புதன், ஜூன் 26, 2013

அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்

மக்கா எத்தன நாளுதான் மௌனம் காக்குரீங்கன்னு  பாக்குறேன்...

சரி என்னோட கதைக்கு வர்றேன்... அடிபட்டு emergency யில் அட்மிட்டான எனக்கு MRI SCAN  எடுக்கனும்னு டாக்டர் சொல்லி, அதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி அனுமதி கோரி கடிதம் அனுப்பினார், scan செய்ய 700 ரியால்,ஆதலால்  இன்சூரன்ஸ் நிறுவன அனுமதி வேண்டும் அதற்கு காத்திருக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார். காலை பத்துமணி முதல் மாலை மூன்று மணி வரை காத்திருந்து மருத்துவமனை ஒன்றும் செய்யாதலால் நான் அங்கிருத்த ஊழியர்களிடம் சென்று வலி தாங்க முடிய வில்லை ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டேன். பின்னர் அவர்கள், என்னுடைய இன்சூரன்ஸ் கம்பெனி  ஸ்கேன் செய்ய அனுமதி இன்னும் வழங்க வில்லை என்று கூறினார்கள், நான் என்னுடைய பணத்தை செலுத்துகிறேன், என்று கூறி செலுத்திய பிறகுதான் என்னை ஸ்கேன் செய்ய அழைத்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்த பின்னர் அந்த இன்சூரன்ஸ் கம்பெனி யின் representative அந்த மருத்துவமனையிலேயே இருந்தார், அவரிடம், ஏன் என்னுடைய claim க்கு approval கிடைக்க வில்லை என்று கேட்டேன், அதற்க்கு அவர், உங்களை சோதித்த மருத்துவர் அவருடைய ரிப்போர்ட் -ல் cause of injury: "Was kicked by a horse at  his home" என்று எழுதி உள்ளார், வீட்டில் என்ன குதிரை வளர்ப்பார்களா ? என கேள்வி எழுப்பி உங்கள் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று விளக்கம் அளித்தார், மேலும் என்ன நடந்தது என்று என்னிடம் விசாரித்தார், நான் விளக்கமா ஒட்டகத்திடம் அடி வாங்கிய கதையை சொன்னேன். பொறுமையாக கேட்ட அவர் சவுதி காப்பீட்டு சட்டப்படி " உங்கள் பணியில் அடிபட்டால் அந்த வகையான காயங்கள் காப்பீட்டுக்குள் வராது அதற்கு நீங்கள் claim செய்ய முடியாது " நீங்கள் சாலையில் நடக்கும்போதோ அல்லது drive செயும்போது, அல்லது உடல் நிலை சரியில்லாமல் போனால்தான் காப்பீடு பெற முடியும், உங்கள் பணி  சார்ந்த காயங்கள்/பிரச்னைகளுக்கு (professional hazards) இன்சூரன்ஸ் கிடையாது. என்று கூறினார்.  ரிப்போர்ட் எழுதிய மருத்துவர் பொண்டாட்டியிடம் அடி வாங்கியதால் காலில் காயம் என்று எழுதி இருந்தால் கூட பரவாயில்லை இப்படி அநியாயத்திற்கு தண்டம் அழ வைத்து விட்டாரே என்று எண்ணி கொண்டேன்.
(பிறகு அலுவலகத்தில் அந்த பில்லை கொடுத்து காசு வாங்கி விட்டேன்)

