திங்கள், செப்டம்பர் 10, 2012

Ad by Gujili's Friend

சேர்த்தது,
பாய்.

EMBARASSING தொடர்ச்சி....

நிறைய நெருடலான கேள்விகள் பல நேரங்களில் சந்திப்பதுண்டு. எனக்கு மட்டும்தான்  இப்படியா இல்லை மற்றவருக்கும் இப்படிதானா  தெரியவில்லை.
சமீபத்தில் பண்ணையில் எனக்கு நிர்வாகத்தில் உதவியாக இருக்கும் துணை மேலாளர் விடுமுறையில் சென்று விட்டார், அதனால் பணியாளர்களுக்கு காஸ் வாங்குவது முதல் குதிரைக்கு மருந்து வாங்குவது வரை எல்லா வேலைகளும் என் தலையில். ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும் ரசீது வாங்கும்போது தர்மசங்கடாமான நிலை என்றே சொல்ல வேண்டும். காஸ் சிலிண்டர் வாங்கிய பின் கடைக்காரரிடம் ரசீது கேட்டேன், அவர் உடனே என்னிடம் எவ்வளவுக்கு ரசீது வேண்டும் என்றார், நான் வாங்கியதற்குதான்  என்றேன், அவர் என்னை விநோதமாக பார்த்து கொண்டே நான் வாங்கிய ஐந்து சிலிண்டெருக்கு ரசீது கொடுத்தார். நான் அவரிடம் ஒரு சிலிண்டர் பதினாறு ரியால் என எல்லோருக்கும் தெரிந்ததுதானே எப்படி அதிகமாக கொடுப்பாய்  என்றேன், அவர் ஐந்துக்கு பதிலாக ஆறு சிலிண்டர் வாங்கியதாக கொடுத்தால் போச்சு என்றார். மருந்து வாங்க கடைக்கு போனாலும் இதே நிலைதான், ஒரு எகிப்திய கால்நடை மருத்துவர் 5% கமிஷன் என்பது நோர்மல் என்றார், நான் எனக்கு கமிஷன் எல்லாம் வேண்டாம் அதை discount ஆக கொடுத்து ரசீதில் எழுதி கொடு என்றேன், அவன் கடும் கோபம் அடைந்து விட்டான்,  அடுத்த முறை உனக்கு பதிலாக வந்து வாங்குபவனை மாட்டி விடுகிறாயா  என்று சண்டைக்கு வந்து விட்டான். ஒரு vial  10% xylazine 350 ரியால் அனால் ரசீது 450 ரியாளுக்குதான் தருவேன் என்றான், உனக்கு 100 ரியால் என்றான், நான் அதெல்லாம் முடியாது எனக்கு உண்மையான தொகைக்கு  ரசீது வேண்டும் என்றேன், " மூளை இல்லாதவனே இப்படியெல்லாம் இருந்தால் இங்கு ரொம்ப நாள் வேலை செய்ய மாட்டாய்" என்றான். எனக்கு அதுதான் வேண்டும் உண்மையான தொகைக்கே ரசீது கொடு என்றேன். ரசீதை முகத்தில் எறியாத  குறையாக கொடுத்தான்.
இதெற்கெல்லாம் மகுடம் வைப்பது போன்ற சம்பவம்.....
என்னுடைய முதலாளியின் மகன் என்னிடம்" டாக்டர் ஒரு ஒட்டகம் வாங்க போகிறேன், உன்னுடைய புதிய காரில் செல்வோம் வா " என்றான், நானும் கொஞ்சம் பாலைவனத்திற்குள் பயணம் செய்து வரலாமே என்று கிளம்பினேன், போகும் வழியில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பங்கிலிருந்த பெங்காளியிடம் ரசீது கேட்டேன். அவன் " கித்நேக்கா சாப்"(எவ்வளவுக்கு)" என்று கேட்டான். இந்த கேள்வியில் கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டேன், நல்ல வேலையாக என்னருகில் உட்கார்ந்திருந்த முதலாளி மகன் அவனுடைய செல் பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான்.

(நண்பர் அருண் பிரசாத் அவர்களை சென்னை நட்சத்திரங்கள் அன்புடன்  வரவேற்கிறது...)

கரையான்.

வெள்ளி, செப்டம்பர் 07, 2012

No Comments




உங்களது கமெண்டுகளை எழுதவும்
பாய்.

என்ன ஆச்சு?

பல வேலைகளுக்கிடையில் ,மிக்க சிரமத்துடன் ப்ளாக் செய்கிறோம்.


