gujili avarkale பல நகைச்சுவை அனுபவங்கள் என் சொந்த அனுபவங்களும் உண்டு என்பதை நான் வெட்கம் இல்லாமல் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
நண்பர்கள் சிரிக்க மேலும் சில நகைச்சுவைகள் biலாகில் படித்தது.
பேரங்கள் எப்படிப் படியும்? அதீத சாமர்த்தியசாலி யாரோ அவருடையநோக்கத்திற்குப் படியும்.அதை விளக்கிக் கற்பனைச் சம்பவம் ஒன்றை ஒருவர் எழுதியிருக்கிறார்.அதை நீங்கள் அறியத்தருவதில் உவகை கொள்கிறேன்.படித்து மகிழுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காட்சி ஒன்று:ஒரு தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் நடக்கும் உரையாடல்!"மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்""நோ, டாடி, என் விருப்பப்படி என் திருமணம் அமைவது நல்லது. பெண்ணைத்தேர்ந்தெடுப்பதை என்னிடம் விட்டு விடுங்கள்"பெண் யாரென்று தெரிந்தால் நீ மறுக்க மாட்டாய்"ஆர்வத்துடன் மகன் கேட்டான்: "யாரது டாடி!"பெண் பில்கேட்ஸின் மகள்""அப்படியென்றால் டபுள்ஓக்கே !"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காட்சி இரண்டு:அடுத்து அந்தப் பையனின் தந்தை பில்கேட்ஸைச் சந்தித்துப் பேசுகிறார்"உங்களுடைய மகளுக்கு என்னிடம் ஒரு நல்ல வரன் இருக்கிறது!""என் மகளுக்கு இப்போது திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை. ஒரு ஆண்டுசெல்லட்டும்.""நான் சொல்லும் இளைஞன் உலக வங்கியின் துணைத் தலைவர்."ஆச்சரியம் அடைந்த பில்கேட்ஸ், உற்சாகமாகச் சொல்கிறார் "ஆகா, சின்னவயதிலேயே உலக வங்கியின் துணைத் தலைவரா? அப்படியென்றால் எனக்குச்சம்மதமே!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பையனின் அப்பா, முடிவாக உலகவங்கியின் தலைவரைச் சந்திக்கிறார்."உங்கள் வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு அசத்தலாகப் பொருந்தக்கூடியஇளைஞன் ஒருவனை எனக்குத் தெரியும். அழைத்து வரவா?""வேண்டாம். ஏற்கனவே அந்தப் பதவியில் இருவர் இருக்கிறார்கள்""ஆனால் நான் சொல்லும் இளைஞன் பில்கேட்ஸின் மாப்பிள்ளை!""ஓ..... அப்படியென்றால் உடனே பதவியளிக்க நான் தயார்!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்படித்தான் உலகலவில் முக்கியமான பேரங்கள் நடக்கின்றன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக