வெள்ளி, பிப்ரவரி 27, 2009

ஒரு முறை என்னையும் என் சக கால்நடை மருத்துவ நண்பரையும், எங்கள் கிளினிக் அருகில் உள்ள ஒரு மினி zoo க்கு அங்கு இருந்த நாய்களை சிகிச்சை செய்ய அழைத்தார்கள். வழக்கம்போல் நான் எனக்கு அனுபவம் இல்லை என்று ஒதுங்கி கொண்டேன், நம் நண்பர் தான் சிகிச்சை அளிப்பதாக கூறி என்னையும் துணைக்கு அழைத்தார், எனக்கும் ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என அவருடன் சென்றேன். அங்கு இருந்த சர்க்கஸ் நாய்களுக்கு சிகிச்சை அளித்தோம், பின்னர் அங்கிருந்த ஒரு பாகிஸ்தானி ,சிங்கம் ஒன்று கால் தாங்குவதாக(lame) கூறினான்.நம் நண்பர் அதையும் பார்ப்பதாக கூறி அவனுடன் சிங்கம் இருக்கு கூண்டருகில் சென்றார், நான் கூண்டிலிருந்து ஒரு நூறடி தள்ளி நின்றுகொண்டேன். பின்னர் அவன் அவரிடம் வெளியில் எடுத்து காட்டவா என வினவினான், அவரும் குதிரையை trot செய்து பார்ப்பதுபோல் பார்க்க எண்ணி சரியென்று ஒப்புக்கொண்டார், உடனே அவர்கள் நின்று இருந்த பகுதிக்கான இரும்பு gate ஐ பூட்டி விட்டு சிங்கம் இருந்த கூண்டின் கதவை திறந்து விட்டான், சிங்கம் வேகமாக கூண்டை விட்டு வெளியேறியது, அது வந்த பகுதியில் அந்த பாகிஸ்தானியும் நம் நண்பரும் மட்டும்தான், அதை பார்த்து மிரண்டு போன நண்பர் வேகமாக வந்து கம்பிமேல் ஏறி தப்பிக்க முயற்சி செய்தார், அது ஐம்பதடி உயர கேட் எங்கிருந்து ஏறுவது. நான் கேட்டுக்கு மறு பக்கம் நின்றுகொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், அவர் என்னிடம் கேட்டைதிறக்க கூறினார், சாவி அந்த பாகிஸ்தானியிடம் நான் ஒன்றும் செய்ய இயலாமல் பார்க்கத்தான் முடிந்தது.அவர் படும் பாட்டை பார்த்து விட்டு அந்த பாகிஸ்தானி சிங்கத்தை பிடித்து திரும்பவும் கூண்டுக்குள் அடைத்தான். அதன் பின்தான் நம் நண்பருக்கு உயிர் திரும்ப வந்தது. அது ஒன்றும் செய்யாது டாக்டர் சாப் என அவருக்கு ஆறுதல் கூறினான், தேனிர் அருந்தும்போது அவனுடைய சுண்டு விரல் மிஸ் ஆகி இருப்பதை கவனித்து எங்கே என அவனிடம் கேட்டேன், சிங்கம் ஒருமுறை கடித்து விட்டது என சாதாரணமாக கூறினான், அப்போது நம் நண்பர் முகத்தில் எழுந்த பய உணர்ச்சி இன்னும் என் கண் முன்னால் உள்ளது.

கரையான்.

