வெள்ளி, மே 11, 2012
வியாழன், மே 10, 2012
Happy Birthday Gujili
A very Happy Birthday to Gujili. May you always continue to light this world with your wonderful smile and laughter. May joy, Happiness and good health fill your life forever.
Chennai stars.....
Chennai stars.....
புதன், மே 09, 2012
ஞாயிறு, மே 06, 2012
தொழில்முறை
ஆபத்துகள்
சமீப காலமாக எங்கள் பண்ணையில்
புருசெல்லோசிஸ் அல்லது மால்டா பீவர்
பிரச்னை மிக பெரிய அளவில்
விஸ்வருபம் எடுத்துள்ளது. எங்கள் முதலாளியின் குடும்பத்தில்
ஏழு பேர் ஒட்டக பால்
குடித்ததால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு
உள்ளார்கள், மேலும் ஒட்டகப்பண்ணை யில் பணி
புரியும் பணியாளர்களில் பத்து பேர், எங்கள்
குதிரை பிரிவில் பணிபுரிபவர்களில் நான்கு பேர்(இவர்கள்
ஒட்டகப்பால் குடித்தவர்கள்), ஆடுகள் பிரிவில் பணிபுரிபவர்களில்
இரண்டு பேர் என பலரும்
பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நான் ஆறு மாதங்கள்
முன்னாள் ஒட்டகப்பால் குடிப்பதை நிறுத்தி விட்டேன், என்றாலும் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயம் கடும்
மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. ஒட்டகப்பால்
குடித்தது மட்டும் அல்லாமல், கடந்த
மூன்று மாதங்களில் ஐந்து dystocia ஒட்டகங்களில் சிகிச்சை அளித்துள்ளேன், இந்த ஐந்து dystocia களுமே
குட்டி இறந்து வெளியே வர
முடியாததால் பிரச்னை ஆனவை, ஒரு
ஒட்டகம் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டு
கொண்டிருந்தது, (இரண்டு நாட்கள் காத்திருந்து
அதன் பின்னரே எனக்கு சொன்னார்கள்)
குட்டி மற்றும் ப்லாசெண்டா உள்ளேயே
அழுகி அதை வெளியில் எடுப்பதற்குள்
எனக்கு மயக்கமே வந்து விட்டது(அவ்வளவு துர்நாற்றம்). இப்படி
கிட்டத்தட்ட புருசெல்லா அறிகுறிகளுடன் வந்த ஒட்டகங்களை சிகிச்சை
செய்ததால் அனேகமாக எனக்குதான் முதலில்
வந்திருக்கும் என முடிவே செய்து
விட்டேன். இதில் சில நாட்களாக
இரண்டு கால் மூட்டுக்களிலும் வலி
வேறு, எனக்கு மால்டா பிவெர்தான்
என முடிவே செய்து விட்டேன்.
அடுத்து என்ன சிகிச்சை, இங்கேயே
எடுத்து கொள்வதா, ஊரில் சென்று சிகிச்சை
எடுத்து கொள்வதா என பல
வகையான எண்ண ஓட்டங்கள், நமக்கு
அதெல்லாம் வராது என்ற ஒரு
அசட்டு துணிச்சல் என்பதை விட பிரச்னையை
முகம் கொடுத்து சந்திக்க பயம் என்றுதான் சொல்ல
வேண்டும், ஒரு வழியாக மனதை
திட படுத்திகொண்டு மருத்துவ மனை சென்றேன், மருத்துவரிடன்
எடுத்து கூறி புருசெல்லோசிஸ்-க்கான
பரிசோதனை செய்ய வேண்டி கொண்டேன்,
அவரும் பரிசோதனை கூடத்திற்கு எழுதி கொடுத்தார், ரத்த
பரிசோதனை செய்ய இருபது நிமிடங்கள்
ஆகும் என்று கூறினார் அங்கிருந்த
பெண், அந்த இருபது நிமிடங்கள்
(விவரிக்க முடியாத கணங்கள்...) முடிந்து
அவர் என்னிடம் முடிவை கொடுத்து நெகடிவ்
என்று கூறியவுடன் அவரை தலைக்கு மேலே
தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் என்று
எழுந்த ஆர்வத்தை அடக்கி கொண்டு வீடு
வந்து சேர்ந்தேன், சந்தோஷத்தில் பறந்து வந்தது போன்ற
ஒரு பீலிங்.....நாங்கெல்லாம் யாரு கொசுவுக்கே மலேரியா
குடுக்குற ஆட்கள் எங்களுக்கெல்லாம் நோயாவது
வர்றதாவது...என்று இப்ப சொல்லிக்கிட்டு
திரியறேன்...போன வாரம் பூரா
நடுங்கிகிட்டு திரிஞ்சது எனக்கு மட்டும் தெரிஞ்ச
ரகசியம்.....
