செவ்வாய், நவம்பர் 10, 2009
நம்ம பாண்டு மனோகரன் டைரி சயின்ஸ் வகுப்பில் செய்த காமெடியை பாய் போட்டு உடைத்தார். Dairy Microbiology நமக்கு டாக்டர் நரசிம்மன் எடுத்தார். அந்த சுப்ஜெக்ட் இன் இறுதி தேர்வில் எல்லோருக்கும் கேள்வித்தாள்கள் கொடுத்தார், பாண்டுக்கு மட்டும் கேள்வித்தாள் மாறி கொடுக்கப்பட்டு விட்டது, அதாவது அடுத்த trimester க்கான Dairy Technology question paper தவறுதலாக கொடுக்கப்பட்டு விட்டது. கேள்வித்தாள் பார்த்த பாண்டும் அதில் இருந்த பால் கோவா செய்வது எப்படி, சீஸ் செய்வது எப்படி என பல் கேள்விகளுக்கும் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் ஏதோ எழுதி வைத்தான். முழுதாக மூணு மணி நேரம் எழுதி தள்ளி விட்டுதான் பரீட்சை ஹால் விட்டு வெளியில் வந்தான். மற்ற நண்பர்களுடன் பேசும்போதுதான் தவறை உணர்ந்தான், நரசிம்மனிடம் சென்று அது பற்றி கூறினான், நரசிம்மனும் தவறை உணர்ந்து அவனுக்கு மறு பரீட்சை வைத்தார்.
எப்படிடா ஒன்றும் படிக்காமல் அவ்வளவு நேரம் எழுதினாய் என்று பான்டிடம் கேட்டால் "கோவா செய்யறது, தயிர் செய்யறது எல்லாம் நாம வீட்ல பாக்காததா? அத்தான் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதினேன் அதுக்குதான் இவ்வளவு டைம் ஆயிடிச்சி" என்று சொல்லி அசத்தினான்.
கரையான்.
திங்கள், நவம்பர் 09, 2009
ரொம்ப நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. அவரவர் தம் தம் வேலைகளில் கொஞ்சம் பிசியாகி விட்டதால் எழுத முடிய வில்லை. இன்று முதல் தொடங்குவோம்.
விடுமுறையில் சென்னை சென்றிருந்த பொது ஒரு குட்டி get-to-gether நம்ம மக்கள் அப்படியேதான் இருக்காங்க, உருவம் மட்டும்தான் மாறியுள்ளது உள்ளம் அப்படியேதான் இருக்கு. Beverly Bar ல சாயந்திரம் ஏழு மணிக்கு சந்திக்கலாம்டான்னு சொன்னால், பாண்டு மனோகரன் சாயந்திரம் ஆறு மணிக்கே பாருக்கு வெளியில நின்னுக்கிட்டு எப்பட எல்லாம் வருவீங்க என்று போன் மேல போனா போட்டு தள்ளுரான், ரமேஷ் முக்கியமான கல்யாணத்துக்கு போகனும்டா, வந்து தலைய மட்டும் காட்டிட்டு போயிடுவேன் இருக்க சொல்லி கம்பெல் பண்ணக்கூடாது என்று பந்தா விட்டவன் நைட்டு பன்னெண்டு மணிக்கு பாரு முடியதுக்கு அப்புறம்தான் சீட்டை விட்டு எழுந்தான் . நம்ம பாண்டியன் நான் டயத்துல இருக்கேன் பாத்துக்க கொஞ்சமாதான் drinks எடுத்துக்குவேன், ரொம்பல்லாம் குடிக்க முடியாது என்று பந்தா விட்டவன் நாலு பாட்டில் பீர் உள்ளே போன பின்னாலும் அவ்வளவுதானா என்பது போல் அலுத்துக்கொண்டான், பாண்டியா இதுதான் உன்னுடைய dieting ஆ எப்பா சாமி தாங்காதுடா என்று அலற வைத்து விட்டான்.