நம் நண்பர்கள் சிரிக்க சில சர்தார்ஜி/மதராசி ஜோக்ஸ்
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.
நண்பர்: இப்போ என்ன ஆச்சு?
சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!
கோர்ட்டில்...
ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..
சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?
சர்தார் B.A (Bachelor Again)
சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?
சர்தார் M.A (Married Again)
சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..
சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..
சர்தார்ஜிகளின் புத்திசாலி தனத்திற்காகவும் ஒரு ஜோக்
இங்கிலாந்து. ரயில் நிலையம். மூன்று சர்தார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மூன்று வெள்ளையர்கள். சர்தார் போய் ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி வந்தார். வெள்ளைக்காரர்களுக்கோ ஆச்சரியம். எப்படி ஒரே ஒரு டிக்கட்டில் இவர்கள் பயணம் செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார்கள் . ரயில் வந்ததும் எல்லோரும் ஏறினர். டிக்கட் செக் பண்ண ஆள் வந்தபோது மூன்று சர்தாரும் எழுந்து கழிவறைக்குள் சென்று நின்று கொண்டார்கள். TTE கதவை தட்ட ஒரே ஒரு கையை மட்டும் நீட்டி டிக்கட்டை நீட்ட, அவர் போய் விட்டார். ஆகா, இத்தனை நாள் இதை நாம் செய்யாமல் போய் விட்டோமே என்று வெள்ளைக்காரர்களுக்கு தோன்றியது. திரும்பி வரும்போது வெள்ளைக்காரர் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தார்கள். இந்த முறை சர்தார்கள் ஒரு டிக்கட் கூட எடுக்க வில்லை. மற்றவர்களுக்கோ குழப்பம். என்னடா இந்தத் தடவை டிக்கட்டே எடுக்க வில்லை, சரி பார்ப்போம் என்று ரயிலில் ஏறினார்கள். வெள்ளை மக்கள் மூவரும் TTE வருவதைப் பார்த்தவுடன் கழிவறைக்குள் ஓடி விட்டனர். இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்.."சார்.. டிக்கட்..?"
இதெல்லாம் மாற்ற பிளாகில் நான் படித்தது, நண்பர்களுக்காக....
கரையான்.
உங்க கிட்ட இன்னும் எதிர் பாக்கிரேன் நல்ல தம்பி....
பதிலளிநீக்கு