ஞாயிறு, ஜனவரி 27, 2013

DIFFICULT TIMES

உடல் ரீதியான பிரச்சினைகள் வரும்போது அதனால் ஏற்படும் வலியை  விட தப்பும் தவறுமாக நோய் கண்டறிந்து அதை கூறி பீதியை கிளப்பும் மருத்துவர்களால் ஏற்படும் மன உளைச்சல் அதிக வலியை  ஏற்படுத்துகிறது.
சாதாரண தொண்டை வலி இருமல் என ஒரு இந்திய மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொண்டேன், அவர் ஆண்டி பயாடிக் மருந்துகளை உண்ண  கொடுத்து ஊசியாகவும் ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுத்தார், அதன் விளைவாக பன்னிரண்டு மணி நேரத்திலேயே வயிற்றில் வலி ஏற்பட ஆரம்பித்து விட்டது, திரும்பவும் அதே மருத்துவமனைக்கு  சென்றேன் வேறொரு டாக்டர் பரிசோதித்து விட்டு திரும்பவும் அதே மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினார், அவர் ஊசி போடும் முன்னரே அவரிடம் எடுத்து கூறினேன், ஆனால் அவர் அதை  காதில் வாங்க வில்லை, அடுத்த நாள் காலை திரும்பவும் பழைய டாக்டரிடமே சென்று நடந்தவைகளை கூறி வலி அதிகமாக இருப்பதாக கூறினேன், அவர் திரும்பவும் பழைய மருந்துகளையே கொடுத்து அனுப்பினார். ஆறு மணி நேரம் கூட தாங்க வில்லை, கடுமையான வயிற்று வலி, இந்த முறை சற்று பெரிய மருத்துவ மனைக்கு சென்றேன், அங்கிருந்த எகிப்திய மருத்துவர் கை வைத்து பார்த்தே எனக்கு appendicitis இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வில்லை என்றால் இறந்து விடுவேன் என்று கூறினார். கவுன்டரில சென்று பணத்தை கட்டி விடு இரவுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். நான் அவரிடம் நீங்கள் மேலும் செய்ய வேண்டிய diagnostic tests ஐ செய்யாமல் எப்படி appendicitis தான் என்று கூறுகிறீர்கள், அவர் எங்களுக்கு தெரியும், சொன்னதை செய் என்றார். உடனடியாக அந்த மருத்துவமனையில் இருந்து தப்பித்து அதை விட பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று எமெர்ஜென்சி வார்டில் சேர்ந்தேன், அங்கு CT SCAN செய்ததில் appendicitis இல்லை என்று கூறி விட்டார்கள், வலிக்கு சிகிச்சைகள் அளித்து வீட்டுக்கு செல்ல சொல்லி விட்டார்கள். மேலும் ஒரு வாரம் கடுமையான வலி கொஞ்சமும் குறைய வில்லை. அதே மருத்துவமனையில் gastro enterology specialist -இடம் சென்றும் பயன் இல்லை. கடைசியாக அவர் உனக்கு அனேகமாக malignancy இருக்கலாம் எதற்கும் இன்னும் ஒரு முறை  CT SCAN செய்து விடலாம் என்றார். இந்த முறை CT SCAN செய்ய இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறி விட்டனர், மேலும் ஸ்கான் முடித்து அந்த ரிசல்ட் நம்மிடம் கொடுக்க மாட்டார்கள், அந்த specialist -க்கு அனுப்பி விடுவார்கள், அந்த specialist  appointment மூன்று நாட்களுக்கு பிறகுதான் கிடைக்கும் ஆக கிட்ட தட்ட ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.(கான்சரா இல்லையா என்று thrill உடன்  ), உடனே என்னுடைய மேலாளரை அழைத்து இன்று இரவே நான் சென்னை செல்ல வேண்டும் உடனடியாக ஏற்பாடு செய் என்றேன். சவுதி மற்ற நாடுகள் போல் இல்லை, என்னுடைய பாஸ்போர்ட் என்னுடைய கம்பெனியில் இருக்கும் exit re entry visa தயார் செய்தால் தான் நான் வெளியே செல்ல முடியும். அவனும் உடனடியாக செய்தான். 
சென்னையில் என்னுடைய குடும்ப மருத்துவரிடம் சென்றேன், மொத்த ஹிஸ்டரியும் கேட்டு விட்டு உங்களுக்கு இருப்பது lower bowel infection மூன்று நாட்களுக்கு நான் கொடுக்கும் மருந்துகளை சாப்பிடுங்கள் பிறகு பார்க்கலாம் என்றார். நான் அவரிடம் எதற்கும் ஒரு CT SCAN செய்து விடலாமே malignancy என்றெல்லாம் கூறி பீதியை கிளப்பி விட்டாரே அந்த மருத்துவர், என்றேன். கவலைப்படாதீர்கள் இந்த மருந்துகளை சாப்பிடுங்கள் சரியாக வில்லை என்றால் பிறகு மற்ற டெஸ்டுகளை செய்யலாம் என்றார்.
மூன்று நாட்களுக்கு பின் 90% வலி குணமாகி விட்டது. பின்னர் endoscope மற்றும்
ultra sound scan செய்து எல்லாம் நோர்மல் என்று கூறினார்.

கரையான்.

3 கருத்துகள்:

  1. அப்பா...பதறிவிட்டேன்.
    மாட்டு டாக்டர் பரவாயில்லை போல.

    பாய்.

    பதிலளிநீக்கு
  2. Karayaan - So glad that everything went OK and you are doing well!
    Gujili

    பதிலளிநீக்கு
  3. Karaiyan:
    Till I finished your post I was holding my breath.It was so scary. I am so glad the outcome was so good. Please keep good health.
    GFK

    பதிலளிநீக்கு