செவ்வாய், நவம்பர் 23, 2010

பெயர் பலகை

நம்ம கருப்ப்ஸ் எப்பவும் அவன் அறையை ஒரு gazetted officer அறை போல வைத்திருப்பதாக நினைத்து கொண்டு கோமாளித்தனமாக ஏத்தாவது செய்து கொண்டு இருப்பான். ஒரு முறை ஹாஸ்டல் வார்டன் டாக்டர் திலகர் இன்ஸ்பெக்ஷன் ஒவ்வொரு அறையாக வந்தார், அப்போது நம் கருப்ப்ஸ் அறையில் உள்ள டேபிளில் DR. C.KARupPUChAMY என்று இருந்த பெயர்பளைகையை பார்த்து டென்ஷன் ஆகி விட்டார், யோவ் என்னய்யா இது எங்கேருந்து தூக்கி வந்தே என்றார், இல்ல சார் வாங்கினேன் சார் என்றான்,அதுக்கு ஏன்யா இப்படி விதம் விதமா இருக்கு து என்றார், இல்ல சார் வேற வேற கடையில வாங்கியது என்றான், என்னய்யா உன்னோட பேர ஒவ்வொரு கடையில பாதி பாதியாக செஞ்சா என்றார், ஒன்னு வெள்ளையா இருக்கு, ஒன்னு கலர் மங்கி இருக்கு என்றார், அப்போதும் அவன் விடாமல் "இல்ல சார் ஒவ்வொரு கடையில வாங்கியதால் அப்படி இருக்கு" என்றான், இவனிடம் கேட்பது வேஸ்ட் என அங்கிருந்து சென்று விட்டார், பின்னர் கருப்ப்ஸ் என்னிடம் " எல்லா டிபார்த்மண்டுளையும் ஒரே மாதிரி வைக்க வேண்டியதுதானே, ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி வைத்து நம்ம உசிர வாங்குறாய்ங்க " என்றான். Microbilogy போர்டில் Dr.VENKATA SUBBA RAO என்று இருந்த பெயர் Dr. VENTA SBB AO என்று ஆகி இருந்தது. இன்னும் வேறு சில டிபார்த்மண்டுகளில் மற்ற சில பெயர்கள் மாறி இருந்தது கருப்ப்ஸ் கை வண்ணத்தில்.
கரையான்.

திங்கள், நவம்பர் 22, 2010

ஷிம்லா - மசூரி: dedicated to Dr. அசோகன் & பிரதாபன்

நமது ஆல் இந்தியா டூரில் பார்த்த இடங்களில் என்னக்கு பிடித்தமானது கெம்ப்டி பால்ல்ஸ், மசூரி. ஆனால்அங்கு போய் சேருவதற்கு எடுத்த பஸ் பயணம் மறக்கமுடியாது. பஸ் டிரைவர் அந்த மலையை சுத்தி சுத்தி ஓட்டும் போது ஜன்னல் வெழியே பார்க்கும் போது இயற்கை காட்சிகள் எல்லாம் சூபர். ஆனால்மலையை சுத்தி சுத்தி வருவது என்னுடைய மூழையில் உள்ள வாந்தி center க்கு பிடிக்கவில்லை. அந்த நினைவு மறக்க முடியாதது. என்னை பார்த்த GFK விற்கும் மயக்கம் வந்து என்னுடன் சேர்ந்து ஒரே projectile reverse peristalis தான்! (இது தான் ஆருயிர் தோழிகளின் பாசம் என்பது போல) இந்த நினைவை நமது ஆசிரியர்களும் நன்றாக ஞாபகம் வைத்துள்ளனர். போன முறை இந்தியா சென்ற போது, கல்லூரியிற்கு சென்றிருந்தேன். அப்போது பிரதாபன் அவர்களை பார்த்தவுடன் முதல் நான் ஏதும் சொல்வதற்கு முன்னால் அவர் - "உங்கள் வகுப்பை எவ்வாறு மறக்க முடியும்? நானும் அசோகனும் உங்களுடன் ஆல் இந்தியா டூர் சென்றோமே, அது மட்டும் அல்லாமல் ஷிம்லா மசூரி சென்ற போது பஸ்செல்லாம் நீயும் தீபாவும் பயங்கரமாக வாந்தி பண்நீர்களே" என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் - "என்ன சார் நீங்க இப்படி மானத்தை கப்பலில் ஏத்தி விட்டீர்களே, என்ன பார்த்ததும் இதுவா உங்கள் நினவிற்கு முதல் வருகின்றது? " என்று கேட்டேன். "இல்லை இல்லை உங்கள் வகுப்பு பண்ண மத்த கலாட்டகளை எல்லாம் எப்படி மற்றக முடியும்? உங்கள் வகுப்பு கால்நடை மருத்துவ கல்லூரியின் history இல் பயங்கர குறும்பு பண்ண கோஷ்டிகள் ஆச்சே" என்றார். இதை compliment ஆய் எடூபதா, insult ஆ அல்லது சும்மா ஜோக் என்று எடுத்துகொள்வதா என்று கேள்வி கேட்டு கொண்டேன். இப்போது இதை எல்லாம் நினைத்து பார்த்தல் அசோகனும், பிரதபனும் - என்ன பாவம் பன்னோமோ போன ஜென்மத்திலே, குடும்பத்தையும், விட்டு விட்டு இந்த பிசாசு கும்போளோட ஒரு மாசம் குப்பையை கொட்டுவதற்கு, என்று யோசிதுருபார்கள். நாமோ - புண்ணியம் செஞ்சோம் போல, போன ஜென்மத்திலே, மத்தபடி இந்த மாதிரி சாது ஆசிரியர்கள் நம்மோடு ஆல் இந்தியா டூர் வந்திருக்க மாட்டார்கள். (அசோகன் பிரதாபணிற்கு பதிலாக கதிரேசன் அல்லது மங்கள் ராஜ் அல்லது எச்ட்டேன்சியன் மகாதேவன் வந்திருந்தால் எப்படி இரிந்திருகும், யோசிச்சி பாருங்கள்); ஒரு முறையும் அவர்கள் இருவரும் நமது மக்கள் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருந்தனர். நமது குறும்புகள் யாவற்றையும் சகித்து கொண்டனர்.
வாழ்க அசோகன், வாழ்க பிரதாபன்!

