செவ்வாய், செப்டம்பர் 14, 2010

Govindarajan, A.Kannan, Shankar, Xavier, Parthiban, Palani

Selvaraj, Ibrahim, Sureshkumar, SKB, Alexander,Mohankumar.



சுரேஷ்குமார்(suresh), SKB, கணேச பாண்டியன்(ganesapandian), ஆறுமுக ராஜு(arumuga raju), அலெக்சாண்டர்.(alexander)









SKB, பாபு, இப்ராகிம், ரவிச்சந்திரன்.














திங்கள், செப்டம்பர் 13, 2010

இந்த get to gether ஐ மிக குறுகிய காலத்தில் திட்டமிட்டு, சிறப்பாக நடத்தியதற்காக நண்பர் செந்தில் மற்றும் வைரவசாமி யை மனதார பாராட்டுகிறேன். நண்பர்களின் வயது கூடினாலும் அவர்களின் மூளையும் இதயமும் வயதாகாமல் இருப்பதற்கு உதாரணமாக நாயூரானும் ஆறுமுக ராஜும் நடந்துகொண்டது சில சமயங்களில் சங்கடமாக இருந்தாலும், நட்புக்காக பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஓவராக தண்ணி அடித்து மட்டை ஆகி விட்டு, செருப்பை எங்கோ தொலைத்த நண்பர் ஆறுமுக ராசு அடுத்த நாள், "பொறுப்பா என்ன மட்டும் தூக்கி வந்து படுக்க வைச்சீங்களே, என் செருப்பையும் கண்டு பிடிச்சு எடுத்து வர வேண்டியதுதானேடா" என எங்களிடம் கோப பட்டது சிரிப்பைதான் வர வைத்தது.... பதினான்காம் தேதி இரவு மின்சாரம் தடைபட ஒவ்வொருவருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்த நண்பர் வைரவசாமியை பாராட்டியே ஆக வேண்டும்...(கோவிந்தன் மட்டும் அவருடைய பொறுமையை இழக்க வைத்து விட்டான்)...ஹை வோல்டஜே காரணமாக அறையிலிருந்த மின்சார பல்பு வெடித்து பேச்சிலர் ஆக வந்திருந்த நண்பர்களுக்கு பல இடங்களிலும் சிறு காயங்களை உண்டாக்கியது, கஷ்டமாக இருந்தாலும் அதையும் நகைச்சுவையாக பேசி மகிழ்ந்தோம்...

ஓவர் மப்பில் ஷாஜூ தேவகுமார் என்னிடம் வந்து இது என்ன உன்னோட பொண்ணா என்று என் மனைவியை காட்டி கேட்டவுடன், என் மனைவி அடைந்த மகிழ்ச்சி, சத்தியமாக ஒருகோடி ரூபாய்க்கு வைர நகை வாங்கி கொடுத்தால் கூட வராது...

ஆறுமுக ராசு மப்பில் என் காரில் ஏறிக்கொண்டு, அங்கிட்டு திரும்பு, இங்கிட்டு திரும்பு என வழி காட்ட, அதையே பின் பற்றி இன்று வரை என் மகள் காயத்ரி அங்கிட்டு உட்காராதே, இங்கிட்டு உட்காராதே என என்னை கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறாள்..

அடுத்த கெட் டு கெதர் இல் இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். தண்ணி அடிப்பது மற்றும் நண்பர்கள் தனியாக வருவது, குடும்பத்துடன் வருவபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதை கடுமையாக அமல் படுத்தப்படவேண்டும். மேலும் எழுதுவேன்.

கரையான்.

வெள்ளி, செப்டம்பர் 10, 2010



வணக்கம். நம் நண்பர்களின் சந்திப்பு ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் மிக சிறப்பாக நடந்தது. வழக்கமான உற்சாகத்துடன், பாண்டிச்சேரி தந்த கூடுதல் உற்சாகம் நண்பர்களின் வயது மாறினாலும் இதயம் அப்படியேதான் உள்ளது என்பதை எடுத்துக்காட்டியது. மேலும் பல செய்திகள் வரும் நாட்களில் வர இருக்கிறது.... தவறாமல் படியுங்கள்...

கரையான்.


வியாழன், மே 13, 2010

அனைவருக்கும் வணக்கம்...மிக நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதுகிறேன்..
நம்முடைய வகுப்பு தோழர்கள்/தோழிகளின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் மூனார், கேரளாவில் நடைபெற உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் வந்து இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டாட வேண்டுகிறேன்...
கரையான்.

வியாழன், டிசம்பர் 31, 2009

புத்தாண்டு vazhthukkal

அன்பு மிக்க சென்னை நட்சத்திரங்களே, உங்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்துக்கள்! வாழ்க வழமுடன்!!
குஜிலி

வியாழன், டிசம்பர் 03, 2009

என் மகன் கார்த்திகேயன்பக்கத்து வீட்டு எகிப்தியன் பசங்களோட அடிக்கடி விளையாட செல்வான். நேற்று அவன் அவர்கள் வீட்டுக்கு விளையாட சென்ற போது அவர்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மூட்டையை பார்த்திருக்கிறான், அதனுள் கோழி எரு (droppings or poultry manure) இருந்துள்ளது. இவன் அவர்களிடம் அது என்ன என்று கேட்க கார்த்தியின் நண்பனான எகிப்திய சிறுவன் அது என்ன என்பதற்கு ஆங்கிலத்தில் சொல்ல தெரியாமல் செய்து காட்டிய ஆக்ஷன்தான் நாம் இந்த வீடியோ வில் பார்ப்பது.

கரையான்.

புதன், டிசம்பர் 02, 2009

படத்தில இருக்கிறவரை யாரென்று தெரியுதா, நம்ம நண்பர்தான். சுரேஷ், கல்லூரியில படிக்கும்போது ஒரு டப்பா ராஜ்தூத் பைக்குல வருவானே அவனேதான். இப்ப இவனும் வெளி நாட்டுல தான் குப்ப கொட்டுறான். டாலர் தேசம் அமெரிக்காவுல Mayo Clinic College of Medicine ல பணி புரிகின்றான்.
கரையான்.