செவ்வாய், பிப்ரவரி 10, 2009

பாயின் நண்பர்கள்



1.கொடைக்கானலில் எடுத்தது-1995.
2.பட்டமளிப்பு விலா. -படத்தில் இருக்கும் நண்பர்களை விட, மதிப்பிற்குரிய ஆசான், டாக்டர்.வேங்கட சுப்பா ராவ் ,அவர்களை என்றும் மறக்க முடியாது.
நமது வாத்தியார்களில் மிகவும் நேர்மையான ,அனைவருக்கும் உதவி செய்யக்குடிய ,பந்தா இல்லாத ஜென்டில்மன். இவரைப் போன்ற ஓரிரு நல்ல ஆசான் கலைக், குறித்து எழுதுவேன். இன்றும் அவருடன் தொடர்பு வைத்துள்ளேன். நான் RECOMMEND செய்து அவரிடம் செல்ப வர்களுக்கு ,அனைத்து உதவியும் செய்வார்.அவர் நீடூழி வால்க!333
3.ஆல் இந்தியா டூரில் -தாஜ்மகாலில் எடுத்தது.யார் எனது இடது புறத்தில் ஒட்டிகொண்டுல்லானோ ,அவன் தான் இன்று வரை ,ஒழுங்காக தொடர்பு வைத்துள்ளான்.அவன் தான் என் ஆருயிர் நண்பன்.அவன் நீடூழி வால்க.மற்றவர்களிடம் எத்தனை முறை பேசினாலும்,பதில் இல்லை.


திங்கள், பிப்ரவரி 09, 2009

சில சுவாரஸ்யமான அனுபவங்கள்தான் நான் எழுதும் பல செய்திகளின் மூலம், ஆகவே பாய் சொல்வது போல் அந்த மாதிரி எதுவுமே இல்லை(மத்திகிரியில் பாய்) என்பது ஒப்புக்கொள்ள கஷ்டம்தான். அதனால் என்ன நான் தொடர்ந்து எழுதுவேன்.

ஒரு முறை சவூதி நண்பர் ஒருவர், ஆர்மியில் பெரிய பதவியில் இருப்பவர் என்னை அவருடைய ஆர்மி பயிற்சி பள்ளியில் உள்ள சில குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்தார். நானும் சென்று என்னுடைய பணி முடிந்த வுடன் அவரிடம், இவ்வளவு குதிரைகள் இருக்கிறதே ஏன் நீங்கள் ஒரு கால்நடை மருத்துவரை இங்கு பணி அமர்த்தக்கூடாது ? என வினவினேன். அதற்கு அவர் அங்கு ஒரு சவூதி கால்நடை மருத்துவர் பணி புரிந்ததாகவும், அவரால் அதிகாலை ஐந்து மணிக்கு பணி வருவதற்கு சிரமமாக இருப்பதால் வேலையிலிருந்து சென்று விட்டார் என்றும், அவர் பணிவருவார் என எண்ணி அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் வாங்கியதாகவும் அவர் சென்று விட்டதால் வீணாக இருப்பதாகவும் கூறினார், அதை என்னை பார்வை இட வேண்டினார். நானும் அந்த புத்தம் புதிய கருவியை பார்வை இட்டு அதிர்ந்து போனேன், ஏனென்றால் அது மனிதர்களுக்கு உபயோக படுத்தும் ஸ்கானர் ஆகும், அதில் rectal probe க்கு பதில் trans-abdominal probe இருந்தது. நான் அதை வாங்கியது யார் என அவரிடம் கேட்டேன், முன்னாள் பணியிலிருந்த கால்நடை மருத்துவர்(சவூதி) தான் அந்த கருவியை தேர்வு செய்து order கொடுத்தார் என்றார். நான் அவரிடம் அந்த கருவியை வைத்துக்கொண்டு குதிரைக்கு PD செய்ய முடியாது என்பதை விளக்கினேன்.அதை கேட்டு மிகவும் நொந்து விட்டார், அதை என்ன செய்வது என்று பல நாட்கள் யோசித்து, கடைசியில் ஆர்மி மருத்துவமனைக்கு அதை கொடுத்தார்.