கரையான்.
(யாருப்பா பிளாக் செட்டிங்கை மாற்றியது, பிளாக் உல் நுழைய வழி கண்டு பிடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.)
புதன், மே 02, 2012
செவ்வாய், மே 01, 2012
செல் போன்
சமீபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்றானான அலை
பேசி நம்மிடையே உண்டாக்கியுள்ள மன நோய்களும் அதனால்
உண்டான பிரச்னைகளும் பலப்பல. சமீபத்தில் ஆவடியில் இருவர் செல் போன் பேசிக்கொண்டே தொடர்வண்டி
பாதையை (railway track) கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக செய்திகளில்
வந்தது. அவர்களுக்கு அப்படி என்ன அவசரம் அலைபேசியில்
பேசிக்கொண்டே ரயில் வருவது கூட தெரியாமல் செல்ல. எமனிடமிருந்து அழைப்பு வந்திருக்குமோ என்னவோ. நம் நண்பர் பாபு அவரை சந்திக்க என்னை அழைத்திருந்தார், நம் கல்லூரி காண்டீனில் சந்தித்தோம், அந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது, அதில் ஐம்பத்து ஐந்து நிமிடம் அவர் அலை பேசியில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தார், ஒரு ஐந்து நிமிடம் அளவுதான் என்னிடம் பேசினார். கடைசியாக நான் அவரிடம் நான் வேண்டுமென்றால் உன்னை அலை பேசியில் அழைக்கவா எதிரெதிரே நாம் இருவரும் உட்கார்ந்து கொண்டு அலை பேசியில் இருவரும் ் பேசி கொண்டு இருக்கலாமா என்றேன்.
இன்னொரு நண்பர் என்னை சந்திக்க அழைத்தார், நான் அவரிடம் ஒரு
கண்டிஷன் போட்டேன்
அதாவது அவர் அலை பேசியை எங்கள் சந்திப்பு முடியுவரை ஆப் செய்து வைக்க வேண்டும் என்று ஆனால் அவர் சைலென்ட் -ல் வைப்பதாக கூறினார், நானும் ஒப்புக்கொண்டேன், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய போனை
நிமிடத்திற்கு ஒருமுறை எட்டி எட்டி பார்த்து கொண்டே இருந்தார்,எதாவது அழைப்பு வருகிறதா என்று , ஐயா நீங்க ஜெனரல் mode -லேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டேன்,
அவர் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் செய்து கொண்டு இருந்தார்.
சென்னையில் பல முறை நான் வண்டி ஓட்டும்போது பார்த்திருக்கிறேன்,
நடைபாதையில் செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும்
அலைபேசியில் FM station- ல் பாட்டு கேட்டு கொண்டே செல்வதால் நாம் என்னதான் ஒலிப்பான் அடித்தாலும் கண்டு
கொள்ளாமல் செல்வார்கள். இப்போது மனவியலார்கள் ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரமாவது அலைபேசியை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். நான் தூங்கும்போது அலை பேசி அடித்தால் நான் அடித்து பிடித்து கொண்டு எழுந்திருப்பதாக என் மனைவி கூறுகிறாள், இதுவும் மன வியாதிதான்.
எனக்கு வரும் அழைப்புகள் எங்கள் பன்னையிளிருந்தும் நண்பர்களிடமிருந்தும் மட்டுமே
அப்படி இருந்தும் என் நிலை இப்படி என்றால்
சொக்கன் நிலைமை சொல்லவே வேண்டாம்,
நான் இதற்கு முன்னர் ஒரு மருத்துவ மனையில் வேலை செய்யும்போது இரவு
பகல் என்று எப்போதும் என் போன் அழைத்து கொண்டே இருக்கும் நானும்
சளைக்காமல் அழைப்புகளுக்கு பதில் சொல்வேன். அந்த வேலையை விட்டு
அடுத்த வேலைக்காக காத்திருக்கும் பொது சில வேளைகளில் அலை பேசி
கையில் இல்லாத நேரங்களிலும் கூட அழைப்பு சத்தம் காதில் கேட்கும்.
கரையான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














