நம்மிடம் பல நேரங்களில் நண்பர்கள் "உனக்கு மட்டும்தான் தெரியும் வேற யாருகிட்டயும் இத பத்தி பேசாத" என முக்கியமான அல்லது உப்புசப்பில்லாத விஷயங்களை சொல்வதுண்டு. இந்த உனக்கு மட்டும் தெரிந்த மேட்டர் பலருக்கும் தெரியும் என்பதுதான் உண்மை.
சென்ற முறை தாயகம் வந்திருந்தபோது நம்ம எஸ்.கே.பீ மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஈரோடு சென்றிருந்தேன். எஸ்.கே.பீ என்னை அழைக்க ரயில் நிலையம் வந்திருந்தான், சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளுக்கு பின் "மாப்பிள நான் துபாய் போவது யாருக்கும் தெரியாது நீ இத பத்தி யாருக்கிட்டயும் பேச வேணாம்" என்றான், ஒருவேள நாம பிரதமர் மன்மோகனுக்கோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கோ சொல்லி இவன் துபாய் போவதா தடுத்துடுவோம்னு நினைக்கிறானோ என்று நினைத்து சத்தியம் செய்யாத குறையாக நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறினேன். அவனுடன் கால்நடை மருத்துவமனையில் உள்ள வீட்டிற்கு சென்றடைந்தேன். வீட்டிற்கு வெளியே வேறொரு கால்நடை மருந்தகத்தில் பணி புரியும் கால்நடை மருத்துவர் நின்றிருந்தார், நாங்கள் காரை விட்டு இறங்கியவுடன் அறிமுகப்படலம் முடிந்த வுடன், "நீங்க எப்ப சார் துபாய் போறீங்க " என்று எஸ்.கே.பீ இடம் கேட்டார், அவரிடம் எதையோ சொல்லி சமாளித்தான்,பின்னர் என்னிடம்"வேற ஒன்னும் இல்லடா துறை ரீதியா அனுமதிக்கு விண்ணபித்து இருக்கேன் அதான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு" என்றான். கொஞ்சம் நேரம் கழித்து வேறொரு கால்நடை மருத்துவர், அவர் வேறொரு துறையில்(கால்நடை மருத்துவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத) பணி புரிகிறார், "என்ன அண்ணாச்சி துபாய் போறீங்கன்னு கேள்வி பட்டேன் " என்று எஸ்.கே.பீ யை பார்த்து வினவினார். அடுத்த நாள் நாங்கள் இருவரும் ஒரு பால்பண்ணைக்கு சென்றோம், எங்கள் இருவரையும் அந்த பண்ணைக்கு வேறொரு கால்நடை மருத்துவர் அழைத்து சென்றார், அவரும் எஸ்.கே.பீ இடம் துபாய் செல்வதை பற்றி விசாரித்தார், இப்போது எனக்கு பழகி விட்டது, அந்த பண்ணையில் எங்கள் பணி முடிந்தவுடன் அந்த பண்ணையின் முதலாளி " என்னங் டாக்டர் துபாய் போராருங்க்லாட்ருக்கு...சொல்லவே இல்லீங்...." எஸ் கே பீ "உங்களுக்கு எப்படி தெரியும் " என்றான் "அட போங் இந்த விஷயம் ஊரு பூர தெரியுங் அல்லாம் பேசிக்றாங் " எனக்கு மட்டுமே தெரிந்த ராணுவ ரகசியம் ஊரு பூரா சிரிப்பா சிரிக்குதே என நினைத்து கொண்டேன். பின்னர் சந்தித்த அனைவரும் (பகவதி , தங்கவேல் உட்பட) இந்த ரகசியத்தை எஸ் கே பீ இடம் கேட்டார்கள்.
நாங்கள் இருவரும் அந்த பால் பண்ணையிலிருந்து வெளியேறும்போது ஒரு மாடு மற்றொரு மாட்டிடம் எங்களை காட்டி ஏதோ கத்தியது அதன் பாஷை புரியாததால் அந்த வார்த்தைகளை கூகிள் மொழிபெயர்ப்பில் போட்டு பார்த்தேன், கீழ்கண்டவாறு மொழி பெயர்த்தது...
" ஏற்கனவே நமக்காக இருந்த ஒரே நல்ல மருத்துவர் பொள்ளாச்சி இப்ராஹிம் பாய் அவரு துபாய் போய்ட்டார் , அடுத்த சூப்பர் மருத்துவர் இவரும் துபாய் போறாரு நம்ம கதி இனி அதோகதிதான்"
கரையான்.

இதுல இன்னொரு கூத்து என்னன்னா SKB எல்லா நண்பர்களுக்கும் துபாய் போறேன்னு pvt மெசேஜ் கொடுக்கிறேன்னு FB யில் போஸ்ட் பண்ணின மெசேஜ் எல்லா நண்பர்கள் பக்கத்திலும் சுற்றறிக்கை மாதிரி போய்க் கொண்டிருந்தது
பதிலளிநீக்குஎஸ் கே பீ இதுதானா உன்னோட ரகசியம்......நான் உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன் யாருகிட்டயும் சொல்லிடாத "நான் இந்தியா வரப்போறேன்..."
பதிலளிநீக்குகரையான்.