திங்கள், பிப்ரவரி 21, 2011

அந்த ஒரு வினாடி

மனிதன்:"நீங்கள் சர்வ  சக்தி படைத்தவராயிற்றே,பத்து கோடி ரூபாய் உங்களுக்கு கிடைத்தால் ,அதை நீங்கள் எப்படி மதிப்பீர்கள்?
கடவுள்:"அது எனக்கு ஒரு பைசா மாதிரி"
மனிதன்:"ஆயிரம் வருடங்கள் உங்களுக்கு எப்படி இருக்கும்?"
கடவுள்:"ஒரு வினாடி மாதிரி"
மனிதன்: பேராசையுடன் "எனக்கு ஒரு பைசா கொடுங்கள் போதும்."
கடவுள்: சிரித்துக்கொண்டே "அவ்வலவு தானே ?ஒரே ஒரு வினாடி காத்திரு" என்று கூறி மறைந்தார்.

பேராசை இல்லாத,
பாய்.

சின்ன சின்ன ஆசைகள்

மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு நிறைவேறாத ஆசை இருக்கும், அந்த மாதிரியான ஆசைகளை இந்த பகுதியில் நண்பர்கள்/நண்பிகள்  பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்...

 வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்கள் பெரும்பாலானோரின் பொதுவான ஆசை தேவையான அளவுக்கு சம்பாதித்து விட்டு ஊரில் கொஞ்சம் விவசாய நிலம் வாங்கி கிராமத்தில் வீடு கட்டிக்கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என்பதே.  என்னுடைய ஆசை இதிலிருந்து மாறுபட்டது, போதுமான அளவு( எவ்வளவு சம்பாதித்து சேர்த்தாலும் போதும் எனற மனம் வரப்போவதில்லை ) சம்பாதித்து, சென்னை அல்லது வேறு ஏதாவது தமிழக நகரத்தில் ஒரு flat வாங்கி நகர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே. படிப்பை முடித்த நாள் முதல்(Unikay Hatcheries காலம்  முதல்  இது  நாள் வரை) என் பணி நாட்கள் கிராமங்களிலேயே ஓடி விட்டது.  செட்டிநாடு குதிரை பண்ணையில்  பணி புரியும்போதும் நான் வசித்தது குக்கிராமம், இப்போது சவுதியில் பணி புரிவது மற்றும் வசிப்பதும் ஒரு குக்கிராமத்தில்தான். கிராமத்தில் வாசிப்பதில் பல சவுகரியங்கள் உண்டென்றாலும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. செட்டிநாடு குதிரப்பன்னையில் பணி புரியும்போது அருகிலிருக்கும் கிராம மக்கள் என்னையும் அவர்கள் குடும்ப உறுப்பினராகவே நினைப்பார்கள், காயத்ரி ரெண்டரை வயதில், அவளாகவே, பன்னையைவிட்டு வெளியே சென்று, பக்கத்து கிராமத்திற்கு சென்று விட்டாள், அங்கிருந்தவர்கள், பொறுப்பாக அழைத்து வந்து வீட்டில் விட்டு சென்றார்கள், நகரத்தில் இருப்பவர்களின் அவசர வாழ்க்கையில் எத்தனை பேர் இப்படி செய்வார்கள் என்பது சந்தேகமே. என் மனைவி அருகில் உள்ள கிராம குழந்தைகளுக்கு இலவசமாக மாலை வகுப்புகள் எடுப்பாள்(அவளுக்கும் பொழுது போக வேண்டுமே...குக் கிராமத்தில் பொழுதுபோக்கும் அம்சங்கள் குறைவு, மேலும் அப்போது எங்கள் வீட்டில் டி.வீ. சீரியல் தொல்லையெல்லாம் கிடையாது ), அந்த பெண் குழந்தைகளில் ஒன்று இப்போது கல்லூரி முடித்து அவள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பி, சவுதியில் இருக்கும் என் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து கண்டிப்பாக  தன் திருமணத்திற்கு வர வேண்டும் என கூறுகிறாள். இந்த பாசம் சிடியில் கிடைக்காது, இருந்தாலும் நகர(நரக) வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை என்னை விட மாட்டேன் என்கிறது....
என்னுடைய ஆசையை சொல்லி விட்டேன்.....உங்கள் ஆசைகளை சொல்லுங்கள்...சென்னை நட்சத்திரங்களே......(குறிப்பாக நகரத்தில் வசிக்கும் சொக்கன், பாய்,தீபா, தாஸ், செந்தில் போன்றோர் கண்டிப்பாக எழுதவும், குஜிலி அமெரிக்க கிராம வாழ்க்கையைப்பற்றி எழுதலாம்)

கரையான். 

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

iraivan pillayaro ?

ஆம் சதுர்த்தி ஊர்வலமாம்
அந்த மூஞ்சூறு பிள்ளையாரின் வாகனமாம்
ஊர்வலத்தால் வரலாம் இறையுணர்வு
இந்த மசூதி மூஞ்சுறு  முதுகு  பிள்ளையார்  
தந்தது  பாயின்  பிள்ளைக்கு   இரவுணவு   
இதில் இறைவன் பிள்ளையாரோ 
இறைவனின் பிள்ளை யாரோ
இந்துவா? முஸ்லிமா?
இருவரும்தான்!

msk

Group Chat on 19-02-2011 ,Saturday

Hi All,
I am ready for chating between 6:30 PM to 8 PM,IST.
Bhai