செவ்வாய், பிப்ரவரி 24, 2009

மதிப்புக்குரிய நண்பர்களே நண்பிகளே , நாடு நடுவில் நான் காணாம போய்டுவேன் ஆனால் தினமும் பிளாக் ஒரு முறை கண்டிப்பாக படிப்பேன்.
நம்ம IDC நினைவுகளை இன்று பகிர்ந்து கொள்வேன். நாங்கள் Day Scholars பரிக்ஷைக்கு உருண்டு பொருந்து படித்துவிட்டு பேருந்தில் இருந்து புஸ்தக்கத்துக்குள் மூக்கை நுழைத்து கொண்டு இரங்க, கல்லூரியின் front lawn யில் நம்மக்கள் உட்கார்ந்து கொண்டிர்ருபார்கள்.
ஒரு முறை நான் IDC break இல் திருநெல்வேலி சென்று இருந்தேன்(அது எனது அப்பாவின் சொந்த ஊரு ). அங்கே பத்து நாள் நன்றாக எல்லாம் சுற்றி பாத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு திரும்ப வந்தோம். அங்கே ஹல்வா வாங்கிவிட்டு பேருந்து ஏற வந்தால் திடீரென்று மூணு நாலு குரல் அக்கா அக்கா என்று கேட்டது. இது யாரு நம்பலை இப்பட்டி அழைக்கிறார்கள் என்று பார்தால் நம்ம juniors சில பெண்கள் !
அக்கா! கல்லூரி திரும்பவும் திறக்க போகிறது உங்களுக்கு கடிதம் கிடைத்ததா என்று எனக்கு தகவல் குடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறி, அதே பேருந்தில் திரும்பவும் சென்னை வந்து சேந்தோம். வழியில் எல்லா கடவுள்களுக்கும் நன்றி சொல்லி கொண்டு வீட்டுக்கு திரும் பி வந்தேன்.
GFK

குதிரை medicine

மதிப்பிற்குரிய பாய்/ கரையான்/பீர் அவர்களே,
உங்களுக்கு ஒரு குதிரை மருத்துவத்துறை கேள்வி ஒன்று கேட்க விரும்புகிறேன். In my Endocrinology class, one of my students had a question about her horse. I believe it is castrated but it is still extremely aggressive. Supposedly the vet prescribed Depoprogesterone and she was curious how that would help. I am aware that castration alone will not suppress the aggression as adrenals are also a source of testosterone. However I was curious if in your practice as equine vets or vets if you prescribed progesterone for aggressive horses and if so why and does it work?
Thanks - Gujili
பொண்டாட்டி சொல்றத ஒண்ணு கூட காது கொடுத்து கேட்கமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காரு என்னவரு(குஜிலி பாஷையில சொல்லனும்னா என்னுடைய கண் கண்ட தெய்வம்), ஐயா உங்களுக்கு வயசு நாப்பது ஆவுது சாப்பாட்டுல கட்டுப்பாடு வேணும்னு சொன்னேன். நான் சொன்னத கேக்காம நாங்கெல்லாம் யாரு வயது எண்பது ஆனா கூட நான் குமரன் தான் கிழவனில்லடி, கல்ல தின்னா கூட எங்களுக்கு ஒன்னும் ஆவாது என்று சொல்லிட்டு, வேண்டாம்னு நான் சொன்னத கேக்காம ஒட்டகப்பால் குடிக்க கிளம்பிட்டாரு. ஒட்டகப்பால் காய்ச்சாம குடிச்சா பேதி ஆகும்கறது நாடறிஞ்ச விஷயம், வெள்ளிக்கிழமை காலையில வெறும் வயித்துல குடிக்கிறேன்னு ஒரு லிட்டர் முழுசா குடிச்சிட்டு வந்தாரு. குடிச்ச ஒரு மணி நேரத்தில அது வேலையை தொடங்கிடுச்சி non-stop ஆக . மனுஷன் போறாரு, வர்றாரு வந்த வேகத்திலய திரும்ப போறாரு, மடை திறந்த வெள்ளம்போல நிறுத்த முடியாது, அதுவே நின்னாதான் உண்டு. கிட்ட தட்ட மூணு மணி நேரம் நாக்குல ஒட்டி இருக்கிற கடைசி சொட்டு ஓட்டகப்பாலு கூட அதோட வேலையை செய்துட்டுதான் போகும். இவரு வயிறு காலி ஆச்சோ இல்லையோ, வீட்டுல இருந்த over-head tank காலி ஆயிடுச்சி. அந்த மூணு மணி நேரம் எங்கள படுத்திய பாடு இருக்கே. வேலியில போற ஓணான எடுத்து மடியில கட்டிக்கிட்டு குத்துதே குடையுதே ன்னா நான் என்ன செய்ய முடியும். உங்களுக்குத்தான் தெரியுமே அதை ஏன் குடிச்சீங்கன்னு கேட்டா, "நீ செய்யற சாப்பாட்டையே இத்தனை வருஷமா ஒரு பிரச்சனையும் இல்லாம சாபிடுறேன், இது என்ன செய்துடப்போரதுன்னு ஒரு நம்பிக்கையுள்ள குடிச்சேன்னு", அந்த நேரத்திலையும் குசும்பு போகல. நல்ல வேலை இவருக்கு குமரன்னு பேரு வச்சாங்க குழந்தைன்னு வைக்காம விட்டாங்க. என்னவரு எனக்கு ஹீரோ மட்டுமில்லை காமெடியன் கூடத்தான்.
திருமதி.கரையான்.