சவுதியில் ஒட்டகங்களின் விலை

http://arabnews.com/saudiarabia/article197725.ece
விலை அதிகமான ஒட்டகங்கள் விற்கப்பட்டதை பற்றிய செய்தி.
கரையான்.

ஞாயிறு, நவம்பர் 21, 2010

டூர்-இரண்டு

சிறந்த முன்னேற்பாடு :
ஆரம்பமாக,நான் ஒரு கூட்டம்,நெருங்கிய நண்பர்களுக்கிடையில்,ஹோச்டேளில் கூட்டினேன்.நான்,செமி,குண்டன்,பாண்டி,கட்டையன்,ஆனந்தன் ஆகியோர் ,அதில் அடக்கம்.நாம் ஒரு குழுவாக,சேர்ந்து ,எல்லாவற்றிலும் பகிர்ந்து கொண்டால் என்ன என்ற ஆலோசனையை முன் வைத்தேன்.உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது. டே ஸ்காலர் நண்பன் கரயானையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டுகோள் வைத்தோம்.அவனுடைய குணத்திற்கு ,யார் மறுப்பு தெரிவிப்பார்கள்.சேர்க்கப்பட்டான். எட்டு பேர் குழு ரெடி.ஒவ்வருவரும்,தலா ருபாய் இரண்டாயிரம் ,பங்கு செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.என்னை தலைவராகவும்[Chief Operations Manager?],கட்டையனை காசாலரகவும்[ Chief Financial Officer?],பாண்டியை உணவு மெனு சொல்லுபவராகவும் [Chief Food Indenter?- அன்று நாங்கள் கொடுத்த பொறுப்பினால் ,இன்று இந்திய உணவுக் கழகத்தில் ,மிகப் பெரிய அதிகாரி] தேர்ந்தெடுக்கப்பட்டது.தேவைப்படின்,கரையானை துணை C.F.O., and குண்டனை துணை C.F.I. ஆகவும் பயன்படுத்தலாம் என்றும் முடிவெடுத்தோம்.பயணத்திற்கு தேவையான பொருட்கல் வாங்க ,புரசையில் உள்ள ,எனது உறவினர் பணிபுரியும் "கோல்ட் இஸ் கோல்ட் " கடைக்கு சென்று ,பக்கெட்-சக்-சோப்பு-துணி கட்ட கயிறு-கிளிப்கள்-பவுடர்-உதிரி சாமான்கள் ஆகியவை வாங்கினோம்.ஆயிரத்து ஐநூறு ருபாய் வந்ததை ,என் உறவினர் ,அசல் விலை போட்டு ,எண்ணூறு ஆக்கினார்.ரயில் ஏறும் போது ,கரையானுக்கு ஆச்சர்யம்-நம்பவில்லை என்நூரா என்று கேட்டான்.மிக முக்கிய பொருளாகிய ,கேமரா யாரிடமும்-எந்த வீட்டிலும் கிடையாது.மிக அறிய பொருள் அன்று,மிக சிறிய பொருள் இன்று.என் அண்ணனின் ,நண்பரிடம் சென்று கஷ்டப்பட்டு வாங்கி வந்தேன்.அந்த யாஷிகா மூலம் எடுத்த படங்களைத்தான் ,இந்த தொடரில் பார்க்கப்போகிறீர்கள்.
குறிப்பு: இந்த தூறினால் ,ஒரு வருத்தப்படவேண்டிய விசயமும் ,என் வாழ்வில் நடந்தது-அது தான் டூரிநூடே நிகழ்ந்த ,என் அண்ணனின் திருமணத்தில் ,நான் கலந்துகொள்ளாதது.ஏனெனில்,டூர் அறிவிக்கப் படுவதற்கு முன்பே ,திருமண தேதி,மண்டபம் குறிக்கப்பட்டு விட்டது.திருமணத்திற்காக,டூர் வரவில்லையெனில்,ஒரு வருடம் லாப்ஸ் ஆகி விடும் ,என்பதால்,என் தந்தை சம்மதிக்கவில்லை;-என் அண்ணன்-படிப்பு தான் முக்கியம்;நீ எங்கிருந்தாலும் ,உன் பிரார்த்தனை எனக்குண்டு என்று கூறி வாளியனுப்பிவைத்தார்கள் .அப்பேற்பட்ட அண்ணன்,என்று எங்களிடம் இல்லை.கண்ணீர் மல்குகிறது.
தொடரும்,
பாய்.

