இந்த தலைப்பு கொஞ்சம் நண்பர்களின் எரிச்சலை தூண்டும், இருந்தாலும் உண்மையை சொல்லித்தானே ஆகணும். தாய்லாந்து சிறிய நாடுதான், நம்மை விட வளங்கள் குறைந்த நாடு, சுற்றுலாவை நம்பி உள்ள நாடு. அங்கு ரயில் பாதையை ஒட்டி உள்ள கடைகள் ரயில் வரும் வேளையில் நீக்கப்பட்டு ரயிலுக்கு வழி விடுவதை ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தது. மிக நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன, இதை பார்ப்பதற்காக சுற்றுலா வரும் வெளிநாட்டினர் காத்திருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையும் அறியாமலே தண்டவாளங்களை ஒட்டி என் கண்கள் தேட ஆரம்பித்தது, ஒரு குப்பையாவது கண்ணில் படுமா என்று. குப்பைகளோ மனித கழிவுகளோ பார்க்க முடிய வில்லை. மிக சுத்தமாக இருந்தது, நம் நாட்டில் ரயில் பாதைகள், ரயில் நிலையங்களிலேயே மிக அசுத்தமாக இருப்பதை பார்க்கிறோம், இது நம் மக்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. சவுதியில் இருக்கும்வரை இரவு பன்னிரண்டு மணிக்கு கூட சிவப்பு விளக்கு சிக்னலில் நின்று போகின்றவர் சென்னையில் பகலில் கூட அதை மதிப்பதில்லை. சவுதியில் சிவப்பு விளக்கு சிக்னலில் நிற்காமல் போனால் இருபத்து நான்கு மணி நேரம் சிறை தண்டனை, சென்னையில் சிவப்பு விளைக்கை இடித்து விட்டு சென்றாலும், நான் இன்னாரோட இன்னார் என்று சொல்லி இன்புளுயன்சை உபயோகித்து தப்பி விடலாம் என்ற மனப்பான்மை.
குப்பையை எங்கு வேண்டுமானாலும் கொட்டலாம், இதில் நீர் நிலைகள் தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது. கோவில் குளங்கள் கூட இதில் தப்பவில்லை. அரசே சில ஏரிகளில் குப்பைகளை கொட்டி வருகால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை கெடுப்பது நம் நாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும். காதலிப்போர் தம் காதலை கிறுக்க நம் புராதன சின்னங்கள் கூட தப்புவதில்லை.
சிறிய நாடுகள் கூட சுற்று சூழலை பேணிகாக்க சுத்தம் போதிக்கும்போது நாம் விழிக்காமல் இருப்பது நமக்கு சிறுமையே.....
கரையான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக