புதன், டிசம்பர் 11, 2013

மறக்க முடியுமா...

ஹாக்கி விளையாட தெரிந்தவர்கள்  நம்ம வகுப்பில் ரெண்டு பேர்தான் தேறுவார்கள் என நினைக்கிறேன் வரதராஜன் மற்றும் வைரவசாமி , மற்ற வேறு யாரும் விளையாடியதாக நினைவில் இல்லை. நம்முடைய ஜூனியர்  அணியில் கிட்டத்தட்ட எட்டு பேர் கல்லூரி அணிக்காக விளையாடி கொண்டு இருந்தார்கள், அவர்கள் அணியின் முன் நம் அணி அர்ஜென்டினா கால்பந்து அணியுடன் இந்திய கால்பந்து அணி விளையாடினால் எப்படி இருக்குமோ அதுபோன்ற நிலைதான். இருந்தாலும் நம் அணி வீரர்கள் அருமையான ஒரு கூட்டமாக எதிரணியை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இந்த முறை வரதராஜன் எனக்கு கோல் கீபர் வேலை கொடுக்காமல் மிட் பீல்ட் பதவி கொடுத்தார்(அப்போதுதான் முதல் முறையாக நான்  ஹாக்கி ஸ்டிக்-ஐ தொட்டேன்), ஓடி கொண்டே இரு எங்கேயும் நிற்காதே, பந்து எவரிடம் போனாலும் குச்சியுடன்(ஸ்டிக்) அவர்களை விரட்டிக்கொண்டே இரு இதுதான் கேப்டன்-ன் கட்டளை. மற்ற நண்பர்களுக்கும் அதே கட்டளைதான், இதிலே கொடுமை என்னவென்றால் பலருக்கும் ஆட்ட விதிமுறைகள் கூட தெரியாது, ஆனால் எல்லோரும் ஸ்டிக் ஐ எடுத்துக்கொண்டு களம் இறங்கி விட்டார்கள். காப்டனின் இன்னொரு கட்டளை "அவர்கள் கோல்  அடிக்க விட்டுவிட கூடாது, tie breaker ல் பார்த்து கொள்ளலாம்."  இருந்தாலும் அவர்கள் ஒரு கோல் அடிக்க ஆட்டத்தில்  பரபரப்பு கூடி விட்டது, தட்டு தடுமாறி நம் அணிக்காக வரதராஜனும் ஒரு கோல் அடிக்க எதிரணி வலுவாக இருந்தாலும் கொஞ்சம் அவர்களின் தன்னம்பிக்கையில் ஒரு சிறு விரிசல்...இது போதுமே நம்ம ஆட்கள் வழக்கமான கோஷ்டி கோஷ்டியாக தடுப்பாட்டம் ஆடி மேலும் அவர்கள் வெற்றி கோலை  அடிக்காமல் தடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்ய tie breaker முறைக்கு பந்தயத்தை நடத்தி சென்றார்கள். Tie breaker -ல் வரதராஜன் goal keeper  ஆக செயல் பட்டார், அந்த முறையிலும் 3-3 என டிரா ஆகி விட்டது, அடுத்ததாக sudden death முறை, அந்த முறையில் நாம் வெற்றி பெற்றோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் அணி யானையின் காதில் புகுந்த எறும்பு, வெறும் இரண்டு வீரர்கள்களை வைத்துக்கொண்டு ஒரு பெரிய அணியை வீழ்த்தினோம். 
(சென்ற பதிவில் பாய் பௌலிங் பற்றி சொல்ல மறந்து விட்டேன் நம் அணி pg அணியுடன் விளையாடிய ஒரு மாட்சில் dr .iyappan அவர்களை முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆக்கி வீழ்த்தியது இன்னும் கண் முன்னே நிற்கிறது, நான்தான் அப்போது wicket -keeper )

கரையான்.

2 கருத்துகள்:

  1. ஸ்டிக்கை தூக்கி ஓடியவர்களில் சூப்பர் பல்லு ஜெயராமன்.நானும் இந்த போட்டியில் விளையாடினேன்.செம விறுவிறுப்பு.
    நன்றி கரையான்-கிரிக்கெட் விமர்சனத்திற்கு.

    பாய்.

    பதிலளிநீக்கு
  2. பல்லு ஜெயராமன் ஹாக்கி ஸ்டிக்கை விளையாட உபயோகித்தது ஞாபகம் இல்லை பாய்....அடிதடி தவிர விளையாடும்போதும் உபயோகித்தானா என்ன?
    கரையான்.

    பதிலளிநீக்கு