மறக்க முடியாத டூர் 1

அது தான் "ஆல் இந்திய டூர்".ஒரு மாதம் நாட்டையே சுற்றி வந்தோம்.முன்னால் பிரதமர் ,படுகொலை செய்யப்பட்டிருக்கா விட்டால் ,இன்னும் நன்றாக இருந்திருக்கும்.மேலும்,நமது கோச்சில் ,லைட் எரிஆதது மிகப்பெரிய இழப்பு.அது இல்லாததினால்,இரவு நேர பயணம்,சுவாரசியமில்லை.அந்த கோச்சையும் வாழ்நாளில் மறக்கமுடியாது.நம்பர் 7794.இருப்பினும்,ஒருவருக்கொருவர்,விட்டுக்கொடுத்து,தாராளமாக இருந்தது சிறப்பம்சம்.இந்த டூர் குறித்து,தொடராக எழுதுவேன்.நண்பன் கரையான்,மேலதிக விளக்கம் கொடுப்பான்.
பாய்.

மனது வேண்டும்

வாரந்தோறும் நம் நண்பர்கள் ஸ்கைப்பில் வந்து அளவளாவுவதை ,தீபா ,டெக்னாலஜி என்று சொன்னாள்.அது தவறு.எல்லோரிடமும் கம்ப்யூட்டர் ,இன்டர்நெட் வசதிகள் உள்ளன.ஆனால்,மனதில்லை.பேசுவதற்கும்-ப்ளாக் செய்வதற்கும் மனது வேண்டும்.இந்த மனது ,கரையான்,தாஸ்,தீபா,சொக்கு,குஜிலி,பீர்,செந்தில்,உமா,டிபி,ஜாகிர் ஆகியோரிடம் உள்ளது.டிபி ,ஒரு நாள் இரவு ஒரு மணிக்கு ,கரையான் கூப்பிட்டதும் வந்தான்.

பாய்.

நேற்றைய தொடர்ச்சி.....

இதுதான் எங்கள் போர்டு-ரூம் கம் அலுவலகம் , இங்குதான் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். உள்ளே கொஞ்சம் வசதி குறைவாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். பெரும்பாலான நேரங்களில் ஏ.சி வேலை செய்யாது, ஏனென்றால் அப்படி ஒன்று கிடையாது, கும்மிருட்டாக இருக்கும்(கரண்டே இல்லாத போது விளக்கு எங்கே இருந்து எரியும்), ஆனால் இங்கே வந்து விட்டால் ஊன் உறக்கம் இல்லாமல் வேலை மட்டுமே செய்ய தோன்றும்(இங்கே இருக்கும் ஈக்கள் ஊன் உன்ன வாய் திறக்க விடாது, ஒரு இடத்தில் உட்காரவும் விடாது)
இவர்கள்தான் எங்கள் கஸ்டமர்கள்(கஷ்டமர்கள்-எங்களிடம் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதால்), அந்த காலத்து ராஜா வாழ்கை இவர்களுக்கு, அந்தபுரத்தில்தான் பெரும்பாலான நேரம் இருப்பார்கள், கொடுத்து வைத்த மகாராசன் கள்.
கரையான்.