திடீரென்று மனைவி தாயகம் செல்ல வேண்டிய நெருக்கடி, பிள்ளைகளுக்கு பரீட்சை நேரம் என்பதால், நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், பண்ணையில் வேலை செய்வதால், இது ஒரு சவுகரியம் பணி நேரத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம் , இருபத்தைந்து நாட்களுக்கு குழந்தைகளை கவனித்து, உணவு சமைத்து,பாத்திரம் கழுவி,துணி துவைத்து,etc..etc எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம். புள்ளைங்க எப்படியெல்லாம் என்ன நெனச்சி கஷ்டப்படபோவுதோ,சின்னவ ராத்திரி எழுந்து அழுதா அவளுக்கு பூஸ்ட் பாலில் கலந்து கொடுத்திடுங்க,"செல்லங்களா உங்க எல்லோருக்கும் அம்மா ஐந்து ரியால் கொடுக்கிறேன், பள்ளியில ஏதாவது வாங்கி சாப்பிடுங்க, என்ன அப்பாவ கஷ்டப்படுத்த கூடாது.என்று ஒரு பெரிய லெக்சர் கொடுத்துவிட்டு என் மனைவி ஊருக்கு கிளம்பி சென்ற வுடன் குழந்தைகள் அனைவரும் என்னமோ "20-20 உலக கோப்பை ஜெயித்த வீரர்கள் போல ரெண்டு கையையும் உயர்த்தி தட்டிக்கொண்டு குதியாட்டம் போட்டதை பார்த்து கொஞ்சம் மிரண்டு போய் விட்டேன். என்னவோ ஹிட்லர் கொஞ்ச நாளுக்கு casual leave போட்டுட்டு போறது போல பசங்க குதியாட்டம் போட்டத என் பொண்டாட்டி பாத்திருந்தால் அவ்வளவுதான்....
மனைவியை ஊருக்கு அனுப்பிய அடுத்த நாள், கண்ணீர் சிந்தி கஷ்டப்பட்டு வெங்காயம் வெட்டிக்கொண்டு இருக்கிறேன், சின்னவள் அக்ஷ்யா என்னிடம் வந்து ஏனப்பா அம்மா ஊருக்கு போய்ட்டாங்கன்னு அழரயா, இன்னும் கொஞ்சம் நாள்தான்ப்பா நம்ம எல்லாம் ஊருக்கு போய் அம்மாவ பாக்குலாம்,கவலைப்படாதே" உங்களுக்கெல்லாம் அம்மா ஊருக்கு போனது கஷ்டமா இல்லையாம்மா என நான் கேட்டேன், இதெல்லாம் பெரிய விஷயமாப்பா, அதான் நீ இருக்கிறே சமைக்க மற்ற எல்லாம் வேலையும் பார்க்க, உன்னால முடியலன்னா HERFY இலையோ MC டானல்ட்,KFC லியோ சாப்பிட்டுக்க வேண்டியதுதான்.
பண்ணையில வேலை நெருக்கடி போதாதுன்னு வீட்டு வேலையும் சேர்ந்ததால், சிக்கன் செய்யும்போது உப்புக்கு பதில் சர்க்கரையை கொட்டி குழந்தைகிளின் கிண்டலை சமாளித்தது ஒரு பெரிய காமெடி.
பெரியவள் காயத்திரி" அப்பா நீயே அம்மாவ விட நல்லாத்தான் சமைக்கிரே அம்மாவ வேணும்னா அங்கயே இருந்து பாட்டியை பாத்துக்க சொல்லலாம்பா"
ஒரு முறை குஜிலி நான் செட்டிநாடு குதிரைப்பன்னையில் பணிபுரியும்போது அங்கு வந்திருந்தார், "குமரன் குழந்தைங்க ரொம்ப வேகமா வளருவாங்க, இப்பதான் குழந்தையா பாத்தா மாதிரி இருக்கும் அதுக்குல்ள்ள இவ்வளவு பெரிசாயிட்டங்கலேன்னு மலைப்பா இருக்கும்" என்று கூறியதுதான் இப்போது நினைவு வருகிறது.
"டேய் கார்த்தி பரீட்சைக்கு படிக்கிறயா, நான் சொல்லி தர்றேன் உன்னோட பாட புத்தகம் எடுத்து வா" என்று நான் கூறினால் "அப்பா உனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா, நீ படிச்சது வேற இப்ப நாங்க படிக்கறது வேற, இது கொஞ்சம் கஷ்டமப்பா" அவன் எனக்கு சொல்லி தருகிறான்.
நான் படும் கஷ்டத்தை பார்த்து இங்குள்ள நண்பர் ஒருவர் அவர் குடும்பத்துடன் வந்து அவர் மனைவியை விட்டு சமைத்து கொடுத்து விட்டு சென்றார், குழந்தைகள் சாப்பிட்டு விட்டு "ஐயோ பாவம்ப்பா அந்த அங்கிள்" என்று அடிக்கும் கமென்ட் கொஞ்சம் எனக்கே ஓவராகத்தான் படுகிறது.
இன்னும் பதினாறு நாட்கள் கடத்த வேண்டும், அதற்குள் இன்னும் என்னவெல்லாம் காமெடி நடக்கப்போவுதோ.....
கரையான்.