செவ்வாய், செப்டம்பர் 06, 2011

indru rasitha status



Priya Kalyanaraman
நான் ஸ்கூலில் படிக்கும்போது தெருவில் ஆசிரியர்களைப் பார்த்தால் எகிறிக் குதித்து ஒளிந்து கொள்வேன். இன்று என் குழந்தைகள், ஆசிரியர்களைக் கண்டாலே ஓடிப் போய் உற்சாகமாய்ப் பேசுகிறார்கள். எல்லா ஆசிரியர்களுக்கும் உங்கள் தின வாழ்த்துக்கள்!
Like · · 3 hours ago · Privacy:
71 people like this.

Krish Jk நான் ஸ்கூலில் படிக்கும்போது தெருவில் ஆசிரியர்களைப் பார்த்தால் எகிறிக் குதித்து ஒளிந்து கொள்வேன்....இபோதும் அதே கதி தான் .... என் குழந்தையின் வீட்டு படத்தை இன்னும் நான் முடிக்க வில்லை
about an hour ago · Unlike · 10 people
Priya Kalyanaraman suupperu
about an hour ago · Like

திங்கள், செப்டம்பர் 05, 2011

சர்தார்ஜி ஜோக்....நெட்டில் சுட்டது..

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
 
ஜோக் 2
 
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார்.

மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க...
 
கரையான்.....

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

என்னுடைய ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களாய் பணிபுரியும் தோழர்/தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்....

கல்லூரி வாழ்க்கையில் என்னைகவர்ந்த ஆசிரியர் டாக்டர் குணசீலன் அவர்கள், அதற்காக மற்றவர்களை பிடிக்காதா என்றால் தவறு, அனைவரிலும் அவர் கொஞ்சம் அதிகமாக கவர்ந்தார் எனலாம். சமீபத்தில் அவரைப்பார்த்தபோது நம் நண்பர் நாயூரான் அவருடன்,"சார் உங்களபத்தி ரொம்ப கம்பிளைன்ட் வருது, பாத்து நடந்துக்குங்க" என்று அவனுடைய பாணியில் கூறினான், அவர் "என்னப்பா கண்ணா என்னபத்தி கம்பிளைண்டா நான் ஒன்னும் அப்படி பெரிய தப்பு ஏதும் பண்ணலையே யாரு உன்னிடம் என்னைப்பற்றி கூறியது" என்றார். "இல்ல சார் பசங்கதான்... ஹாஸ்டல் வார்டனா இருந்துகிட்டு பசங்கள கஞ்சா அடிக்க விட மாட்டேன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கீங்களாம், படம்(நீலம்) பாக்க முடியல தண்ணீ கூட அடிக்க முடியலைன்னு பசங்க எல்லாம் ரொம்ப பொலம்பறாங்க சார்" என்றான். என்னப்பா இது நல்ல பழக்கம் வரட்டும்னு கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருந்தா இப்படியெல்லாம் கூடவா சொல்லுவாங்க இதுக்கு நீ வேறே பஞ்சாயத்து செய்ய வர்ற...என்றார்.

கரையான்.

solli kudutha vathyaragthaan
irukka vendumenbathillay
amma appavilirunthu pillay varai
nanban mudhal ethiry varai
therinthavar mudhal theriyathavar varai
ellorume ethaiyavathu
epothavathu enakku
arivu pugatty ullanar
avargal anaivarum nallasiriyare
enave ivulagil
ulla anaivarukkum
aasiriyar thina vaazhthukkal

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

நூதன முறை லஞ்சம்

தினமலர் வாரமலரில் படித்தது....

நூதன முறை லஞ்சம்!
வாரிசு சான்றிதழ் பெற, உரிய அலுவலகத்தில் மனு செய்தேன். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், "நீங்கள் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்...' என்று சொல்லி, என் பெயரை துண்டு சீட்டில் குறித்தார். அதன் மறுபக்கத்தில் ஒரு மொபைல் நம்பரை குறித்து, என்னிடம் கொடுத்து, "அந்த எதிர் கடையில், இந்த நம்பருக்கு, 301 ரூபாய்க்கு, "டாப் - அப்' செய்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் வாரிசு சான்றிதழ் வேலை, கனகச்சிதமாக முடிந்து விடும்...'என்றார்.
ஒரு காலத்தில், லஞ்சத்தை பணமாக, நேரடியாக வாங்கி பழக்கப்பட்டவர்கள், இப்போது புதிய யுக்தியாக லஞ்சத்தை, "டாப்-அப்' மூலம் பெறுவது, அவர்கள் பாதுகாப்பிற்காக என்பதை புரிந்து கொண்டேன்; அவர் சொன்னபடியே செய்தேன்.
இப்போதெல்லாம், லஞ்சத்தை பணமாக பெறுவது, கவுரவ குறைச்சலாக உள்ளது. அதனால், தன் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பருக்கு, டாப்-அப், பூஸ்டர் கார்டு, ரேட் - கட்டர் கார்டுக்கு பணம் செலுத்த சொல்வது, வெளிமாவட்டத்தில் இருக்கும் தன் வங்கி கணக்கில், பணம் போட சொல்வது போன்ற, நூதன வழியை கண்டுபிடிக்கின்றனர். இந்த வழியில் லஞ்சம் பெறுவது வாடிக்கையாகி விட்டது என்பது விசாரித்து பார்த்ததில் தெரிய வந்தது. கேட்க, கேட்க எனக்கு தலைசுற்றியது.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி

கரையான்.

சனி, செப்டம்பர் 03, 2011

லஞ்சம் பற்றி....

லஞ்சம் பற்றிய நம் கருத்துக்கணிப்பில் கால்நடை மருத்துவத்துறை மிக பின் தங்கி இருப்பது ஒரு வகையில் சந்தோசமாக இருந்தாலும் பொழைக்க தெரியாதவர்கள் உள்ள துறை என்று ஏளனத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற கவலையும் எட்டிப்பார்க்கிறது.ஏன் இந்த நிலை என்று நண்பர் பாய்,செந்தில்  அல்லது சொக்கன்தான் விளக்கம் அளிக்க   வேண்டும். சொக்கனை இதில் ஏன் சேர்த்தாய் என கேள்வி எழலாம், கொடுத்தவர் என்பதால் சொக்கன் பெயரை சேர்த்தேன், துறையில் பணி புரிந்தவர்கள் என்பதால் பாய் மற்றும் செந்தில் விலாவாரியாக எழுதலாம். சமீபத்தில் அரசு சொட்டு நீர்பாசனம் பயன் படுத்தும் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம் என அறிவித்து உள்ளது. இதில் விவசாயியை விட விவசாயத்துறை அலுவலர்களுக்குதான் பயன் அதிகம். முதலில் அறுவது சதவீத மானியம் இருந்தது, என்னுடைய நிலத்தில் சொட்டு நீர் பாசனம் செய்யலாம் என சம்பந்தப்பட்ட துறையை அணுகினேன், அவர்களும் ஒரு லட்சம் செலவுக்கு நீங்கள் நாற்பதாயிரம் கட்டினால் போதும் மீதத்தை அரசு செலுத்தி விடும் என்று கூறினார்கள், நானும் எல்லாம் தயார் செய்த பின்னர் ஒரு ஏக்கருக்கு கிடையாது குறைந்தது ஒரு ஹெக்டர் அளவு சொட்டு நீர் பாசனம் என்றால்தான் செய்ய முடியும் என்று கூறி விட்டார்கள், இதை முதலிலேயே சொல்லி இருந்தால் நான் நிலத்தை தயார் செய்திருக்க மாட்டேன், பாதியில் விட மனதில்லாமல் நானே முழுதும் செலவு செய்து சொட்டு நீர் பாசன குழாய்கள் அமைக்க வேண்டியதாகி விட்டது.  பின்னர் விசாரித்த போது நண்பர் ஒருவர் நீங்கள் தேவையான document களை வழங்கினால் மட்டும் போதாது, மற்ற விஷயங்களை நீங்கள் வைக்காததால் ஒரு ஏக்கருக்கு கிடையாது என்று கூறி விட்டார்கள் என்று கூறினார்.

கரையான்.

INVICTUS-MOVIE

சமீபத்தில் INVICTUS என்ற ஆங்கில படம் பார்த்தேன். அந்த படத்தை பார்க்கும்போது நம் தலைவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. கிளின்ட் ஈஸ்த்வூத் இயக்கத்தில் உருவான படம், நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையை தழுவி உண்மை சம்பவங்களை கதைக்களமாக கொண்ட படம். நிறவெறி  ஆட்சி முடிந்து பெரும்பான்மை கருப்பர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தோல் நிறத்தால் பிரிந்து கிடந்த வெள்ளையர்களையும் கறுப்பர்களையும் விளையாட்டு மூலமாக சேர்த்து வைத்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்கும் தலைவர் பற்றிய படம். ஒவ்வொரு காட்சியிலும் நெல்சன் மண்டேலாவுடன்(Morgan Freeman) நம் மன்னுமோகன் சிங்கையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒரு  தலைவன் நாட்டை ஆள பெரும்பான்மை மட்டும் இருந்தால் போதாது, அந்த மக்களையும் நாட்டையும் உண்மையாக நேசிக்க வேண்டும் என்பதை மிக அருமையாக சித்தரித்துள்ளது இந்த படம்.
படம் பார்த்து முடிந்த வுடன் ஒரு ஏக்க பெருமூச்சுதான் விட முடிகிறது, ஓட்டுக்காக மக்களை எப்படியெல்லாம் பிரித்து  ஒட்டு வாங்கலாம் என ரூம் போட்டு யோசிக்கும் நம் தலைவர்கள் அனைவரும் பாக்க வேண்டிய படம்.

கரையான்.