செவ்வாய், மே 31, 2011

உள்ளத்தில் தோன்றியது.....

இந்த வாரம் முழுவதும் எனக்கு  நொந்து நூடுல்ஸ் ஆன வாரம் என்று தலைப்பு கொடுக்கலாம்...(the most frustrating week at the farm), சாதாரண foal heat diarrhoea வாக துவங்கிய பேதி(எனக்கு இல்லை குட்டிக்கு) என்னை பாடாய் படுத்தி விட்டது, எனக்கே ஏற்பட்டு இருந்தாலும் நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்.  மூன்று நாள் நிற்காமல் தண்ணி தண்ணியாய் ஆக அதற்கு இருபத்தி நாலு மணி நேரமும் சிகிச்சை அளித்து எனக்கு dehydration ஆகி விட்டது, இந்த குட்டியின் விலைதான் பிரச்சனைக்கு மூல காரணம் (மூன்று லட்சம் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டது), மேலும் அதன் பெடிகிரீ, பேதியில் தொடங்கி septicaemia வந்து மண்டையை போடும் நிலைக்கு வந்து கொஞ்சம் தேறி வந்துள்ளது. இன்னும் சில நாட்கள் ஆகும் என் நிலை என்ன ஆகும் என தெரிவதற்கு. என்ன கொடும சொக்கா இது குட்டியோட தலை எழுத்து  டாக்டரோட விதியோட விளையாடுது பாரு. இதுல வீட்டுக்கு போனா என் சின்ன பொண்ணு வேற ஏம்ப்பா நான் சின்ன கொழந்தையா இருந்தப்ப  பால் குடிச்சனா, பேதி நின்னிச்சான்னு ஒரு வார்த்த கேட்டு இருப்பியா, பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை stable- க்கு போன் பண்ணி குட்டி பால் குடிச்சுதா, பேதியாச்சா, நிக்குதா, தூங்குதா, நடக்குதான்னு கேக்குறே என நக்கல் பண்றா...என்ன செய்ய யானை  படுத்தா எலி கூட  ஏறி மிதிச்சிட்டு போகும்பாங்க , இந்த குதிர குட்டியால எவ்வளவெல்லாம் பட வேண்டியிருக்கு... எம் பொண்டாட்டி எங்கிட்ட  உங்க முகமே மறந்துடும் போல, எத்தன மணிக்கு வரீங்க எத்தன மணிக்கு போறீங்க எதுவுமே தெரிய மாட்டேங்குது, ராத்திரி குதிர நாத்தம் பக்கத்துல அடிச்சா நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்க, அடிக்கலன்னா stable க்கு கிளம்பி போயிட்டீங்க என்று நானே முடிவு பண்ணிக்குறேன் என்று அவள் பங்குக்கு நையாண்டி.

தொடருவேன்....(அந்த குட்டிக்கு drip போடணும்  அப்புறம் எழுதுறேன்....)

கரையான்

ஞாயிறு, மே 29, 2011

ஆச்சரியப் பட வைக்கும் ஆட்டோ கிராப்ஸ்-9

இன்றையவை,நம் ப்லொக்கிற்கு,உயிர் கொடுத்துக் கொண்டிருப்பவர்களது ,கைவண்ணங்கள்.இவர்கள் இல்லையேல்,நான் ப்லொக்கில் இல்லை.

1.தாஸ்-கோழி அறிவியலில் முட்டைகளை எடுத்தான் அன்று;
                 இவனது கோழிகள் இடும் முட்டைகள் நமக்கு இன்று.
                  முகப் பெரிய முன்னேற்றம்.
 2.கரையான்-ஆம்,இவன் எழுதியது போல்,இவனே வாழ்ந்து வருகிறான்.
                           இவன் திறமைக் கேற்ற வசதிகள் , இந்தியாவில்                                  தரப்படவில்லை.ஆகையால்,வெளிநாடு வாசகம். 
 3.சொக்ஸ்-சிறுவதிலேயே கவிநர்.அவனுக்கு "கவிகாமணி'என்று பெயர் சூட்டுகிறேன்.பச்சை மையில் எழுதிய இவன்,ஒரு VAS ஆக வந்திருக்க வேண்டும்.சட்டம் இடம் தரவில்லை.இப்போது ஒன்றும் குறைச்சல் இல்லை.
பிரியமுடன்,
பாய்.

kalyana pughai padangal


மகளை மாப்பிள்ளையிடம் தந்தை கொடுக்க போகிறார்.

கடந்த மே 22 அன்று பிலிப் மூத்த மகள் கல்யாணம் மிக மங்களமாக நடந்தது. அப்போது எடுத்த சில படங்கள்  

 

மணமுடித்த தம்பதிகள்


கல்யாண தம்பதியருடன் பொண்ணு தோழியும் மாப்ளை தோழர்களும் 

பெண்ண தோழிகளுடன் .. இடது பக்கம் இர்ருபது பெண்ணின் தங்கை. - பிலிப்பின் இரண்டாவது மகள்


இது யார் என்று உங்கள்ளுக்கு தெரியும்
 Gujili

Super Engineering









அன்புடன்,
பாய்.

வியாழன், மே 26, 2011

நாவல் ஐடியா

நேற்று  ஒரு மாடு டிச்டோக்கியவுக்கு சென்று இருந்தேன்.மிகவும் மோசமான கிள்ய்மாத்.சூறாவளி புழுதிக் காற்று. கம்ப்ளீட் லேட்ரல் டீவிஏசன் ஆப் ஹெட் அண்ட் நெக்.கன்று மிகவும் பெரிய சைஸ்.செத்து வேறே விட்டது.மிகவும் கஷ்டப்பட்டு வலது கையை உள்ளே விட்டு ,தலையை கொஞ்சம் தான் இழுக்க முடிந்தது.மிகவும் கஷ்டப்பட்டு இடது கையை உள்ளே விட்டு ,ஒரு காலைத்தான்  இழுக்கமுடின்தது.இரண்டு கண்களுக்கும் ஹூக்ஸ் போட்டு ஒரு வழியாக தலையை வெளியே கொண்டுவந்தேன்.வெறும் இரண்டு பேர் தான்.எவ்வளவோ ,இழுத்தும் வரவில்லை.ஸ்டாமினா வேறு போய்விட்டது.
திடீரென்று  ஒரு ஐடியா உதித்தது.காரை பக்கத்தில் கொண்டு வந்து,அதை ட்டோ செய்ய பயன்படும் ரோப்பால் ,கன்றின் கழுத்திலும்,காலிலும்,கட்டி காரை இயக்கினோம்.ஒரே நிமிடத்தில்,கன்று முழுவதும்,வெளியே வந்து விட்டது.ரொம்ப மகிழ்ச்சி.
குறிப்பு:
1.எனக்கு "ஐடியா அஹ்மத்" என்ற பெயரும் உண்டு.
2.இன்று பாலோ அப் செய்ததில்,மாடு நன்றாக உள்ளது.
பாய்.

புதன், மே 25, 2011

HAPPY BIRTH DAY


இன்று பிறந்தநாள் கொண்டாடும் 
நண்பர் "கெமின்" சுரேஷ்குமார்
அவர்களை வாழ்த்தி
பிறந்தநாள் கவிதை எழுதுமாறு
கவிஞர் சொக்கன் அவர்களை
வேண்டி விரும்பி மிரட்டி
கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை நட்சத்திரங்கள்.