடாமல் இருக்க முடியாது.. இவ்வாறு பல நினைவுகள்..
சரி, நான் கண்டிப்பாக 2 வாரத்துக்குள் இந்த படங்களை போஸ்ட் செய்கிறேன்.
Gujili

ஞாயிறு, மார்ச் 01, 2009

கோவை பயிற்சி அனுபவங்கள்

1.ஒரு நாள் மாட்டில் உன்னி தொந்தரவு இருந்த காரணத்தால் ,ஒருவர் வந்தார்.அது அந்துவுடைய முறை.வந்தவர் "சாகவே மாட்டேன்கிறது" என்றார்.நமது அந்து புன்னகைத்துக்கொண்டே "நான் சாகடிக்கிறேன் " என்று கூறி ,நான் கவனிக்கும் முன் ,ஐவர்மேக்டினை இன்றாமுஸ்கிலரில் போட்டுவிட்டு ,"தைரியமாக இருங்கள்" என்று சொல்லி முடிப்பதற்குள் ,மாடு செத்துவிட்டது.அந்த மாட்டுக்காரர் ,ரொம்ப கண்ணீர் விட்டு, உன்னியை தானே சாகமட்டேன்கிறது என்று சொன்னேன்,மாட்டை இல்லையே என்றார். அந்து மீண்டும் புன்னகை.ஒரு வழியாக ,மாட்டிற்கு ALLERGY ஏற்பட்டு HEART ATTACK வந்து மறித்து விட்டது என்று ,மற்ற அனைவரும் சொல்லி சமாளித்து அனுப்பிவிட்டோம்.
2.செகண்ட் VAS டாக்டர் ஆசீர்வாதம்.SUBJECTIL துரைப்பலத்தை விட மோசம்.
ஆனால் சமாளிப்பதில் வல்லவர்.ஒரு நாள்,ஒருவர் முயலுடன் வந்து ,"டாக்டர் ,இந்த முயல் வழக்கமாக எட்டு குட்டி போடும்.இந்த முறை இரண்டு தான் போட்டது.பரிசோதனை செய்து காரணத்தை கூறவும்" என்றார்.
உடனே,"இதற்கான மெசின் லண்டனில் உள்ளது.நான் லெட்டர் தருகிறேன்.அங்கு கொண்டு சென்றால் ,நன்கு கவனிப்பார்கள் " என்று கூலாக சொன்னார்.வந்தவர் வந்த வழியே போய்விட்டார்.
இன்னொரு சமயம் ஒருவர் நாயை கொண்டு வந்து "சீசேரியன் செய்தால் பிழைக்காது என்று கூறுகிறார்களே" என்றார் .உடன் டாக்டர் .ஆசீர் ,"இல்லையே !எனது நாய் உயிருடன் தானே இருக்கிறது " என்றார்.வந்தவர் சம்மதிக்கவும் ,அவர் டூட்டி இல்லாத நாளைக்கு APPOINTMENT கொடுத்து அனுப்பிவிட்டார்.
[குறிப்பு: அவரது நாய்க்கு நாங்கள் தான் ஆபேரேசன் செய்தோம்.]
பாய்