நம்ம ஆட்களுக்கு கள்ள ஒட்டு போட சொல்லி கொடுக்கணுமா என்ன? அடிச்சி ஆடிட்ட மாதிரிதான் தெரியுது, எழுபத்து எட்டு ஓட்டு கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. இந்த கருத்துகணிப்பை வெளியிட்ட நண்பர் யாரோ அவருக்கு நன்றி. இதில் நானெல்லாம் வெளிநாட்டில் கலக்கிக்கொண்டு இல்லை, கலங்கி கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி, நான் என் ஓட்டை நம் நண்பர்களில் ஒருவருக்கு பதிந்து விட்டேன்.
(சம்பந்தமே இல்லாமல் எதற்கு இந்த படம் என்று நீங்கள் கேட்கலாம், சும்மா ஒரு கவர்ச்சிக்குத்தான்...இதெல்லாம் இல்லாமல் எப்படி ஓட்டு போட்டவுங்களுக்கு நன்றி சொல்றது....)
இந்த ஒட்டகம் சில நாட்களுக்கு முன் restrain செய்வதற்காக அதன் மூக்கின் மேல் கயிறு சுற்றி இறுக்கப்பட்டது. அதன் விளைவாக ஏற்பட்ட காயம் காரணமாக மேல் உதடு மற்றும் மூக்கு பகுதிகள் gangreene ஆகி slough ஆகி விட்டது. வழக்கம்போல் எல்லாம் முடிந்த பின்னர்தான் கால்நடை மருத்துவரை(நான்தான் அந்த பலிகடா) அழைத்துள்ளார்கள். நண்பர்கள் அவர்களின் suggestions ஐ கொடுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.
நண்பர் ஒருவர்(கால்நடை மருத்துவர்தான்) புதிதாக சவூதிக்கு பணி புரிய வந்துள்ளார், அவரிடம் பேசும்போது அவர் பணி புரியும் பண்ணை மிக சிறியது என்றும், அவருக்கு சம்பளம் வாங்கும்போது மன உறுத்தல் இருப்பதாகவும் கூறினார், அதாவது அங்கு வேலையே இல்லை, மேலும் சில வசதிகள் செய்து கொடுக்க நிர்வாகத்திடம் கேட்கவே தயக்கமாக இருக்கிறது என்று கூறி புலம்பினார். சவுதியில் வேறு துறைகளில் பணி புரியும் பல நண்பர்கள் என்னிடம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் பற்றி கொஞ்சம் பொறாமையாக பேசுவார்கள், நான் அவர்களிடம் நிர்வாகம் எனக்கு இதையெல்லாம் இலவசமாக கொடுத்தாலும் அதில் அவர்களுக்குதான் லாபம், என்று எடுத்து கூறுவதுண்டு. நியாயப்படி அல்லது சட்டப்படி பார்த்தால் நான் எட்டு மணி நேரம் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும், ஆனால் எனக்கு பண்ணைக்குள்ளேயே வீடு கொடுக்கப்பட்டிருப்பதால் எந்த நேரத்திலும் பணிக்கு அழைக்கப்படுகிறேன்.கிட்டத்தட்ட மூன்று ஷிப்ட் பணியை நான் மட்டுமே செய்கிறேன், அதற்கு எனக்கு எந்த விதமான over time சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு பேருக்கான சம்பளம் முதலாளிக்கு மிச்சம்.
இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளில் இதுவும் ஒன்று. அவரவர் பணி நேரம் முடிந்தவுடன் கம்ப்யூட்டர் ஐ அணைத்துவிட்டு கிளம்பி விடுவார்கள், நம்மவர்கள் மேலதிகாரி சென்று விட்டாரா, முதலாளி கிளம்பி விட்டாரா, நாம் சென்றால் அவர் என்ன நினைப்பரோ, நாம் சரியாக வேலை செய்யவில்லை என்று நினைத்து விடுவாரோ என்ற கவலையிலேயே ஓய்வெடுக்கும் நேரத்தை கூட சரியாக உபயோகிப்பதில்லை. Philippinos அதிக சம்பளம் கொடுத்தாலும் அவர்களின் ஓய்வு நேரத்தில் பணி புரிவதை விரும்புவதில்லை.
சரி சரி நான் பாட்டுக்கு கம்ப்யூட்டர்-ல டைப் பண்ணிக்கிட்டு இருக்கேன், முதலாளி வந்தாலும் வருவார்....(இன்னைக்கு வெள்ளி, வார விடுமுறையை கழிக்க பண்ணைக்குதான் ஒவ்வொரு வாரமும் வருவார்)