கரையான்.

புதன், பிப்ரவரி 04, 2009

கரி அறிவியல்

இந்த வாத்தியார் அடிக்கடி THIS ,YEAH என்று மட்டுமல்ல ,பிற ஆங்கில கொலைகளையும் செய்தார்.பெயர் : 'கரி' ரன்.அடுத்த வாரம் ரெகார்ட் SUBMIT பண்ண வேண்டுமேன்றால்,'YOU ALREADY SUBMIT NEXT WEEK' என்று கூறுவார்.ஒரு முறை நான் ரெகார்ட் சுப்மிட் பண்ணவில்லை.ரூமிற்கு அழைத்தார்.ஏன் ? என்று கேட்டார்.நான் அவருடைய பாணியிலேயே ,"சாரி சார் ! I WILL NOT SUBMIT LAST WEEK BECAUSE I AM SICK; NOW,I ALREADY SUBMIT RECORD NEXT WEEK" என்று கூறினேன். ஓகே ,சரி என்று என்னை அனுப்பிவிட்டார்.'B' க்ரடே தந்தார்.என்னைப்போன்று சரியாக காரணம் கூரதவர்களுக்கு 'C' and 'D' grades தான் குடுத்தார்.
பாய்.

மத்திகிர்யில் பாய்

எனது மத்திகிரி ப.கே.ப . அனுபவங்களை எழுதும்படி கறையானும் ,பீரின் அனுபவங்களை எழுதும்படி குஜிளியிம் கூறியுள்ளனர். என் தரப்பிலிருந்து எழுதுவதற்கு ஏதும் இல்லை.அங்கு எனது நேரம் பின்வருமாறு கழிந்தது.வகுப்பு முடிந்ததும் முற்பகலிலும் பிற்பகலிலும் கிரிக்கெட் விளையாடுதல்,இரவில் கார்ட்ஸ் ,அதிகாலையில் VAS வீட்டிற்கு சென்று ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் மட்சுகளை டீவீயில் பார்த்தல் ,விடுமுறை நாட்களில் பெங்களூரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு செல்தல் .இருப்பினும் ஐந்தாண்டு கல்லூரி ஹோச்டல் வாழ்கையை விட ,இங்குள்ள மூன்று மாத வாழ்கை பிரமாதம். ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம்.புத்தாண்டு தினத்தன்று இரவு நேர GET TOGETHER இல் ,பிரியப்போகிறோம் என்று பேசும்போது அழுது விட்டேன்.
பீர் ஒரு சாது.CD பட்சினர் ஜோடி சேருவதிலேயே மதிகிரியை களித்தனர். AB பட்சிப்போல் ஒரு உள்ளார்ந்த அன்பு,கேலி,கிண்டல் ,SPORTIVE தன்மை அவர்களிடம் இல்லை. வால்க வளமுடன்,
பாய்.

திங்கள், பிப்ரவரி 02, 2009

குஜிலி ஜெயபாபுவுடைய ஒருதலை காதல் பற்றி எழுதியதும் அவனுடைய தோல்வியடைந்த காதல் முயர்ச்சிகளிலோன்று நினைவுக்கு வருகிறது.நாம் மத்திகிரியில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் ஐந்து பேர்கள் மெஸ்ஸில் சாப்பாடு பரிமாற வேண்டும். அப்போது அந்த குறிப்பிட்ட பெண் சாப்பாடு பரிமாற வரும்போது அவனுடைய தட்டில் சோற்றிலேயே I LOVE YOU என எழுதி வைத்து, குழம்பு ஊற்றும்போது தட்டை தூக்கி அந்த பெண் பார்க்க ஏதுவாக காட்டுவான், ஆணால் அந்த பெண்ணோ அதை கண்டு கொள்ளாமல் எழுத்துக்கள் அழியுமாறு குழம்பை அதிகமாக ஊற்றுவார். ஆனால் அதை பற்றி நினைத்து மனம் நொந்துவிடாமல் அடுத்த நாளும் வேறு வழியில் தன்னுடைய முயற்ச்சியை தொடருவான்.
கரையான்.