கீழ்கண்டவர்கள் என்ன ஆனார்கள்!

 
சொக்கா-நீ என்ன கொக்கா?
தாஸு-
நீ என்ன க்ளோசா?
ப்ளாக்கி-உனக்கு என்ன கிராக்கி?
தீபா-நீ என்ன பிரதீபாவா?
பாமா-ப்ளாக்கிற்கு வாமா?

பீரு-ப்ளாக்கில் வந்து சீறு!
ஜாகிர் உசைன்-நீ என்ன உசைன் போல்ட்டா?
ஸ்ட்ரைக்கு  செந்திலு-ப்ளாக்கிற்கு எதிராக
ஸ்ட்ரைக்கா?
 





பாய்
 

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

தாயகம் 2012-2

தங்கை வீட்டில்

 

  
                                                               தங்கை வீட்டில் 

 பொள்ளாச்சி நண்பரது ,மைத்துனன் வீட்டில் பெயர் ரியாஸ்
-பிசினெஸ் மேனாக இருந்தும்,தனது காரில் எம்மை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ,செம விருந்து படைத்தான்.
                             கோவையில் இருக்க ,கொடுத்து  வைக்கணும்.
                                                       ரயில் நிலையத்தில் 

பிரியமுடன்,
பாய்.

திங்கள், செப்டம்பர் 03, 2012

EMBARASSING QUESTIONS

குஜிலி என்னுடைய முந்தைய பதிவில் சம்பளம் பற்றிய கேள்விகள் நெருடலாக (embarassing) இல்லையா என்று கேட்டிருந்தார், இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு, ஒருவர் நம்முடைய வருவாய் எவ்வளவு என்று கேட்பதில் என்ன தவறு என்பது என் கருத்து. பல சந்தர்ப்பங்களில் இதை விட அதிக நெருடலான கேள்விகளை சந்திப்பதுண்டு. உதாரணத்திற்கு , எனக்கு திருமணம் ஆனா புதிதில் நம் கல்லூரிக்கு சென்றிருந்தேன், அப்போது நம் தோழியர் சத்தியபாமா மற்றும் பிரேமலதா ஆகியோரை சந்தித்தேன், அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி," உன்னுடைய மனைவி எங்களை விட அழகாக இருப்பாளா", இதை விட embarassing ஆனா கேள்வி உண்டா. இதற்கு ஆம் என்றால் தோழியர் கோபமடைவார்கள், இல்லை என்றால் பொய் சொன்னதாகி விடும்(அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை துணை தான் most beautiful in the world) , இன்னுமோர் நெருடலான கேள்வி "நீ ஏன் PG பண்ண வில்லை" என்ற கேள்வி , நான் நினைத்தாலும் கல்லூரியில் சேர்த்து கொள்ள மாட்டார்களே( குறைந்தது 3 OGPA இருக்க வேண்டுமே.)  இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம், உன் குழந்தை எத்தனையாவது ரேங்க் என்ற கேள்வியும் சில நேரங்களில் நெருடலாக அமைவது உண்டு. என் குழந்தைகள் என்னைப்போலதானே இருப்பார்கள்... முதல் ரேங்க் எல்லாம் வாய்ப்பில்லை.... ஏன்  commerce க்ரூபில் சேர்த்தாய், டாக்டருக்கு படிக்க வைக்கலையா ? இப்படி பல கேள்விகள் embarassing ஆக இருப்பதுண்டு...

கரையான்.

ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

தாயகம் 2012-1

இரண்டு  மாத விடுமுறைக்குப் பிறகு ,தாயகத்தில் இருந்து  திரும்பி விட்டேன்.
இனி,வழக்கம் போல் ,நம்ம ப்ளாக்கில்  புகுந்து விளையாடப்  போகிறேன்.
நிறைய படங்கள் இருக்கிறது.

  பொள்ளாச்சி 





இதைப் போன்றதொரு ஊரை என்னால் விரும்பவே முடியாது .சீதோசன நிலை எவ்வாறு மிக  நன்றாக உள்ளதோ ,அதை விட அந்த  ஊர் மக்கள் சிறந்தவர்கள் . பணி  புரிந்த பத்து வருடங்கள் ,தேங்காயே வாங்கியதில்லை என்றால் ,பார்த்துக்கொள்ளுங்கள் !

அருமை நண்பர் ஸாதிக் .என்  மகனும் -அவர் மகனும் LKG   படிக்கும்  போது ,ஏற்ப்பட்ட நட்பு .

அன்புடன் ,
பாய்