ரொம்ப நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. அவரவர் தம் தம் வேலைகளில் கொஞ்சம் பிசியாகி விட்டதால் எழுத முடிய வில்லை. இன்று முதல் தொடங்குவோம்.
விடுமுறையில் சென்னை சென்றிருந்த பொது ஒரு குட்டி get-to-gether நம்ம மக்கள் அப்படியேதான் இருக்காங்க, உருவம் மட்டும்தான் மாறியுள்ளது உள்ளம் அப்படியேதான் இருக்கு. Beverly Bar ல சாயந்திரம் ஏழு மணிக்கு சந்திக்கலாம்டான்னு சொன்னால், பாண்டு மனோகரன் சாயந்திரம் ஆறு மணிக்கே பாருக்கு வெளியில நின்னுக்கிட்டு எப்பட எல்லாம் வருவீங்க என்று போன் மேல போனா போட்டு தள்ளுரான், ரமேஷ் முக்கியமான கல்யாணத்துக்கு போகனும்டா, வந்து தலைய மட்டும் காட்டிட்டு போயிடுவேன் இருக்க சொல்லி கம்பெல் பண்ணக்கூடாது என்று பந்தா விட்டவன் நைட்டு பன்னெண்டு மணிக்கு பாரு முடியதுக்கு அப்புறம்தான் சீட்டை விட்டு எழுந்தான் . நம்ம பாண்டியன் நான் டயத்துல இருக்கேன் பாத்துக்க கொஞ்சமாதான் drinks எடுத்துக்குவேன், ரொம்பல்லாம் குடிக்க முடியாது என்று பந்தா விட்டவன் நாலு பாட்டில் பீர் உள்ளே போன பின்னாலும் அவ்வளவுதானா என்பது போல் அலுத்துக்கொண்டான், பாண்டியா இதுதான் உன்னுடைய dieting ஆ எப்பா சாமி தாங்காதுடா என்று அலற வைத்து விட்டான்.(டயட் ல இல்லையென்றால் எத்தன பாட்டில் உள்ள போய் இருக்குமோ), TP அடுத்த ரவுண்டுக்கு ரிபீட் சொல்ல சொல்ல எனக்கு கொஞ்சம் பயம்தான், அவனுக்கு உள்ள போன வேகத்துல திரும்ப எல்லாம் வெளியில வந்திடுமே என்ற கவலை எனக்கு நான்தானே அவன் பக்கத்திலே உட்காந்திருக்கேன். உழவர் பயிற்சி முகாம் இருக்கு மச்சி நான் வர்றது கொஞ்சம் கஷ்டம்டா என்று பந்தா விட்ட குமாரவேலு மதியம் மூணு மணிக்கெல்லாம் போன் செய்து "உனக்காக உழவர் பயிற்சிய அப்பறம் பாத்துக்கலாம்னு ஒத்தி போட்டுட்டேண்டா வருஷத்துக்கு ஒருமுறை வர்றே இது கூட செய்யலன்ன எப்படி"
ஐயா சாமி என்னால நம்ம நாட்டோட விவசாய முன்னேற்றம் பாதிக்க வேண்டாம் நீ வேணும்னா வேலைய பாரு " என்றேன் நான்.
பாய் "டேய் நான் நெல்லைய புடிக்கணும் ஏழு மணிக்கெல்லாம் எக்மோருக்கு கெளம்பிடுவேன் என்ன சீக்கிரம் வுட்டுடுங்கடா என்று பந்தா விட்டு வந்து மாம்பழ ஜூஸ் குடிச்சு கெளம்பிட்டாரு நெல்லை சீமைய புடிக்க. டேய் வீட்டுக்கு போகணும் ரெண்டு ரவுண்டுதான் அதுக்கு மேல முடியாது என்று கூறிவிட்டு என்னடா நாலு ரௌண்டுதானா என்று கூறி பார விட்டு எழுந்திரிக்க மனம் இல்லாமல் வந்தான் பாண்டு. சேவியர் தொழிலதிபர் கெட் அப்புல வந்து கொஞ்சமா பெப்சி மட்டும் குடிச்சிட்டு கோழி விக்கிற தொழில ரகசியத்த எல்லாம் போட்டு உடைச்சான், பழைய கதையெல்லாம் பேசி சிரிச்சு பார கலக்கிட்டு அவுங்க அவுங்க வீட்டுக்கு நல்ல புள்ளையா அஜந்தா பாக்கு போட்டு நாத்தத்தை மறக்கரதா நினச்சு போனால் பொண்டாட்டி சிரிக்கிறா "இன்னைக்கி தண்ணியா "
எப்படி கண்டிபுடிச்ச நான்தான் நாத்தம் வராம இருக்க பாக்கெல்லாம் போட்டிருக்கேனே."தண்ணி அடிக்கிற அன்னைக்கிதானே பாக்கு போடுவே அது கூடவா எனக்கு தெரியாது."
கரையான்.