திங்கள், பிப்ரவரி 23, 2009

தோழி GFK அவர்களின் வேண்டுகோளை ஏற்று நம் நண்பர்களின் விலாசங்களை சேகரிக்கும் முயற்சியாக நம் நண்பர் "கொசு" விடம் நம் அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்களை எனக்கு மெயில் செய்யுமாறு பத்து நாட்களுக்கு முன் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தேன். உடனே அனுப்புவதாக உறுதி அளித்தார், அந்த "உடனே" இன்னும் வரவில்லை. இன்று அவருக்கு நினைவு படுத்தி அழைத்தால் வேலைப்பளுவில் மறந்துவிட்டதாக கூறுகிறார். ஈரோடில் கால்நடை மருந்தகத்தில் இவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சில நண்பர்களை மாற்றவே முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கரையான்.

ஞாயிறு, பிப்ரவரி 22, 2009

எல்லா ஊருலயும் வெள்ளக்காரங்கன்னா கொஞ்சம் அதிகமாகவே மதிக்கப்படுவார்கள், இங்க அது கொஞ்சம் அதிகம். வெளிநாட்டுகாரர்களில் , வெள்ளக்கரங்களுக்கு இந்த ஊருல எங்க போனாலும் ராஜ மரியாதைதான்., அதுவும் அமெரிக்கா காரன்னா ரொம்ப .... நம்முடைய நண்பர் பீர் சொன்ன ஒரு சம்பவம் இங்க பகிர்ந்துக்க விரும்பறேன். சவுதியில் ஒரு பெரிய கோழி கம்பனி அவுங்க தீவன தொழிற்சாலைக்கு ஒரு nutritionist பணி நியமனம் செய்ய முடிவு செய்தார்கள். அதற்கு ஒரு அமெரிக்கா மருத்துவர நியமனம் செய்ய அந்த கம்பனி இயக்குனர்கள் கூடி முடிவு செய்து, அவர்களுடைய அமெரிக்கா agent க்கு ஒரு nutritionist ஐ தேர்வு செய்து அனுப்புமாறு தகவல் அனுப்பினார்கள். அவரும் ஒரு அமெரிக்கரை தேர்வு செய்து அனுப்பி வைத்தார். வருவது அமெரிக்கர் ஆயிற்றே வரவேற்க கம்பனியின் முதன்மை மேலாளரே விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டுமல்லவா.... வரவேற்க இவரும் சென்றார், அந்த அமெரிக்கரும் வந்தார், ஆனால் அடுத்த நாளே அவரை திரும்ப அமெரிக்காவிற்கே அனுப்பி விட்டார்கள், ஏன் தெரியுமா, வந்தவர் கருப்பு அமெரிக்கர்.... இவர்களுக்கு தோல் வெள்ளையாக வேண்டும்....

கரையான்.

நன்றி நன்றி நன்றி

அன்புள்ள சென்னை நட்சத்திரங்களே,
உங்கள் அனைவருக்கும் என் சார்பிலும் என் கண் கண்ட தெய்வம் சார்பிலும் உங்கள் வாழ்துதல்களுக்கு மிக்க நன்றி.
குஜிலி