தலைப்பு கேள்வி நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் facebook பக்கத்தில் கேட்டிருந்தது......
வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் இந்தியாவின் greatness . அளவுக்கதிகமான சுதந்திரம், பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், மொழி, கலாசாரம், உணவு என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வு பல தேசங்களாக பிரியாமல் வைத்துள்ளது. சோவித் யூனியன் சர்வாதிகாரம் இருந்த வரை கட்டுக்கோப்பாக இருந்தது, கோர்பசேவ் பிடியை தளர்த்தியவுடன் கட்டவிழ்த்த நெல்லிக்காயாய் சிதறியதை நாம் அனைவரும் அறிவோம். இப்படி பல தேசங்களை குறிப்பிடலாம். நாகரிகத்தில் நம்மை விட முன்னேறியவர்களாக காட்டிக்கொள்ளும் மேற்கத்தியவர்கள் மதம், மொழி காரணம் காட்டி பிரிந்த சம்பவங்கள் சமீபத்தில் கூட நடந்ததுண்டு, செகொஸ்லாவாகியா உதாரணமே இதற்கு போதுமானது(போஸ்னியா மற்றும் செர்பியா என்று பல உதாரணங்கள் ). ஆப்ரிகா வில் தெற்கு மற்றும் வடக்கு சுடான் என சுடான் நாடு இரண்டாக பிரிந்ததும் மதத்தின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. இப்படி பல உதாரணகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நமக்கு இருக்கும் பலவீனங்களில் ஒன்று தாழ்வு மனப்பான்மை, வெள்ளைக்காரனிடம் தம்மை உயர்த்திக்கொள்ள நம் நாட்டவரைப்பற்றி கேவலமாக பேசுவதை பார்த்திருக்கிறேன், நம் பழக்கங்களை கிண்டலாக பேசி அவர்களை சிரிக்க வைப்போரும் உண்டு. அவர் சிரிப்பது நம்மையும் பார்த்துதான் என்பதை நாம் உணர வேண்டும். நம்மிடம் பலவீனங்களே இல்லையா என கேட்கலாம், உண்டு மற்ற நாடுகளில் உள்ளதைப்போலவே நம் நாட்டிலும் உண்டு. நம் நாட்டு உணவுகள் மற்றும் பரிமாறும் முறைகள் வேறு எங்கும் இருக்குமா எனக்கு சரியாக தெரிய வில்லை. ஒரு முறை ஒரு மேற்கத்திய நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவரை விருந்துக்கு அழைத்திருந்தேன், அப்போது அவரிடம் சைவ உணவுகள் மட்டும் சாப்பிட முடியுமா என கேட்டேன், குமரன் நான் மேற்கத்தியவன் என்னால் அசைவம் இல்லாமல் ஒரு வேலை கூட சாப்பிட முடியாது என்றான், நீ வா அருமையான அசைவ உணவு தருகிறேன் என்றேன், ஆனால் அன்று நம் ஊர் சாம்பார் இட்லி மற்றும் தென்னிந்திய உணவுகளை மட்டுமே சாப்பிட்டு விட்டு அவன் அசைவ உணவுகளை தொடவே இல்லை. ஒவ்வொரு நாளும் இப்படிதான் மணிக்கணக்கில் சமையலறையில் கழிப்பாரா உன் மனைவி என வியந்து கேட்டான்... தினமும் அவளால் இப்படி உணவுகள் தயாரிக்க இயலாது, இதில் பாதியாவது இருக்கும் என்றவுடன் "எனக்காகவா இவ்வளவு சமைத்தார், great, நாங்கள் விருந்தினர்களுக்காக இவ்வளவு நேரமெல்லாம் செலவு செய்ய மாட்டோம்" என்றான்.
குடும்ப அமைப்பு கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். மனைவி குழந்தைகள் என்றில்லாமல் அம்மா, அப்பா, மாமியார்,மாமனார் , மனைவி வழி உறவுகள், கணவர் வழி உறவுகள், உறவுகளின் உறவுகள் என நம் குடும்ப அமைப்பு ஒரு சங்கிலி தொடர்போல் முடிவில்லாதது. அமெரிக்காவிலிருந்து எங்கள் பண்ணைக்கு குதிரை சம்பந்தமான துறையை சார்ந்த ஒருவர் வந்திருந்தார், அவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த கதையை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார், நான் அவரிடம் உங்கள் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டேன், கொடுமை என்று பதிலளிப்பார் என்று நினைத்திருந்தேன், நான் திரும்ப ஒரு முறை செல்ல வேண்டும் என்று நினைக்க வைத்தது... நகரங்களில் இருக்கும் liveliness கிராமங்களில் மக்களின் சிநேகிதம் மற்றும் பெரும்பாலானவர்களின் ஆங்கில அறிவு amazing என்றான். மிக சரளமாக பேசவில்லை என்றாலும் வெளிநாட்டவருக்கு புரிய வைக்க கூடிய அளவில் உங்கள் மக்களின் ஆங்கில திறன் உள்ளது என்றான். இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.....இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.......
(NOT GREAT என்பவர்களின் வாதம் அடுத்த பதிவில் பார்ப்போம்)...
கரையான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக