வியாழன், செப்டம்பர் 23, 2010

கெட் டோகேதேர் 2010

எத்தனையோ பேர் தண்ணி அடித்தார்கள்,டீசண்டாக நடந்துகொண்டார்கள்.இருப்பினும்,கெட் டோகேதேர் தண்ணி அடிக்கும் இடம் இல்லை.பிள்ளைகளை வைத்துக்கொண்டு அடிப்பது சரியல்ல. வேறு இடமா இல்லை.நாளை அக்குழந்தைகள் குடிகாரர்களாக ஆகமாட்டார்களா?
அவர்கள் முன்பு கெட்டவார்த்தைகள் பேசலாமா?சிந்தியுங்கள்.
நமது கல்லூரி மற்றும் ஆல் இந்தியா டூர் குறித்து ஒரு நினைவூட்டல் பேசி ,பழைய காலங்களை பகிரலாம் என் நினைத்திருந்தேன்.எல்லோரும் தண்ணி அடிப்பதிலேயே குறி.மேலும்,வரும் கெட் டோகேதேர்களில் ,தண்ணி அடிக்காமல் ,வெளியே எங்கும் செல்லாமல் ,கொச்சார் பாம் போல் ,உள்ளேயே இருந்து ,வேலா வேலைக்கு சாப்பிட்டு விட்டு ,பேசி தமாஷ் பண்ணி ,கல்லூரி காலங்களை பேசி மகிழவேண்டும்.செய்வோமா?
அன்புடன்,
பாய்.
குறிப்பு:படித்து படித்து சொல்லியும்,நமது ப்லொக்கில் புதிய வரவு ஏதும் இல்லை.வருத்தம்.கெட் டோகேதேருக்கு வராத GFK & GUJILI போஸ்டிங் செய்வது மகிழ்ச்சி.இந்தியாவில் உள்ளவர்களே ,நாங்கள் ஒன்றும் வேலையில்லாமல் ,போஸ்டிங் செய்வதில்லை.பல வேலைகளுக்கிடையில் ,இதற்கென்று நேரம் ஒதுக்கிகிறோம்.

புதன், செப்டம்பர் 22, 2010

கெட் டோகேதேர்

  1. வெள்ளி இரவு கரையான் குடும்பத்தினர் தப்பிவிட்டனர்.ஆம்,செமியும்,சாக்கானும் தண்ணி போட்டு விட்டு படுத்திய பாடு இருக்கிறதே ,ஐயோ வார்த்தைகளால் வார்நிக்கமுடியது.ஏன்டா வந்தோம் என்று ஆகிவிட்டது.செமி கோல்டன் ஜுபிலி லுங்கி கட்டியிருந்தான்.கோமணத்தை விட கேவலம்.ஒரே ஆட்டம்.கண்டவர் கையை பிடித்தான்.தனபாலன் மனைவியிடம் ,'நீ யாரோட மகள் என்று கேட்டான்'.சாக்கான் கதையை கரையான் எழுதியிருந்தான்.விழுந்து விழுந்து தூக்கிவிட்டோம்.இருவரும் ஓவர் கேட்ட வார்த்தைகள்.நல்ல வேலை ,அந்த பாசைஎல்லாம் என் குடும்பத்திற்கு தெரியாது.சுப்ஜெக்ட் பெசுவதுதாக நினைத்துக்கொண்டனர்.அன்று நாங்கள் புனித ரம்ஜான் விரதத்தோடு அங்கு வந்து பாச்டிங்கை முடித்தோம்.என் குடும்பத்தினர் ரூமிற்கு ஓடிவிட்டனர்.
  2. சனி: டிப்பினை முடித்துவிட்டு பஸ்ஸில் அனைவரும் ஆரோவில்லி வழியாக பீச் சென்றோம்.மதியம் எம்.செந்தில் வீட்டில் உணவு.பின்பு ஐலன்ட் தில் போடிங் ,இரவு பாம் ஹௌசில் சாப்பாடு.சாக்கான் மீண்டும் அளவுக்குமீறிய போதை.செமி அமைதி.சாக்கனுக்கு பயந்து அனைவரும் ரூமிற்கு ஓட்டம்.
  3. நாயிறு:டிபீனுக்கு பிறகு,குழந்தைகள் போட்டி,லேடீஸ் போட்டி முடிந்து பரிசுகள் வழங்கப்பட்டன.பாட்டியாகஈருக்கும் டாக்டர் .சரஸ்வதிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.டாக்டர்களுக்கு ஹீரோ பெண் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.வைரம் & எச்கேபி உரை நிகழ்த்தினார்கள்.மரணமடைந்த டாக்டர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அடுத்த கூட்டம் எங்கு,எப்போது வைக்கலாம் என ஆலோசனை கேட்கப்பட்டது.௨௧0௬ இல் கோல்டன் ஜுபிலி ,சென்னையில் வெகு சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.எக்காரணம் கொண்டும் தனியாகவும்,தன்னிக்காகவும் வரவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.கடினமாக உழைத்து ,டைரக்டர் வீட்டு திருமணத்தையும் உதறித்தள்ளிவிட்டு ,கெட்டோகேதரை ஏற்பாடு செய்த எம்.செந்திலுக்கு மனமார நன்றி தெரிவிக்கப்பட்டது.கிளைமாக்ஸ் ஆகா ,செந்தில் கண்ணீர் மல்க ஏற்புரை வழங்கினான்.

