வெள்ளி, ஜூலை 03, 2009

gujili avarkale பல நகைச்சுவை அனுபவங்கள் என் சொந்த அனுபவங்களும் உண்டு என்பதை நான் வெட்கம் இல்லாமல் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நண்பர்கள் சிரிக்க மேலும் சில நகைச்சுவைகள் biலாகில் படித்தது.

பேரங்கள் எப்படிப் படியும்? அதீத சாமர்த்தியசாலி யாரோ அவருடையநோக்கத்திற்குப் படியும்.அதை விளக்கிக் கற்பனைச் சம்பவம் ஒன்றை ஒருவர் எழுதியிருக்கிறார்.அதை நீங்கள் அறியத்தருவதில் உவகை கொள்கிறேன்.படித்து மகிழுங்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காட்சி ஒன்று:ஒரு தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் நடக்கும் உரையாடல்!"மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்""நோ, டாடி, என் விருப்பப்படி என் திருமணம் அமைவது நல்லது. பெண்ணைத்தேர்ந்தெடுப்பதை என்னிடம் விட்டு விடுங்கள்"பெண் யாரென்று தெரிந்தால் நீ மறுக்க மாட்டாய்"ஆர்வத்துடன் மகன் கேட்டான்: "யாரது டாடி!"பெண் பில்கேட்ஸின் மகள்""அப்படியென்றால் டபுள்ஓக்கே !"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காட்சி இரண்டு:அடுத்து அந்தப் பையனின் தந்தை பில்கேட்ஸைச் சந்தித்துப் பேசுகிறார்"உங்களுடைய மகளுக்கு என்னிடம் ஒரு நல்ல வரன் இருக்கிறது!""என் மகளுக்கு இப்போது திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை. ஒரு ஆண்டுசெல்லட்டும்.""நான் சொல்லும் இளைஞன் உலக வங்கியின் துணைத் தலைவர்."ஆச்சரியம் அடைந்த பில்கேட்ஸ், உற்சாகமாகச் சொல்கிறார் "ஆகா, சின்னவயதிலேயே உலக வங்கியின் துணைத் தலைவரா? அப்படியென்றால் எனக்குச்சம்மதமே!"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பையனின் அப்பா, முடிவாக உலகவங்கியின் தலைவரைச் சந்திக்கிறார்."உங்கள் வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு அசத்தலாகப் பொருந்தக்கூடியஇளைஞன் ஒருவனை எனக்குத் தெரியும். அழைத்து வரவா?""வேண்டாம். ஏற்கனவே அந்தப் பதவியில் இருவர் இருக்கிறார்கள்""ஆனால் நான் சொல்லும் இளைஞன் பில்கேட்ஸின் மாப்பிள்ளை!""ஓ..... அப்படியென்றால் உடனே பதவியளிக்க நான் தயார்!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்படித்தான் உலகலவில் முக்கியமான பேரங்கள் நடக்கின்றன!

புதன், ஜூலை 01, 2009

பிளாகில் படித்தது நண்பர்களுக்காக

இரு நண்பர்கள், பார்டியில்...ந1 : "என் மனைவி தேவதை! "

ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"

நிச்சயத்தின்போது...மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"

அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

"மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"

அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!

"மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"

கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"

இரண்டு நண்பர்கள் பாரில்...கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?

விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.

கண்ணா: ஆஆ.. அப்புறம்?

விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"

மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க... 5 வார்தை மந்திரம்!

"என்னை மன்னிச்சிகோ!" & "நீ சொன்னா சரிதான்!"

கரையான்.


சனி, ஜூன் 27, 2009

சமிபத்தில் ஒரு பிலாகில் படித்த ஜோக் நம் மக்களுக்காக
The IAS InterviewOne young man went for an IAS Interview."When did India get independence?" He was asked."The efforts began a few years earlier and final result was in 1947" He replied.
"Who was responsible for our independence?""There were so many. Whom to mention? If I name one, it will be a injustice to another." He replied.
"Is corruption the number one enemy in our country?""Some research is going on the subject and I can answer with certainly only after seeing the report" He replied.
The interview board was very pleased with his original and thoughtful answers and asked him not to reveal the questions to others, since they were planning to ask the same questions. When he went out naturally others were curious to know what was asked. He politely declined, but one persistent Santa would not leave him. "At least tell me the answers" he pleaded, and our friend obliged.
Then it was the turn of this Santa. When he went inside, since his resume was slightly illegible, the board member asked him." By the way, what is your date of birth?"He replied, "The effort began a few years earlier and final result was in 1947."
Somewhat puzzled, they asked another clarification. "What is your fathers name?"He replied, "There were so many. Whom to mention". If I name one, it will be injustice to another".The interviewer was incensed."Hey! Are you mad or what?"He replied. "Some research is going on the subject. I can answer with certainty only after seeing the report."
கரையான்.