(டயட் ல இல்லையென்றால் எத்தன பாட்டில் உள்ள போய் இருக்குமோ), TP அடுத்த ரவுண்டுக்கு ரிபீட் சொல்ல சொல்ல எனக்கு கொஞ்சம் பயம்தான், அவனுக்கு உள்ள போன வேகத்துல திரும்ப எல்லாம் வெளியில வந்திடுமே என்ற கவலை எனக்கு நான்தானே அவன் பக்கத்திலே உட்காந்திருக்கேன். உழவர் பயிற்சி முகாம் இருக்கு மச்சி நான் வர்றது கொஞ்சம் கஷ்டம்டா என்று பந்தா விட்ட குமாரவேலு மதியம் மூணு மணிக்கெல்லாம் போன் செய்து "உனக்காக உழவர் பயிற்சிய அப்பறம் பாத்துக்கலாம்னு ஒத்தி போட்டுட்டேண்டா வருஷத்துக்கு ஒருமுறை வர்றே இது கூட செய்யலன்ன எப்படி"
ஐயா சாமி என்னால நம்ம நாட்டோட விவசாய முன்னேற்றம் பாதிக்க வேண்டாம் நீ வேணும்னா வேலைய பாரு " என்றேன் நான்.
பாய் "டேய் நான் நெல்லைய புடிக்கணும் ஏழு மணிக்கெல்லாம் எக்மோருக்கு கெளம்பிடுவேன் என்ன சீக்கிரம் வுட்டுடுங்கடா என்று பந்தா விட்டு வந்து மாம்பழ ஜூஸ் குடிச்சு கெளம்பிட்டாரு நெல்லை சீமைய புடிக்க. டேய் வீட்டுக்கு போகணும் ரெண்டு ரவுண்டுதான் அதுக்கு மேல முடியாது என்று கூறிவிட்டு என்னடா நாலு ரௌண்டுதானா என்று கூறி பார விட்டு எழுந்திரிக்க மனம் இல்லாமல் வந்தான் பாண்டு. சேவியர் தொழிலதிபர் கெட் அப்புல வந்து கொஞ்சமா பெப்சி மட்டும் குடிச்சிட்டு கோழி விக்கிற தொழில ரகசியத்த எல்லாம் போட்டு உடைச்சான், பழைய கதையெல்லாம் பேசி சிரிச்சு பார கலக்கிட்டு அவுங்க அவுங்க வீட்டுக்கு நல்ல புள்ளையா அஜந்தா பாக்கு போட்டு நாத்தத்தை மறக்கரதா நினச்சு போனால் பொண்டாட்டி சிரிக்கிறா "இன்னைக்கி தண்ணியா "
எப்படி கண்டிபுடிச்ச நான்தான் நாத்தம் வராம இருக்க பாக்கெல்லாம் போட்டிருக்கேனே."தண்ணி அடிக்கிற அன்னைக்கிதானே பாக்கு போடுவே அது கூடவா எனக்கு தெரியாது."
கரையான்.
திங்கள், அக்டோபர் 12, 2009
என்ன ஆச்சு?
குஜிலி வீட்டில் கொசு தொல்லையா?
GFK வீட்டில் துப்பாக்கி சண்டையா?
பீர் வீட்டில் பாச்சான் தொல்லையா?
பாய்.
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
கண்ணா நீகல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
ஒரு பொண்ணு போட்டோவுலதேவதைமாதிரி
இருந்தாலும்நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
அப்பா அடிச்சா வலிக்கும்அம்மா அடிச்சா வலிக்கும்ஆனால் சைட் அடிச்சா
வலிக்காது
உன்னை யாரவதுலூசுன்னு சொன்னாகவலை படாதே!வருத்த படாதே!ஃபீல் பண்ணாதே!உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்!
காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரி குட் கீபிடப்
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,டீ மாஸ்டர்டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா
இருக்கும்'
'ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?இல்லை அவங்களே சொன்னங்க...
கரையான்.
வெள்ளி, ஜூலை 10, 2009
கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறேன்--------
நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?--------
பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம்
.--------வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.--------
கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.---------
மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.----------
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா
அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!-----------
நான் படித்தவை நண்பர்களுக்காக.....
கரையான்.
வியாழன், ஜூலை 09, 2009
மனைவியை ஊருக்கு அனுப்பிய அடுத்த நாள், கண்ணீர் சிந்தி கஷ்டப்பட்டு வெங்காயம் வெட்டிக்கொண்டு இருக்கிறேன், சின்னவள் அக்ஷ்யா என்னிடம் வந்து ஏனப்பா அம்மா ஊருக்கு போய்ட்டாங்கன்னு அழரயா, இன்னும் கொஞ்சம் நாள்தான்ப்பா நம்ம எல்லாம் ஊருக்கு போய் அம்மாவ பாக்குலாம்,கவலைப்படாதே" உங்களுக்கெல்லாம் அம்மா ஊருக்கு போனது கஷ்டமா இல்லையாம்மா என நான் கேட்டேன், இதெல்லாம் பெரிய விஷயமாப்பா, அதான் நீ இருக்கிறே சமைக்க மற்ற எல்லாம் வேலையும் பார்க்க, உன்னால முடியலன்னா HERFY இலையோ MC டானல்ட்,KFC லியோ சாப்பிட்டுக்க வேண்டியதுதான்.
பண்ணையில வேலை நெருக்கடி போதாதுன்னு வீட்டு வேலையும் சேர்ந்ததால், சிக்கன் செய்யும்போது உப்புக்கு பதில் சர்க்கரையை கொட்டி குழந்தைகிளின் கிண்டலை சமாளித்தது ஒரு பெரிய காமெடி.
பெரியவள் காயத்திரி" அப்பா நீயே அம்மாவ விட நல்லாத்தான் சமைக்கிரே அம்மாவ வேணும்னா அங்கயே இருந்து பாட்டியை பாத்துக்க சொல்லலாம்பா"
ஒரு முறை குஜிலி நான் செட்டிநாடு குதிரைப்பன்னையில் பணிபுரியும்போது அங்கு வந்திருந்தார், "குமரன் குழந்தைங்க ரொம்ப வேகமா வளருவாங்க, இப்பதான் குழந்தையா பாத்தா மாதிரி இருக்கும் அதுக்குல்ள்ள இவ்வளவு பெரிசாயிட்டங்கலேன்னு மலைப்பா இருக்கும்" என்று கூறியதுதான் இப்போது நினைவு வருகிறது.
"டேய் கார்த்தி பரீட்சைக்கு படிக்கிறயா, நான் சொல்லி தர்றேன் உன்னோட பாட புத்தகம் எடுத்து வா" என்று நான் கூறினால் "அப்பா உனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா, நீ படிச்சது வேற இப்ப நாங்க படிக்கறது வேற, இது கொஞ்சம் கஷ்டமப்பா" அவன் எனக்கு சொல்லி தருகிறான்.
நான் படும் கஷ்டத்தை பார்த்து இங்குள்ள நண்பர் ஒருவர் அவர் குடும்பத்துடன் வந்து அவர் மனைவியை விட்டு சமைத்து கொடுத்து விட்டு சென்றார், குழந்தைகள் சாப்பிட்டு விட்டு "ஐயோ பாவம்ப்பா அந்த அங்கிள்" என்று அடிக்கும் கமென்ட் கொஞ்சம் எனக்கே ஓவராகத்தான் படுகிறது.
இன்னும் பதினாறு நாட்கள் கடத்த வேண்டும், அதற்குள் இன்னும் என்னவெல்லாம் காமெடி நடக்கப்போவுதோ.....
கரையான்.