மதிய உணவு அருந்திவிட்டு ,எல்லாவற்றையும் மறந்துவிட்டு ,ஒருவரைஒருவர் ஆரத்தழுவி .நெஞ்சுருக ,கனத்த இதயத்துடன் ,பிரிந்தோம்.

இந்த நேரத்தில் ,நான் ஏற்கனவே இந்த ப்லொக்கில் எழுதியே நட்பு குறித்த கவிதையை அனைவரும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

பாய்.

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

கெட் டோகேதேர் - 1.2010

பாயின் சலாம்.

நானும் பீ.சிவா ,அவரவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து ஒரே காரில் பாண்டி ,வெள்ளி மாலை சென்றோம்.போகும் வழியில் எல்லாம் எம்.செந்தில் மற்றும் வைரம் செல் மூலமாக , பண்ணை வீட்டு இருப்பிடத்தை நல்ல முறையில் தெரிவித்ததால் , சிரமமின்றி போய் சேர்ந்தோம். மக்களின் பொருளாதாரம் கருதியோ என்னவோ ,ஒரு ரூமில் இரு குடும்பத்தினர் தங்கினோம். இரவில் மின் தடை.பின்பு ஒவ்வொருவராக வந்து சேரவும் ,ஒருவரைஒருவர் ஆரத்தழுவி வரவேற்றோம். இரவு உறங்க வெகு நேரமானது.

தொடரும்,

பாய்.

திங்கள், செப்டம்பர் 20, 2010

இங்கே குளுர அரம்பிவிட்டது. திரும்பி பார்பர்துக்குள் பணி பைய்யா ஆரம்பித்து. அத்துடன் வீடு ஞாபகமும் ரொம்ப வரும்.ஆனால் என்ன செய்ய. எங்கே நமக்கு பெயப்பு இருக்கிறதோ அங்கே தான் நம்ம வீடும் நாடும்....
என் மகன் இப்பொழுது ஏழாம் வகுப்பில் இருக்கிறான். அம்மா என்றால் ஒரே embarrassment. நான் பள்ளிகூடத்துக்கு வந்தால் அவன் பத்தடி முன்னே நடப்பான். பெண் classmates பார்த்துவிட்டால் அவர் coolness போகிவிடும். நான் என் பங்குக்கு டேய் ரொம்ப பந்தா விட்டே என்னுடய 9 yards சாரியில் பள்ளிகூடய்யக்க்க்கு வருவேன் என்று அவனை blackmail செய்து கொண்டிரிக்குறேன்.
எவளவு நால் தாங்கும் என்று பார்க்கலாம்.
GFK

வெள்ளி, செப்டம்பர் 17, 2010





ஹலோ நண்பர்களே:
மறுபடியும் பிளாக் செய்வதில் சந்தோசம். கரியன் அவர்களே போட்டோ பகிரிந்து கொண்டதுக்கு நன்றி. எங்கள் வீட்டில் எல்லாம் நலம் . இந்த படம் என் மகன் நீல மாப்பிள்ளை தோழனாக....
GFK









gun fight kanchana அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நம் வகுப்பு தோழிகள் சிலரின் சமீபத்திய புகைப்படங்கள்



கரையான்.

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

Super pictures

கரையான் அவர்களே,
படங்களை ப்ளோகில் போஸ்ட் பன்னதிற்கு மிக்க நன்றி. நமது மக்கள் எல்லோரும் சீரும் செழிப்புமாக இருக்கிறார்கள். அடுத்த முறை நன்பர்கள் கூடம் வைக்கும் போது தண்ணியை மெனுவிலிருந்து எடுத்துவிட வேண்டும்.
மட்ட்றபடி எல்லாரும் சந்தோஷமாக கூடவதை பார்த்து எனக்கு மிக்க மகிழ்ச்சி
குஜிலி...