புதன், ஜூன் 24, 2009

உடம்பு சரியில்லாத பொது தான் நாம் வயது முதிர்ச்சி அடைகிறோம் என்பது உரைக்கிறது. அதுவும் வெளி நாட்டில் இருந்து கொண்டு உடல் நிலை சரியில்லை என்றாலும் நாமே காரை ஒட்டிக்கொண்டு மருத்துவமனை செல்வது கொடுமை. இங்கு நண்பர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் நகரத்தில் வசிப்பதால், என்னைப்போன்ற கிராம வாசிகள் பாடு திண்டாட்டம்தான். உடல் நிலை சரியில்லாத பொது பற்பல எண்ணங்கள் வந்து போகின்றது, " ச்சே என்ன வாழ்க்கை இது, அறைவயித்து கஞ்சி என்றாலும் அதை நம்ம ஊரிலேயே குடிக்கலாமே இங்க வந்து ஏன் கஷ்டப்பட வேண்டும் , பேசாம எல்லாத்தையும் விட்டு விட்டு ஊருல போய் மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சால் கூட போதுமே " இப்படி பல எண்ணங்கள். ஆனால் இது சாத்தியமா. இல்லை தான். இப்படி பல குழப்பங்கள், உடல் நிலை சரியான வுடன் குழப்பங்களும் சரியாகி விடுகிறது.
தொடர்ந்து எழுதுவேன்...
கரையான்.

திங்கள், ஜூன் 15, 2009

சென்னை நட்சத்திரங்களிடம் இன்னும் மூச்சு உள்ளதா?

அன்பார்ந்த நண்பர்களே, நமது ப்ளோகில் எழுத யாருக்கும் நேரம் இல்லையா?
கோடை கால விடுமுறை யாதலால் அங்கும் இங்கும் ட்ரிப் செய்து கொண்டிருக்கிறோம். எல்லோரும் நலம் தானா? சமயம் கிடைத்தால் கதைகள் எழுதவும்..
குஜிலி

வெள்ளி, மே 29, 2009

மாணவர்களின் கட்டுகதைகள்

எல்ல நாட்டிலும் இருப்பது போல் இந்த ஊரிலும் மாணவர்கள் பொய், மட்டும் கட்டு கதைகள் சொல்வது சகஜம். எங்கள் ஊரில் ஸ்ப்ரிங் செமஸ்டர் இல் அதிகமாக SNOW இருக்கும். 1 அடிக்கு மேல் SNOW இருந்தால் எங்கள் ஊரில் வகுப்புகளை CANCEL செய்து விடுவர். கடந்த செமஸ்டர் பெப்ரவரி மாதத்தில் அதிக SNOW இருந்ததால் காலை வகுப்புகளை மட்டும் CANCEL செய்தனர். நானும் என் கண் கண்ட தெய்வமும் (KKD) ஒரே கல்லூரியில் ஆசிரியர்கள இருப்பதால் அவ்வப்போது என் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் KKD இன் வகுப்பிலும் இருப்பார்கள். அன்றைக்கு KKD இன் காலை வகுப்பில் பரீட்சை. காலை வகுப்புகள் CANCEL செய்ததால் KKD பரீட்சையை மதியம் கொடுப்பதாக திட்டம் பண்ணியிருந்தார். KKD இன் வகுப்பிலும் என் வகுப்பிலும் இருந்த ஒரு மாணவி KKD இன் பரீட்சையை எழுதுவதற்கு சோம்பல் பட்டு எங்கள் தெருவில் இன்னு SNOW PLOUGH வரவில்லை, ஆகையால் என்னால் பரீட்சை எடுக்க முடியாது என்று பீலா விட்டு அவருக்கு E MAIL எழுதினாள். எங்கள் வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களின் vaguppu schedule எங்கள்ளுக்கு access இருப்பதால் KKD அவள் வகுப்பு schedule கண்டு என் வகுப்பிலும் அந்த மாணவி இருப்பதை கண்டு என்னிடம் - இந்த மாணவி இன்றைக்கு வகுப்பிற்கு வரமுடியாது என்று உனக்கும் E MAIL அனுபினாள்ள என்று வினவினார்? அந்த மாணவி என்னகு ஒரு E MAIL அனுப்பவில்லை என்று கூறினேன். அப்பொழுது KKD நிலைமையை சுதாரிதுகொண்டார். பின்னர் அன்றைக்கு மதியம் என் வகுப்பு அறையின் வழியை சென்று ஜன்னல் வழியாக பார்த்தால் பீலா உட்ட மாணவியை கண்டார். அந்த மாணவி அடுத்த நாள் அவரிடம் சென்று நேற்று SNOW அதிகமாக இருந்ததால் நான் வகுப்பிற்கு வரவில்லை என்று நன்றாக பீலா விட்டாள். உடனே KKD அவளிடம் நீ என் இவ்வாறு பொய் சொல்லுகிறாய் நான் உன்னை நேற்று வேறு வகுப்பில் உட்கர்ந்திருந்தடை பார்த்தேனே என்று வினவினார். உடனே அந்த மாணவி KKD இடம் - மதியம் போல் என் boy friend எனக்கு அவர் வாகனத்தில் சவாரி கொடுத்தார் என்று மேலும் பீலா விட்டால்! KKD மிக்க கோபம் அடைந்து அவழுக்கு பரீட்சையில் முட்டை கொடுத்துவிட்டார்.. நமது கால் நடை கல்லூரி நாட்களில் உட்ட பீலாக்கள் இப்போது மெதுவாக என் ஞாயபகத்திற்கு வருகிறது.
குஜிலி

