புதன், டிசம்பர் 31, 2008

Bhai

புத்தாண்டில் எனக்கு மாடு dystocia -புதிய வரவு .
பா கே பா :அன்று biochemistry class.வாத்தியார் மௌஷ்டஸ் இல்லாத முஸ்தஃ அஹமட்.என்னை அப்துல் ரஹுமான் என்று விளித்து ஒரு கேள்வி கேட்டார் .52 வருடமஹ சிரிக்காத இந்த நரசிம்மராவை சிரிக்க வைக்க நல்ல தருணம்.நான் 'பதில் சொல்வது இருக்கட்டும் ,பெங்களூரில் உள்ள என் அண்ணன் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் ? என்றேன் .[உண்மையில் அந்த பெயர் கொண்ட அண்ணன் அங்குள்ளார் ]அதிசயம் -ஆம்! மனிதர் சிரித்துவிட்டார் .நானோ எங்கே 'A' க்குப்பதில் 'D' தந்து விடுவாரோ என் நினைத்தேன் .ஸ்போர்டிவ் ஆக எடுத்து 'A' தந்தார்.அன்றிலிருந்து என்னை பார்குன் போதெல்லாம் புன்னகை .
குறிப்பு : அவரது மெமரி பவரை எண்ணிப்பாருங்கள் . அட்டேண்டன்சே REGISTER ஐ பார்க்காமல் அஹ்மத் ல் ஆரம்பித்து நவநீதன் இல் முடிப்பார்.
கேள்வி : இதை போன்ற திறமை உள்ள இன்னொரு வாத்தியார் யார் ? சரியாஹ கூறினால் ,[திருநெல்வேலி] அல்வா கிடைக்கும்

குதிரைக்காரனின் புலம்பல்:

புத்தாண்டை முன்னிட்டு நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல காசை செலவு செய்து மனசை புன்னாக்கிக்கொண்டதுதான் மிச்சம். பாபு வுக்கு செல் பேசியில் அழைத்தால்,"மாப்பிள்ள maruti swift book பண்ணியிருக்கேன்டா அதான், பொண்டாட்டியோட போய் பாத்து கலர் select பண்ணிட்டு வரேண்டா என்கிறான், குமரவேளுக்கு பேசினால் china town ன்னு புதுசா ஒரு ஒட்டல் திறந்து இருக்காங்க குடும்பத்தோட புத்தாண்ட கொண்டாட போய்கிட்டு இருக்கேண்டா என பதில் அளிக்கிறான், பாண்டியனுக்கு பேசினால் குடும்பத்தோட கோவிலுக்கு போறேன் என்கிறான்மற்றொரு நண்பர் இப்பதான் பாருல ஆர்டர் குடுத்துக்கிட்டு இருக்கேன், வாங்க கலந்துக்குங்க என்றழைக்கிறார்.இப்படி எல்லோரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட, இதோ வந்து விட்டது அழைப்பு,"டாக்டர் சாப் கோடி(குதிரை) பச்சா தேரா", அடித்து பிடித்து ஆடை மாற்றி புறப்பட்டு விட்டேன், மனைவி கண்விழித்துப்பார்த்து " என்ன பிழைப்போ இது போங்க" என புலம்ப இந்த புலம்பல் ஒரு தொடர்கதை ஒவ்வொரு ஆண்டும் கேட்டுப்பழகிவிட்டது எனக்கு. இரவு 10:30 துவங்கி விட்டது ஆண்டின் முடிவுக்கான count down , ஒரு புது உயிரின் ஜனிப்பு. புத்தாண்டு பரிசாக dystocia, குதிரையில் கொஞ்சம் கடினம், குதிரை சக்திக்கேதிராக மனித சக்தியை பயன் படுத்த வேண்டும், அரை மணி நேரப்போராட்டதிர்க்குப்பின் ஒரு புதிய உயிரின் தோற்றம், ஒரு வகையில் சந்தோசம் புத்தாண்டில் புத்தாடை இல்லையென்றாலும் புத்துயிருடன் துவங்குகிறதே என்று. இந்த புலம்பல் தொடரும் ஒவ்வொரு ஆண்டும்.

மிலிடரி சரக்கை எங்கிருந்தோ பிடித்து வந்து விட்டு, போண்டுகல்லாம் சீக்கிரம் சாப்பிட்டு கேளம்புங்கப்பா நாங்க சரக்கடிச்சுட்டு சாப்பிடனும் என்று அலம்பல் செய்த பல்லு ஜெயராமனை மறக்க முடியுமா. நண்பிகள் அனைவரும் சாப்பிட்டு சென்றவுடன் மெஸ் பாராக மாறி அனைவரையும் மகிழ்வித்ததை எப்படி மறப்பது, பின்னர் தொடங்கிய ஆட்டம் மறக்கக்கூடியதா , பெண்கள் பகுதியில் வந்து நாங்களும் ஆடுவோம் என்று தொண்டைகாய கத்தி போராடியும் "லங்குடு மாமா" சதீஷ் மற்றும் அந்தப்புர சேவகர்களின் கடும் எதிர்ப்பால்,பயனற்றுப்போனது. பெண்கள் பகுதியில் நடந்த ஆட்டம்,கொண்டாட்டம் அனைத்தும் இப்போதும் பசுமரத்தாணி போல் நினைவில் உள்ளது, பக்கத்து கட்டிடத்தின் கூரையிலிருந்து நாங்கள் உயிரை துச்சமென மதித்து பார்த்தது"ஐயோ இப்போது நினைத்தாலும்"
கரையான்.

