சனி, டிசம்பர் 07, 2013

மறக்க முடியுமா??

கிரிக்கெட்டில் நம்ம வகுப்பில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் கல்லூரி அணிக்கு தேர்வானவர்கள் குறைவுதான். அருண்,செந்தில்,பாய், பாபு, பார்த்திபன்,தாஸ்,குமாரவேல்  இப்படிப்பட்ட சூப்பர் டூபர் வீரர்கள் இருந்தாலும் நமக்கு இரண்டு வருட ஜூனியர்கள் பாஸ்கர் சேதுபதி தலைமையிலான அணி ரொம்பவும் வலிமை வாய்ந்ததாக  இருந்தது. நம்ம வகுப்பு அணி எப்போதும் முதல் சுற்றில் தோற்று வெளியேறியதில்லை, எப்படியோ அடித்து பிடித்து இறுதி சுற்றுக்கு வந்து சேர்ந்து விடுவோம். அப்படி ஒரு ஆட்டத்தில் நமக்கு இரு வருட ஜூனியர் களுடனான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. டாசில் வென்ற எதிரணி நம்மை பாட்டிங் செய்ய அழைத்தது. நம்ம அணியின் "the wall" என்று அழைக்கப்படும் பாபு, முதல் ஓவரிலேயே திரும்பி விட்டான், தலை சிறந்த மட்டையாளர்கள் எல்லாம் தலை தப்பினால் போதும் என்று சென்ற வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி விட்டார்கள்,எதிரணியை சேர்ந்த சத்தியமூர்த்தி மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர்களான Holding, Garner, Marshal ரேஞ்சுக்கு பந்து வீசிக்கூண்டு இருந்தான், இருபது ரன்னுக்குள் 4 விக்கெட்களை பறி  கொடுத்து விட்டு நம் அணி தடுமாறி கொண்டு இருந்தது, நம்முடைய அணி வீரர்களுக்குள்ளே கடும் போட்டி யார் பாட்டிங் செய்ய கடைசியாக செல்வதென்று (நான் போகல நீ போ அடுத்து என்று ஒவ்வொருவரும் அடுத்தவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்) ஜாம்பவான் களுக்கே இந்த நிலை என்றால் என்னைப்போன்ற tailenders நிலைமை என்னவாகும், இப்படி நீ போ நான் போ என்ற போட்டியில் ஐந்தாவது ஆட்டகாரனாக என்னை தள்ளி விட்டார்கள்(அனுப்பினார்கள் என்ற சொல் இங்கே உபயோகப்படுத்த முடியாது), முதல் சில பந்துகள் வயிற்றில், கையில் என உதை  வாங்கி கதறிக்கொண்டு நின்றேன், சில அடிகள் வாங்கிய பின் கொஞ்சம் கோபம், பொண்ணுங்க முன்னாள் அடி வாங்கியதால் ஏற்பட்ட அவமானம் (நம்முடைய ஜூனியர் களை ஊக்கப்படுத்த அவர்கள் பாட்ச் பெண்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்) எல்லாமாக சேர்ந்து இனி தப்பிக்க வேறு வழியே இல்லை பதில் தாக்குதல்தான் ஒரே வழி என முடிவு செய்தேன்..சத்தியமூர்த்தியின் பந்து வீச்சை சமாளிக்க ஒரே வழி திரும்ப தாக்குவது, கண்ணை மூடிக்கொண்டு மட்டை சுழட்ட இரண்டு சிக்ஸர், அது வரை தெனாவட்டாக பந்து வீசிக்கொண்டு இருந்த எதிர் அணி கொஞ்சம் இறங்கி  வந்தது, என்னுடன் தாஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினான், நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட அறுபது ரன்கள் சேர்த்தோம், பின்னர் தாஸ் அவுட்டாகி வெளியேற அருண் வந்தான், நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும்போது அருண் ஒரு single run -க்கு அழைக்க நான் வேகமாக ஓடினேன், ஆனால் அவன் அழைத்தானே தவிர ஓட வில்லை, நான் அவுட்டாகி வெளியேற வேண்டியதாகியது , பயங்கர கடுப்பில் பிட்சிலேயே வைத்து அவனை திட்டி விட்டு வந்தேன்.(அதற்காக பிறகு மன்னிப்பு கேட்டேன்), முடிவில் ஓரளவு மரியாதையான ரன்கள் எடுத்திருந்தோம், 130 என்று நினைக்கிறேன். நாம் அந்த மாட்சில் தோற்றாலும் போராடி தோற்றோம் அவர்கள் 8 விக்கட்டுகளை இழந்து கடைசி ஓவரில்தான் வெல்ல முடிந்தது....நம் அணியில் பாய், பார்த்திபன், பாபு, அருண், செந்தில், குமாரவேல் சிறப்பாக பந்து வீசினார்கள்.

கரையான்.

3 கருத்துகள்:

  1. நம்ம ஹாஸ்டல் நியூ ப்ளாக் வளாகத்தில் டென்னிஸ் பந்தில் ஒரு போங்கு கிரிகெட் விளையாடுவார்கள்.பந்து முதல் தள உயரம் போனாலே அவுட் ..ஓடாமலே ரெண்டு ரன் எடுக்கலாம் என வித்தியாசமான விதிகளுடன் விளையாடும் கிரிகெட் வேடிக்கை பார்க்க சுவாரசியமாக இருக்கும். மோகன் தாஸ் பந்தை எறி பந்து விளையாடுவது போல பௌல் பண்ணுவான் .பார்த்திபன் ஒரு மாதிரியான ஸ்பின் பௌலிங் போடுவான். அப்துல் காதர் மாதிரி நம்ம பை பந்தி வீசும் அழகு தனி தான்.ஆள் பற்றாக்குறை என்றால் சந்திரனை டீமில் சேர்த்துக் கொள்ளுவார்கள் .இதில் இன்டெர் கிளாஸ் டோர்னமென்ட் கூட அவ்வப்போது நடக்கும்.பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமை மதிய வேளை பொழுதுகள் இந்தக் கிரிகெட் ஆக்ரமித்து இருந்தது

    பதிலளிநீக்கு
  2. ''அப்துல் காதர் மாதிரி நம்ம பாய் பந்து வீசும் அழகு'' என்று வாசிக்கவும்.அவசரத்தில் பாய் பை ஆகவும் பந்து பந்தி ஆகவும் மாறிவிட்டது .

    பதிலளிநீக்கு
  3. பெரும்பாலான சம்பவங்கள் எனக்கு மறந்து விட்டது.நன்றி-கரையான்.ஹாஸ்டல் கிரிக்கெட்டில்,நானும்-பாபுவும் அணித்தலைவர்கள்.பாவம் அவன் டீம் வீரர்கள்.திட்டி தீர்த்துக் கொண்டே இருப்பான்.மாறி-மாறி ஜெயிப்போம்.
    பாய்.

    பதிலளிநீக்கு