செவ்வாய், மே 26, 2009

எங்களுடைய ரைசிங் இஸ்டபிளில் கொஞ்சம் குதிரைகளுக்கு கேள்டிங் மற்றும் கஸ்லிக்க் செய்ய வேண்டி இருந்ததால் அங்கு சென்று விட்டு பணி முடிந்த வுடன் அந்த பகுதியில் நான் ஏற்கனவே வேலை செய்தபோது அறிமுகமான என்னுடைய பழைய நண்பர்களை சந்திக்கலாம் என சென்றேன். அப்போது என் நண்பர் எகிப்து நாட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் அவருடைய open-air surgical theatre - ல் (அதுதான் பிக் அப் டிரக்கின் பின் புறம்) வைத்து ஒரு ஆட்டுக்கு mammectomy செய்து கொண்டு இருந்தார், அவர் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து விட்டு அந்த ரத்தம் வடியுமிடத்தில் தயாராக வைத்திருந்த கல் உப்பை வைத்து அழுத்திகொண்டிருந்தார், அவர் அருகில் மற்றொரு கால்நடை மருத்துவ நண்பரான ஒரு சூடானி கவனித்துக்கொண்டு இருந்தார். நான் அருகில் சென்று நண்டப்பதை பார்த்து விட்டு மனதுக்குள்ளேயே "கடவுளே அவர் rigor mortis set ஆவதற்குள் சர்ஜரியை முடித்து விடவேண்டும்" என வேண்டிக்கொண்டேன், பின்னர் சூடானி நண்பரை அழைத்துக்கொண்டு அவரிடம் கொஞ்சம் கதை அளந்து விட்டு வரலாம் என எண்ணி அவருடைய பார்மசியை நோக்கி நடந்தேன். அந்த சுடானிக்கு அந்த எகிப்திய டாக்டர் ஏன் ரத்தம் வரும்போது உப்பை வைத்து அழுத்தினார், அதனால் என்ன பயன் என தெரிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருந்தார், என்னிடம் அது பற்றி கேட்டுக்கொண்டே இருந்தார், அந்த எகிப்து நாட்டு மருத்துவருக்கு தெரியும் இந்த ஆடு எப்படியும் செத்து விடும் என்று அதனால் செத்த பிறகு உப்பு கண்டம் போடுவதற்கு பதில் இப்போதே தொடக்கி விட்டார், இது ஒரு வகையான pickling (ஊறுகாய் போடுவது) என்று கூறினேன் . நண்பர்கள் உங்களுக்கு ஏதாவது இந்த சிகிச்சை பற்றி தெரிந்தால் தெளிவு படுத்தவும்.
கரையான்.