திங்கள், நவம்பர் 26, 2012

புலம்பல்கள்

பிளாக்கில்  எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டது.....நேற்று என் மனைவி , என்ன ஆச்சு உங்களுக்கு எல்லாம் ரொம்ப நாட்களாக பதிவுகளையே காணோம் என்று கேட்ட வுடன்தான் உரைத்தது....நம்மோட ரசிகைக்காகவாவது உடனே எழுத வேண்டுமென்று...வேலைப்பளு என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது, சரியாக சொல்ல வேண்டுமென்றால் சோம்பேறித்தனம். நடுவில் சென்னைக்கு ஒருவார விஜயம் செய்தது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டே  இருந்தேன், ஆனால் என்ன காரணமோ தெரிய வில்லை தள்ளி போய்க்கொண்டே இருந்தது...
ஒவ்வொரு வருடமும் சென்னை செல்லும்போதும் நம்மூரில் நடக்கும் மாற்றங்களை பார்த்து வியப்படைவது உண்டு, ஆனால்  சமீப காலங்களில் நம்மூரில் நடக்கும் மாற்றங்கள் கொஞ்சம் கவலை அடைய வைக்கிறது...மக்கள் ஒரு வகையான இறுக்கத்தில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. எல்லோரும் ஒருவகையான டென்ஷனில்  திரிகிறார்கள் என்று கூறினால் மிகை ஆகாது...இன்றைய நிலையில்  அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைவோமா என்ற நினைப்பே ஒரு டென்ஷன்தான்...அலுவலகம் சென்றடைந்தவுடன் அங்கு பணி  நிமித்தமான டென்ஷன்கள் தனி.  அடுத்தது பெரும்பாலனா மக்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொலேச்டிரால் என்று ஏதாவது ஒரு வியாதிக்காக சிகிச்சையில் இருப்பது. இதுவல்லாமல் டாஸ்மாக் பெரும்பாலானவர்களுக்கு அத்தியாவசியம் என்றாகி விட்டது. பணக்காரர்கள்தான் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளும் பார்ட்டி என்று கூடி குடித்து கொண்டாடுவது என்பது ஒரு கெளரவம் என்றாகி விட்டது. கைநிறைய சம்பாதிப்பவர்கள் கூட மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே இருப்பதால் சம்பாதித்ததை அனுபவிக்கிறார்களா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்...

புலம்பல்கள் தொடரும்....

கரையான்.


Kumaran & Bhai

By,
Chennai Stars

திங்கள், நவம்பர் 12, 2012

தாயகம்2012 --- 9





இவர் எங்க வீட்டு டிரைவர் .படத்தில் உள்ள என் அப்பாவின் 1970 மாடல்  அம்பாசடர் காரை ஓட்டுபவர்.
இந்த விஜயத்தில் ,கால்நடை மருத்துவம் குறித்து பேசினார்.

அதாவது ,[ஓட்டுபவர்]:நம்ம அரசு கால்நடை மருத்துவமனைக்கு வயிறு  உப்பிய என் ஆடுகளை கொண்டு சென்றால் ,உறுதியான சாவு தான் ஏற்படுகிறது .
ஆகையினால் ,தற்போதெல்லாம்,இந்த பிரச்சினை ஏற்பட்டால்,ஒரு சிறிய செவென் அப்புடன் ,ஒரு குவார்ட்டரை கலந்து வாயில் ஊற்றி விடுகிறேன் .சூப்பர் ரிசல்ட் தான் என்றார் .


எனக்கோ,ஒரு பக்கம்,சிரிப்பை அடக்க முடியவில்லை,மறு பக்கம் தன் முதலாளி என்றும் பாராமல் என்னிடம் அவ்வாறு கூறியது,இன்னொரு பக்கம் கால்நடை மருத்துவராகிய என்னிடமே கூறியது,இறுதி பக்கம் நம் சக மருத்துவர்களை என்ன சொல்வது என்ற சிந்தனை .

பாய்.

Deepavali

Hello All,

Happy Diwali to all! May the festival of lights fill your lives and your families with light, happiness and many blessings!