மத்திகிரியில் 1992 NEW YEAR PARTY

MVC1992 நண்பர்கழே
நாம் 1992 NEW YEAR பார்ட்டி எவ்வாறு கொண்டாடினோம் என்பது யாருக்காவது ஞயாபகம் உள்ளதா? ஏதோ எல்லாரும் நடனம் ஆடின நினைவுகள் மிக Vague ஆக உள்ளது. ஹோசூர் hostel இல் நமது வகுப்பு ஆண் நண்பர்கள் ஸெவுர் ஏறி நண்பிகள் இருக்கும் பக்கத்திற்கு வந்து கூத்தடித்த ஞயாபகம் வருகிறது. சிலர் அதிக தண்ணி போட்ட ஞாயபகமும் வருகிறது...
மற்ற யாருக்காவது அந்த வருஷத்தின் கூத்துகள் நினைவுக்கு வந்தால் தயவு செஞ்சி ப்லோக் எழுதவும். - குஜிலி
இவர் இப்ப இருப்பது கேரளா வுல, அவரு வேல செய்யுற பல்கலைகழகத்துல புதுசா ஒரு டிபார்ட்மென்ட் உண்டாக்கி இருக்காங்களாம் மொழி ஆராய்ச்சிக்கென்று, அவர் பேசும் மொழி எது என்று கண்டு பிடிக்க. அவர் பேசுவது, தமிழா,தெலுங்கா,மலையாளமா அல்லது ஆங்கிலமா என்று பெரிய பட்டிமன்றமே நடக்குதாம். M.V.Sc., டிகிரி வாங்க ஒரு முழு old monk, Ph.D., வாங்க ஐந்து முழு Teacher's Scotch, இதுதான் இவர் formula. இவருக்கு ஆறறிவு இருந்தாலும், ஆங்கில அறிவு பூஜியம்தான். பல முறை சென்னைல viva நடத்த நம் கல்லூரிக்கு external examiner ஆக வந்து பிரியாணி சாப்பிட்டு தாகம் தீர்த்து செல்கிறார்(என்ன கொடுமை கண்ணன் சார் இது... நீங்களும் கல்லூரியில ஆசிரியர் இவரும் கல்லூரி ஆசிரியர்). ஒரு முறை கரையான்,பாண்டி மற்றும் நம் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார் சென்னை வந்தபோது, அன்று கொஞ்சம் ஓவராகி குடை சாய்ந்து விட்டார், அடுத்த நாள் காலை கரையான் அக்கறையாக செல் பேசியில் அழைத்து external viva exam க்கு தயாராகி விட்டாயா என வினவ, ராத்திரி பன்னெண்டு மணிக்கு எல்லாம் தெளிஞ்சு, தூக்கம் வரல எழுந்து paper திருத்த ஆரம்பிச்சுட்டேன் என்று அவனை அதிர வைத்தார், இவர் அந்த நேரத்தில் இருந்த நிலைக்கு என்ன லட்சணத்தில் திருத்தி இருப்பார், ஐயோ பாவம் அந்த மாணவ மணிகள். இவருடைய விருந்தோம்பலில் முக்கி முத்தெடுக்காதவர்களே இல்லை என்றுகூட சொல்லலாம். ஒன்றுமே கிடைக்க வில்லை என்றால் பட்டையாவது படைத்து விடுவார். இவருடைய தேசிய உடையை இன்னும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார், ஒரு நைந்து போன சேப்பு துண்டும், கலர் மக்கி, நைந்து கிழியக்காத்திருக்கும் கைலியும்,சள்ளடையாகிப்போன முண்டா பனியனும் இன்னும் மணம் மாறாமல். அடுத்தது இவருடைய இலக்கு அரசியல்தான்.

Bhai

டே கரையான்,
பாடம் நடத்துபவர்கள்,பாங்கில் இருப்போர் என்ன செய்ய?

Bhai

Dear Classies,
1.It is very simple to post. Sign in with your or our google account [To get password contact me at 'vetahmad@yahoo.com]
2.Mention your name or nickname in the 'Title'.Some postings were without it.We don't know who has posted.
3.Post your images using the 'Add Image' icon.