வியாழன், டிசம்பர் 31, 2009

புத்தாண்டு vazhthukkal

அன்பு மிக்க சென்னை நட்சத்திரங்களே, உங்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்துக்கள்! வாழ்க வழமுடன்!!
குஜிலி

வியாழன், டிசம்பர் 03, 2009

என் மகன் கார்த்திகேயன்பக்கத்து வீட்டு எகிப்தியன் பசங்களோட அடிக்கடி விளையாட செல்வான். நேற்று அவன் அவர்கள் வீட்டுக்கு விளையாட சென்ற போது அவர்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மூட்டையை பார்த்திருக்கிறான், அதனுள் கோழி எரு (droppings or poultry manure) இருந்துள்ளது. இவன் அவர்களிடம் அது என்ன என்று கேட்க கார்த்தியின் நண்பனான எகிப்திய சிறுவன் அது என்ன என்பதற்கு ஆங்கிலத்தில் சொல்ல தெரியாமல் செய்து காட்டிய ஆக்ஷன்தான் நாம் இந்த வீடியோ வில் பார்ப்பது.

கரையான்.

புதன், டிசம்பர் 02, 2009

படத்தில இருக்கிறவரை யாரென்று தெரியுதா, நம்ம நண்பர்தான். சுரேஷ், கல்லூரியில படிக்கும்போது ஒரு டப்பா ராஜ்தூத் பைக்குல வருவானே அவனேதான். இப்ப இவனும் வெளி நாட்டுல தான் குப்ப கொட்டுறான். டாலர் தேசம் அமெரிக்காவுல Mayo Clinic College of Medicine ல பணி புரிகின்றான்.
கரையான்.

சனி, நவம்பர் 28, 2009

பொம்பளைங்க என்னத்ததான் அவ்வளவு நேரம் பேசுவாங்களோ தெரியாது, அவங்களுக்கு மட்டும் மணிக்கணக்குல உக்காந்து பேச அப்படி என்னதான் இருக்குனு தெரியல. பக்ரித் விடுமுறைல தமிழ் நண்பர்கள் சிலர் வந்தாங்க, ஆண்களா தனியாக உட்காந்து கதை அளந்து கொண்டிருந்தோம், கொஞ்சம் நேரம் தான் பேச முடிந்தது, அதற்கு பின் என்னமோ பேச ஒண்ணுமே இல்லாதது போல் போராட்டித்து விட்டது. ஆனால் பெண்கள் பேசினார்கள் பேசினார்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்தவுடன்(கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரம் கழித்து) இப்பதான் பேச ஆரம்பித்தோம் அதுக்குள் கிளம்ப சொல்றீங்களே என்று அலுத்து கொண்டு கிளம்பினார்கள். இது கூட பரவாயில்லை, என்னுடைய பக்கத்து வீட்டு சூடான் நாட்டுக்காரன் அவன் குழந்தை பிறந்ததற்காக பார்ட்டி கொடுத்தான், நான் என் குடும்பத்துடன் சென்று விருந்தை சிறப்பிக்க சென்றேன், அங்கு என் மனைவி ஒரு சூடானி மற்றும் ஒரு எகிப்திய பெண்ணுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கதை அளந்து கொண்டிருந்தாள். இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா , விஷயம் என்ன வென்றால் என் மனைவிக்கு அரபி சுத்தமாக வராது, அந்த பெண்களுக்கு அரபி தவிர எந்த மொழியும் கொஞ்சமும் தெரியாது.

கரையான்.







TO ALL " ID MUBARAK"

கரையான்.

திங்கள், நவம்பர் 23, 2009

தமிழுக்கு அமுது என்ற பேர்

அந்ததமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம். வாழ்க ,வளமுடன் வாழ்க தமிழ்!
Doctor -- Vaidyanathan Dentist -- Pallavan Lawyer -- Kesavan North Indian Lawyer -- Panjabakesan Financier -- Dhanasekaran Cardiologist -- Irudhayaraj Pediatrist -- Kuzhandaisamy Psychiatrist -- Mano Sex Therapist -- Kamadevan Marriage Counselor -- Kalyanasundaram Ophthalmologist --Kannayiram ENT Specialist -- Neelakandan Diabetologist -- Sakkarapani Nutritionist -- Arogyasamy Hypnotist -- Sokkalingam Mentalist -- Budhisikamani Exorcist -- Maatruboodham Magician -- Mayandi Builder -- Sengalvarayan Painter -- Chitraguptan Meteorologist -- Kaarmegam Agriculturist -- Pachaiyappan Horticulturist -- Pushpavanam Landscaper -- Bhuminathan Barber -- Kondaiappan Beggar -- Pichai Bartender -- Madhusudhan Alcoholic -- Kallapiraan Exhibitionist -- Ambalavaanan Fiction writer -- Naavalan Makeup Man -- Singaram Milk Man -- Paul Raj Dairy Farmer -- Pasupathi Dog Groomer -- Naayagan Snake Charmer -- Nagamurthi Mountain Climber -- Yezhumalai Javelin Thrower -- Velayudam Polevaulter -- Thaandavarayan Weight Lifter -- Balaraman Sumo Wrestler -- Gundu Rao Karate Expert -- Kailaasam Kick Boxer -- Ethiraj Batsman -- Dhandiappan Bowler -- Balaji Spin Bowler -- Thirupathi Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy Attentive Driver -- பார்த்தசாரதி

அன்புடன்,
பாய்.