கரையான் 

ஞாயிறு, ஜூன் 16, 2013

LONG TIME NO SEE

பிளாகில் எழுதி பல நாட்கள் ஆகி விட்டது. இந்த நீண்ட மௌனம் கிட்டத்தட்ட நண்பர்களுக்குள் உள்ள சிறு பிணக்கினால் யார் முதலில் பேசுவது என்ற ஒரு ஈகோ உருவாகுமே அது போன்று ஒரு நிலைமையை ஏற்படுத்தி விட்டது... யாராவது ஒருவர் இந்த மௌனத்தை உடைத்து வருவார்கள் என்று பார்த்தால் நாட்கள் மாதங்கள் உருண்டோடி விட்டது... நானே மௌனத்தை களைக்கிறேன்.....
சில நேரங்களில் ஒருவரின் வலி மற்றவரின் நகைச்சுவை ஆகி விடும்...அடிபட்டவரின் வலி நகைப்பவருக்கு தெரியாது...அது போலதான் எனக்கு ஒவ்வொரு முறையும் குதிரையிடம் அடி வாங்கி மருத்துவமனை செல்லும்போதும் நான் அந்த மருத்துவமனையின் show piece/ specimen/ comedy piece ஆகி விடுவேன்.
பத்து நாட்களுக்கு முன் ஒட்டகங்களுக்கு vaccine கொடுக்க வேண்டிஇருந்தது . குட்டி ஒட்டகங்கள் ஐந்து ஆறு மாதங்கள் வயதுடையவை. பணியாளர்கள் ஒரு சிறிய இடத்தில் பத்து பத்து ஒட்டகங்களாக அடைத்து அதை விரட்டி பிடிப்பார்கள் , பின்னர் நான் ஊசி போட வேண்டும். இப்படி விரட்டும்போது அந்த இடமே களேபரமாக இருக்கும். அப்படி நான் ஒரு ஒட்டகத்துக்கு ஊசி போட்டுக்கொண்டு இருக்கும்போது பணியாளர்கள்  இன்னொரு ஒட்டகத்தை விரட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள், அது கண்மண் தெரியாமல் ஓடி வந்து என் மீது மோதி நான் கீழே விழ என் மேல் அந்த ஒட்டகம் விழுந்தது. என்னுடைய இடது கால் முட்டி அந்த ஒட்டகத்தின் கீழ் மாட்டிக்கொண்டது. மயக்கம் வரும் அளவுக்கு வலி, உடனே வீங்கியும் விட்டது. முதலுதவி செய்து பின்னர் மருத்துவமனைக்கு சென்றேன், அந்த மருத்துவமனையின் receptionist முதல் டாக்டர் வரை நான் ஒரு vip நோயாளி ஆகி விட்டேன், நல்ல வேலையாக x ray இல் எலும்பு முறிவு இல்லை என்று கூறி விட்டார்கள். ஆனாலும் முட்டியை மடக்க முடியவில்லை, வலியும் பயங்கரமாக இருந்தது.
எனக்கு எப்படி ஆனது என்பதை receptionist தொடங்கி டாக்டர், நர்ஸ் , x ray எடுப்பவர் என அனைவரும் விழிகள் விரிய ஆச்சரியமாக கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஒரு பிலிப்பினோ நர்ஸ் உன் முட்டிய உடைத்த அந்த ஒட்டகத்தை கொன்று விடு என அறிவுரை வேறு கூறினார்.
அடுத்த நாள் நடக்கவே முடிய வில்லை,கொஞ்சம் பெரிய மருத்துவமனைக்கு சென்றேன், emergency -யில் அனுமதிக்கப்பட்டேன், திரும்பவும் முதலிலிருந்து ஒட்டகம்-ஊசி-நான்-கீழே-விழுந்து-ஒட்டகம்-மேலே-விழுந்து-, receptionist -டாக்டர்-நர்ஸ்-x -ray technician , இந்த மருத்துவமனையில் கூடுதலாக MRI scan technician எல்லோருக்கும் கதையை திரும்ப சொல்லி (அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போது அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது  சொல்ல ஒரு கதை கிடைத்து விட்டது ) என்னுடைய வலி மரத்து விட்டது. ஒரு வழியாக MRI scan நார்மல் என்று கூறி விட்டார்கள். பத்து நாட்கள் ஆகி விட்டது ...இப்போது நார்மலாக நடக்க ஆரம்பித்து விட்டேன்....
(விரைவில் குணம் அடைய வாழ்த்தவிருக்கும் பாய்,குஜிலி,GFK, பாண்டி செந்தில்,சொக்கன், தாஸ் மற்றும் அனைவருக்கும் நன்றி...)

MRI SCAN -க்கு காப்பீடு (insurance ) கிடைக்காத கதை நாளை எழுதுகிறேன்......

கரையான்.