சனி, அக்டோபர் 15, 2011

காதலில் வீழ்ந்தோர்(வாழ்ந்தோர்)


காதலிக்கும் யுவன் யுவதிகள் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று சென்ற வாரத்தில் பார்க்க நேர்ந்தது... அதில் பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் தவறில்லை என்று வாதிட்டது ஆச்சரியமாக இருந்தது. ஒருவரை, ஆணோ பெண்ணோ நமக்கு ஏற்றவர் என்று  தேர்ந்தெடுத்து காதலிக்க துவங்குகிறோம், சில நாட்களில் அவரை விட சிறந்தவரை பார்க்க
வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது, உடனே பழையவரை  விட்டு புதியவரை காதலிக்க தொடங்குவது எப்படி காதலாகும். ஒரு வேளை காதலில் தோல்வி ஏற்பட்டு வேறொருவரை தேடினால் ஒப்பு கொள்ளலாம்,
இது கிட்டத்தட்ட எப்படி இருக்கிறதென்றால் சாதாரண பஸ்ஸில் பயணம் செய்யும்போது பின்னாலேயே வரும் எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் டிலக்ஸ் பஸ்ஸில் மாறிக்கொள்வது போல் உள்ளது, குளிர்சாதனம்  பொருத்திய பேருந்து பின்னால் வந்தால் அடுத்த தாவல் இருக்கும்.
 இதுதான் கள்ள காதல், திருமணத்திற்கு பின்  துணை அல்லாதவருடன் உண்டாவது  கள்ள உறவு என்றுதான் கூற வேண்டும். திருமணம்  ஆன பின்னால் ஒரு வேளை இப்போதுள்ள வாழ்க்கை துணையை விட ஓரளவுக்கு சிறப்பானவர் கிடைத்தால் மாற்றி கொள்வார்களோ?? இது எந்த வகையான மனோபாவம். கணவனோ மனைவியோ இறந்து விட்டால் அல்லது விவாகரத்து செய்தால்  கண்டிப்பாக வேறொரு துணை தேடிக்கொள்ள வேண்டும்(இருபாலரும்) அது எந்த வயதாக இருந்தாலும்...இதில் மாற்று கருத்தில்லை...ஆனால் காதலிக்கும்போதே இதைவிட சிறந்ததாக கிடைத்தால் இருப்பதை கழட்டி விடுவது என்பது கொஞ்சம் "animal behaviour" ஆகத்தான் எனக்கு படுகிறது......
நண்பர்கள்/நண்பிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.....

கரையான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக