திங்கள், மார்ச் 09, 2009

இங்கு எனக்கு பிடித்த பல விஷயங்களில் ஒன்று simplicity. எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசலாம், அவர் நல்ல மூடில் இருப்பாரோ, ஓய்வில் இருப்பாரோ, இப்போது அழைத்தால் தவறாக எடுத்துக்கொள்வாரோ எனவெல்லாம் பயம் தேவையில்லை. சில நாட்களுக்கு முன் என் முதலாளி வீட்டு திருமணத்திற்கு அழைத்திருந்தார், பெண்களுக்கென தனியாக விருந்து நடந்தது, அதில் என் மனைவி, மகள்கள் கலந்து கொண்டனர், எந்த பாகு பாடும் இல்லாமல் அவர்களை நடத்திய விதத்தை இன்னும் சொல்லி சொல்லி மாய்ந்து கொள்கிறார்கள் மேலும் இவ்வளவு அழகான பெண்களை இது வரை என் மனைவி கண்டதே இல்லை என certificate வேறு கொடுக்கிறார். மற்ற பெண் அழகாக இருக்கிறாள் என்று ஒரு பெண் கூறுவது பெரிய விஷயம்தான்(உண்மையாகவே அழகாகத்தான் இருப்பார்கள் போல)

கரையான்.

Agronomy வாத்தியார் நம்மள வாரம் ஒரு முறை பல இடங்களுக்கும் அழைத்து சென்று நம் கல்லூரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக வைத்திருந்த நல்ல மனிதர், ஆனால் அவரையும் நோக அடிக்குமாறு, நம் நண்பர் பாபு அந்த வாத்தியாரின் அறை வாயில் சுவற்றில் "India Tourism Development Corporation" என்று எழுதி வைத்து விட்டார், அவர் அதை எல்லோரிடமும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.

கரையான்.

ஞாயிறு, மார்ச் 08, 2009

களப்பணியில் பாய்




வளைகுடா வசந்தங்கள்

1.landline to landline-எவ்வலவு நேரம் பேசினாலும் ,கட்டணம் இல்லை.
2.நீரை விட பெட்ரோல் விலை குறைவு.
3.ஒரு நொடி கூட மின் வெட்டு கிடையாது.ஒரு வேலை,தடங்கல் ஏற்பட்டால் , உடன் ,மின்வாரியதினர் வீட்டில் ஜெநேரடர் கொண்டு வந்து பொருத்தி விடுவார்கள் .பழுது சரி செய்யும் வரை,அனைத்தும் இலவசம்.
4.ஒரு நாளும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.ஒரு வேளை ஏற்பட்டால் , உடன்,நீர்வாரியதினர் லாரி மூலம் ,நீர் தருவார்கள்.பழுது சரி செய்யும் வரை அனைத்தும் இலவசம்.
5.எந்த ஒரு கட்டிட வேலையும் ,3 மாதத்தில் முடிந்து விடும்.
6.பாலைவனமாக இருந்தாலும், பல இடங்கள் பச்சைபசெலேன்று இருக்கும்.
7.நேரம் வெகு விரைவாக கழிந்துவிடும்.வெள்ளி முடிந்தவுடன்,அடுத்த வெள்ளி வந்துவிடும்.
8.ஒவ்வொரு 5 மீட்டருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சலூன்.
9.மளிகை கடை முன்னால் நின்று ஹாரன் அடித்து ,சாமான்களை சொன்னால் , காரில் கொண்டு வந்து வைப்பார்கள்.இறங்க வேண்டியது இல்லை.
10.ஒவ்வாரு 2 கீ.மீ. ல் ,ஒரு ஷாப்பிங் மால்.
11.பிரதான ரோடுகள் ,மெதுவாக மற்றும் வேகமாக வோட்டு பவர்களுக்காக , அடையாள மிடப்பட்டுள்ளது.
12. பிரதான சாலைகளில் rash அண்ட் super fast driving செய்பவர்களை பிடிக்க காமெராக்கள் உள்ளன.minimum fine Rs.4000/-.ஒரு fine carries 2 points. 12 points accrue ஆனால் ,driving Licence ,முடக்கப்படும்.
13. கார் வாங்குவதை விட ,ல்ய்சன்ஸ் எடுப்பது வெகு சிரமம்.[பொள்ளாச்சியில் நான் VVIP ஆதலால் ,Motor Vehicle Inspector ல்ய்சன்சை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து தந்தார் .லஞ்சமில்லை.]
14. பெண்களுக்கென்று எந்த அலுவலகத்திலும் கியூ கிடையாது.வந்து நின்றதும் , உடன் கவனித்து அனுப்பிவிடுவார்கள் .[பெண்களை அல்ல,அவர்களது வேலைய்யை.]
15. ஒரு Starbucks ,ஒவ்வொரு கீ.மீ. ல் .
16. ஒவ்வொரு செலவழியும் பொருட்களுக்கும் [expendable articles] ,கட்டாய expiry தேதி உண்டு. காலாவதி ஆனா பொருட்கள் ஒன்று மட்டும் கடையில் இருந்தாலும் , கடை சீல் வைக்கப்படும்.
17. பூங்காக்களில் ,family recreational இடங்களில் ,bachelors அனுமதி இல்லை.
18. Hierrarchy[bossism] கிடையாது.கடை நிலை ஊழியர்,முதல் நிலை அலுவலரை பெயர் சொல்லி அழைக்கலாம்.அவர் முன்பாக புகைக்கலாம்.அவர் நிற்க,இவர் இருக்கலாம்.[நமதூரில் ,immediate boss இக்கு முன்பு,நெளியிற நெளிவு இருக்கே, அப்பப்பா!]
19. லஞ்சம் என்றால் என்ன என்பது ,பலருக்கு தெரியாது.[ நமதூரில்,லஞ்ச ஒழிப்பு துறை தான்,லஞ்சத்தை ஆரம்பித்து வைத்தது.]
20. எந்த அலுவலகம் சென்றாலும் , டி ,காப்பி ,mineral நீர் இலவசம்.
21. எல்லாருக்கும் சம்பளம் ஆன்லைன் வசதியில்.[நான் பேங்கிற்கு போயி பல வருடங்கள் ஆகிறது.]
22. அதி தீவிர சிகிச்சை தேவைப்படின், ஹெலிகாப்டர் வந்து , இலவசமாக தூக்கி செல்லும்.
இன்னும் பல இருக்கலாம்.அவற்றை எனதருமை கரையான் எழுதலாம்.
பாய்.

