சனி, நவம்பர் 05, 2011

Intresting tweets from TWITTER

தேவதைகள் வெள்ளை உடையில் மட்டுமல்ல எண்ணைய் கறை படிந்த புடவையிலும் அம்மாவாய் வருவதுண்டு

SBI ல் Housing Loan வாங்குவதற்கு பதிலாக பெருமாள் கோவிலில் பிச்சை எடுத்தால் வீட்டுவேலை சீக்கிரம் முடிந்துவிடும்...#அனுபவம்

இந்திய தேசத்தைப் பொறுத்தவரை, தன் ஏழாவது மனைவிக்குத் 'தாஜ்மஹால்' கட்டியவனே சிறந்த காதலன்!

மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்ததை அம்மா தவறாக புரிந்து கொண்டாரோ ?? #சட்டமன்றம் & நூலக மாற்றம்.

அம்மா சொன்னோன மாத்து துணிக்கூட எடுக்காம டக்குனு கெளம்புறாரே போதி தர்மர் !ஓ. பி .எஸ்ஸையே மிஞ்சிட்டார்

அது சரி.. 'மனிதத்தனம்' என்று மிருகங்கள் எந்த விதமான செயல்களுக்குப் பெயர் வைத்துள்ளனவோ..

ஒரே நாளில் தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாவது, விற்பனையானது சிகரெட், டீ, இட்லி மற்றும் இடைதேர்தல்களின் போது ஓட்டு.!

அடிவாங்கி அழுத குழந்தை, சமாதானப்படுத்த தந்த பஞ்சுமிட்டாயை கன்னத்தில் கண்ணீர் மறையாமல் தின்பதும் ஆண்கள் திருமணநாள் கொண்டாடுவதும் ஒன்றுதான்

முட்டையில் இருந்து கோழி வந்ததா என தெரியவில்லை; ஆனால் காமராஜர், எம்.ஜி.ஆர் தொடர்ந்த சத்துணவில் கலைஞர் ஆட்சிக்கு பிறகுதான் முட்டை வந்தது.!

மனிதனை முதல்வனாக்க பெரியார் ஆரம்பித்த கட்சியை இன்று மாறும் முதல்வர்களை கடவுளாக்க பயன்படுத்துகிறார் வீரமணி.!

இந்தியாவில் லஞ்ச ஒழிப்பு துறை உண்டு, ஆனால் ஊழல் ஒழிப்பு துறை உண்டா? அன்னா ஹசாரே சொல்றதிலையும் ஒரு அர்த்தம் இருக்குப்பா...

66 கோடி ரூபாய் வழக்கிற்கே 1350 கேள்விகள்னா, 176000 கோடி ரூபாய்க்கு எத்தனை கேள்விகளோ? அடடடடா அப்பப்பப்பா

லஞ்சம் வாங்குவதும்;கொடுப்பது குற்றம் - சூப்பர்; அப்புறம் எப்படி தான் காரியம் சாதிக்கிறது?

தங்கபாலுவை கைது செய் என கோஷமிட்ட 11 பேருக்கு ரூ 200 அபராதம் # தலைவரை திட்டுறது உங்களுக்கு பப்ளிக்ல தம்மடிக்கிற மாதிரி ஆய்டுச்சா?

எல்லாவற்றுக்கும் கோபப்பட்டால் ஹர்பஜன்சிங்; எதுக்குமே கோபப்படாவிட்டால் மன்மோகன்சிங்.!

பீகாரில் 70% மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் - ஐ.நா # திகாரில் 100% பணக்காரர்களே இருக்கிறார்கள்,அதுக்கு என்ன செய்றது நைனா?

வயசு பையன் ஒருவன் பத்து பெண்கள் இருக்கும் இடத்தை எப்போ எந்த கிண்டலும் கேலியும் இல்லாமல் கடக்கிறானோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம்

Chocks

1 கருத்து:

  1. அடிவாங்கி அழுத குழந்தை, சமாதானப்படுத்த தந்த பஞ்சுமிட்டாயை கன்னத்தில் கண்ணீர் மறையாமல் தின்பதும் ஆண்கள் திருமணநாள் கொண்டாடுவதும் ஒன்றுதான்......chockaa namakku daily panchu mittaaithaan.......

    karaiyaan.

    பதிலளிநீக்கு