வியாழன், நவம்பர் 03, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம்


தமிழகத்தில் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கும் கூடங்குளம் அணுமின் பிரச்னை சில பல அரசியல் காரணங்களால் வேறு உருவெடுத்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.  மத சார்பற்ற அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் அரசுகள் தங்களுக்கு லாபம் உண்டென்றால் மத உணர்வுகளை கிளப்ப தயங்காது என்பதற்கு இந்த பிரச்சனை ஒரு சிறந்த உதாரணம்.
இந்த போராட்டங்கள் வலுப்பெற கிருத்துவ பிஷப்புகள் வெளி நாடுகளில் பணம் பெற்றுக்கொண்டு 
நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்துவதாக ஒரு விஷமத்தனமான 
பிரச்சாரத்தை நடுவண் அரசே முன் நின்று நடத்துவது ஒரு கேவலமான அரசியல். கிருத்துவ பிஷப்புகள் என்ன வெளி நாட்டிலிருந்தா வந்தார்கள், அவர்களும் இந்திய குடிமக்கள்தானே, அவர்களுடைய 
குழந்தைகளும் சந்ததியினரும் இந்தியாவில்தானே வாழ்கிறார்கள், அவர்கள் எதிர்த்தால்
என்ன தவறு.  ஏற்கனவே அன்னா ஹசாரே  அவர்களின் போராட்டத்திற்கு மத சாயம் பூசி பிளவை உண்டாக்க முயற்சித்தது மத்திய அரசு அதே கொள்கையை பின்பற்றி இப்போது கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்போரிடையில் பிளவை ஏற்படுத்த ஒரு கேவலமான உத்தியை கையாண்டு வருகிறது. இவ்வளவு நாள் இல்லாமல் திட்டம் முடியும் நிலையில் ஏன் இந்த எதிர்ப்பு என எல்லோருக்கும் சந்தேகம் எழலாம்,
புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திற்கு பின்னர்தான் அணு உலைகளால் ஏற்படக்கூடிய அழிவின் தாக்கம் உலகிற்கு தெரிந்தது. தொழில் நுட்பத்தில் உலகின் முதல் நிலை நாடான ஜப்பான் நாடே இயற்கை
சக்தியின் முன் ஒன்றும் செய்ய இயலாதபோது நாம் சிறந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கி விபத்தே ஏற்படாதவாறு உண்டாக்கி உள்ளதாக மார்தட்டி 
கொள்வது வீண் ஜம்பமே ஒழிய ஏதுமில்லை. இதில் அரசு வீண் கெளரவம் பார்க்காமல் முடிவெடுப்பதே சிறந்ததாகும்...

கரையான்.

3 கருத்துகள்:

  1. I cannot come to a strong conclusion in this.
    We need developments,uninterrupted electricity for 24 hours.No sense in wasting electricity,water,fuel etc.But if somebody starts to shout against one thing all doing the same due to media hype.Why the same agression not happened when Kalpakkam power sattion started.
    When 5% of Atom bombs what developed and developing countries owned the entire human race can be demolished. We have to think about the secutarised automic power generation instead of simply shouting.
    chocks

    பதிலளிநீக்கு
  2. This is not due to media hype, interestingly the national media is not giving much importance to this issue compared to the jagadapur atomic power plant, Maharashtra. This was due to the problems faced due to Fukushima Nuclear Power Plant, Japan and the Rehersal done at the Kudankulam Power plant just before commissioning also infuriated the locals. Without prior announcement, the management of the Power plant suddenly announced the people to evacuate their homes(within 7km radius)immediately. this has caused panic and the people are fighting (not the political leaders or religious leaders)... Kalpakkam was started well before the people know the ill effects, and there are so many people fighting against it even now, only thing is they dont get enough media attention.There is a high cancer rate in villages around kalpakkam.
    Karaiyan.

    பதிலளிநீக்கு
  3. Thanks for spreading the awareness folks. Cancer clusters around nuclear plants have been well documented here and there is a plethora of evidence for it. I know that nuclear power as a source of energy is a great idea but after what happened in Japan perhaps we may have to think about it with a different perspective.
    Gujili

    பதிலளிநீக்கு