Gujili

வியாழன், நவம்பர் 01, 2012

மொழிப்பிரச்சனை

சென்னை விஜயத்தின் பொது நான் பார்த்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று வெளி மாநில தொழிலாளர்களின் அதிகரித்த எண்ணிக்கை. எங்கு பார்த்தாலும் பெங்காலிகளும் பீகாரிகளும் நிறைந்திருக்கிறார்கள். சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கட்டிட தொழிலாளர்கள், ஓட்டல் பணியாளர்கள் என எங்கும் வெளி மாநிலத்தவர்கள் பணி புரிகிறார்கள். சவுதியில் பெரும்பாலான உடல் உழைப்பு தொழில்களில் குறிப்பாக சாலை மற்றும் கட்டுமான தொழில்களில் பாகிஸ்தானிகளும், நம் நாட்டிலிருந்து தமிழகத்தவர்களும் அதிகமாக இருப்பார்கள். நம்மவர்களுக்கு சுத்தமாக எந்த மொழியும் வராது தமிழை தவிர, பாகிஸ்தானியர்கள் குறிப்பாக பஷ்டூ இனத்தவர்கள் உருது கூட பேச மாட்டார்கள், இவர்கள் எப்படி கூட்டாக  கட்டிடத்தை உருப்படியாக கட்டி முடிக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். கிட்ட தட்ட அதே நிலைதான் இப்போது நம் ஊரிலும். முன்னெல்லாம் நம்மூரில்  ஆந்திராவை சேர்ந்தவர்கள் கட்டுமான தொழில்களில் அதிகம் வருவார்கள், சென்னையில் தெலுங்கு பேச தெரிந்தவர்கள் அதிகம் என்பதால் பெரிதாக பிரச்னை இருக்காது. ஆனால் இப்போது நம் மக்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சென்ற வாரம் என் மனைவி பத்து நாள் விஜயமாக சவுதி வந்திருந்தார். அக்கம் பக்கம் இருக்கும் அவரது நண்பிகள் அவருக்கு பக்ரித் விருந்து கொடுத்தார்கள் கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் பெண்கள் மட்டும் என்  வீட்டில் உட்கார்ந்து அவரவர் செய்து எடுத்து வந்த திண் பண்டங்களை பகிர்ந்து  உண்டு அளவளாவி சென்றார்கள். இது என்ன பெரிய விஷயம் என்றால், வந்திருந்த ஆறு பெண்மணிகளில் ஒரே ஒரு பெண்ணுக்குத்தான் கொஞ்சம்(எஸ், நோ ,குட் ) என்கிற அளவில் ஆங்கிலம் தெரியும், என் மனைவிக்கு ( கோயிஸ்(fine), சலாம்) என்கிற அளவில்தான் அரபி தெரியும். அதில் ஒரு பெண் சமீபத்தில் குழந்தை பெற்றவள் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை என் மனைவி  எப்படி கேட்டார் என்பதை என்னிடம் விவரித்தார்,விழுந்து விழுந்து சிரித்தேன்,
என் மனைவி அந்த பெண்ணிடம் அந்த குழந்தையை காட்டி "what is his name" என்று இரண்டு மூன்று முறை கேட்டும் அந்த பெண்ணுக்கு புரிய வில்லை..பின்னர் என் மனைவி " I Shakila, You Samaha, He Mohammad என்று ஒவ்வொருவராக காட்டி அவர்கள் பெயரை சொல்லி கடைசியாக அந்த குழந்தையை காட்டி What is his name? " என்று கேட்டு அந்த குழந்தையின் பெயரை தெரிந்து கொண்டுள்ளார்.
சில சமயங்களில் சமையல் பற்றி அவர்களுடன் பேசியதாக சொல்லுவாள், அவர்களிடம் பேசி கற்று கொண்டதை தயவு செய்து எனக்கு சமைத்து கொடுக்காதே என்று கண்டிப்பாக கூடி விடுவேன், அவர்கள் சொன்னதை அரைகுறையாக புரிந்து கொண்டு என்னை இம்சிக்க வேண்டாம் என்பதால்தான் இந்த முடிவு........

கரையான்.