சனி, மார்ச் 07, 2009

புதுசா கல்யாணமானவுங்க பொண்டாட்டிய பாத்து(சுமாரா இருந்தா கூட) ஐஸ்வர்யா ராய் சுஸ்மிதா சென்னு, அப்படியெல்லாம் புகழுவாங்க, கல்யாணமான ரெண்டாவது நாளே பொண்டாட்டிய பாத்து பேய் இன்னு சொன்னது என்னோட கண்கண்ட தெய்வம் ஆகத்தான் இருக்கும். கல்யாணமான புதுசுல கோவிலுக்கு போனோம். சாமியெல்லாம் கும்பிட்டு முடிச்சதும், எங்களோட வந்த என் பெரியம்மா, கோவில்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்து போகனும்னு சொன்னாங்க. இவரு அவங்ககிட்ட "அதான் சாமியெல்லாம் கும்பிட்டாச்சே போக வேண்டியது தானே" என்று கேட்டாரு. அவுங்க "நாம கோயிலில் இருந்து உடனே போனால் இங்க சுத்திக்கிட்டு இருக்கிற பேய்கள் நம்ம பின்னாலேயே வந்துடும்றது ஐதீகம் அதனால் இங்க உட்கார்ந்து இருந்து போனால் அது திரும்ப போய்டும் நம்ம பின்னால் வராது" என்றார். கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு கிளம்பி நடக்க ஆரம்பித்தோம், இவரு விடுவிடு வென்று எனக்கு பத்தடி முன்னாள் நடந்து சென்று திரும்பி பார்த்து எங்க பெரியம்மாவிடம் "பேய் வராதுன்னு சொன்னீங்க பின்னாலேயே வருதேன்னு" என்னை காட்டி சொல்றாரு.

திருமதி கரையான்.

பிசியாலஜி ,அந்த வாத்தியார் பெயர் சரியாக ஞாபகம் இல்லை(அனேகமாக விஸ்வநாதன்), அவருடைய வகுப்பு பெரும்பாலும் பதினொன்று முதல் பன்னிரண்டு வரை இருக்கும் மெஸ் செல்லும் நண்பர்கள் 11:45 க்கு lecture ஹால் இன் பின் பக்க வழியாக தப்பி விடுவார்கள், சீக்கிரமாக சென்று இடம் பிடிப்பதற்கு. இது பல நாட்களாக நடந்து கொண்டிருந்தது, சிலர் அவர் அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்த வுடன் தப்பி விடுவார்கள். ஒரு நாள் வழக்கம் போல் அவர் அட்டெண்டன்ஸ் எடுத்த பின் பல நண்பர்கள் தப்பி விட்டார்கள், சிலர் கடைசி பத்து நிமிடத்தில் சென்று விட்டார்கள்(பாய் போன்ற நல்ல மனம் கொண்ட நண்பர்கள்), எதோ காரணத்தால், அவர் வகுப்பு முடிந்தவுடன் சில பெயர்களை அழைத்தார், ஆனால் அந்த நண்பர்கள் வகுப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறி விட்டார்கள். அட்டேண்டன்சில் அவர்கள் present ,வாத்தியார் குழம்பி விட்டார், அட்டெண்டன்ஸ் திரும்ப ஒருமுறை எடுத்ததில் கிட்டத்தட்ட் இருபது பேருக்கும் மேல் வகுப்பில் இல்லை, ஆனால் அட்டெண்டன்ஸ் படி present. கடும் கோபம் அடைந்த அவர்"மவனுங்களே வாங்கடா நீங்க எப்படி என்கிட்டருந்து பாஸ் ஆவுரீங்கன்னு பாத்துடுறேன்" என கருவிக்கொண்டே சென்றது இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது.

கரையான்.