''ஊர்ஸ்" இன் சேட்டைகள்

நமது நண்பர் "ஊர்ஸ்" ஜெயபாபுவின் சேஷ்டைகள் அநேகம் உண்டு. பல ஆண்டுகளாக நீடித்த சேஷ்டை அவருடைய காதல் அனுபவங்கள். அவருடைய நீடிய ONE-SIDED அன்பின் RECIPIENT நமது வகுப்பில் மாதேஸ்வரன்னுகு பின் ATTENDANCE இல் இருக்கும் அழகி. ஜெயபாபு அவழுடைய கொடை ஒன்றை எஅப்படியோ சுடுட்டி விட்டான். அந்த கொடையை விரித்து லேடீஸ் hostel போகும் வழியில் உள்ள மரத்தில் ஏறி உட்கார்ந்து avazhl போகும் போதும் வரும் போதும் பேரை சத்தமாக கூப்பிட்டு "மாமா வந்திருக்கேன்" என்று கூக்குரல் விட்டு கொண்டிருப்பான். அவள் அழாத கொரசேல் தான்.. அவனை கண்டதும் பத்து மயில் தூரம் செல்வாழ்ல் அந்த பெண். ஜெயபாபு என்றால் எப்போதும் அந்த கொடை கூத்து கதை தான் முதல் ஞாயபகத்திற்கு வரும்..
Gujili

ஞாயிறு, பிப்ரவரி 01, 2009

குதிரைகளுக்கு இருப்பது போல் ஒரு well-equipped hospital மற்ற மிருகங்களுக்கு இங்கு இல்லை, அதனால் pharmacy களில் பணி புரியும் மருத்துவர்களே பெரும்பாலும் அந்தந்த கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்றோ அல்லது பார்மசி அருகிலோ வைத்து சிகிச்சை அளிப்பார்கள். சில சமயங்களில் எங்கள் பார்மசிக்கும் குதிரை அல்லாது மற்ற மிருகங்களை எடுத்து வருவார்கள், ஆனால் நாங்கள் சிகிச்சை அளிக்க மறுத்து விடுவோம். எங்கள் அருகில் ஒரு எகிப்து நாட்டு கால்நடை மருத்துவர் பணி புரியும் பார்மசி இருந்தது, அவர் ஆடுகளுக்கு owner கொண்டு வரும் pick-up truck -ல் வைத்தே பெரும்பாலான சிகிச்சைகளை அளிப்பார். அவருடைய சிகிச்சைகள் பலவேறாக இருக்கும் caesarean section, mammectomy, hysterectomy என அனைத்து சிகிச்சைகளும் open air theater (அதாவது pick-up truck இன் பின் புறம்) வைத்தே முடிப்பார். பெரும்பாலும் அவருடைய அறுவைகள் தோல்வியிலேயே முடியும். ஒரு முறை அவர் ஒரு ஆட்டை pick-up truck இன் பின் புறம் வைத்து எதோ செய்து கொண்டிருந்தார், நான் அவரருகில் சென்று "என்ன டாக்டர் இப்படி பார்மசி எதிரிலேயே post-mortem செய்கிறீர்கள் எங்களுக்கு துர் நாற்றம் அடிக்காதா என கேட்டேன், என்னுடைய கேள்வியை கேட்டு மிக்க கோபம் அடைந்து, டாக்டர் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ரெண்டு மணி நேரமாக mammectomy செய்து கொண்டு இருக்கிறேன், நீ என்னை கேவலப்படுத்தி விட்டாயே என்று கோபமாக கேட்டார். நான் அவரிடம், "டாக்டர் கொஞ்சம் நல்லா பாருங்கள் rigor martis கூட செட் ஆகி விட்டது இதை எப்படி surgery என்று கூறு கிறீர்கள்" என திருப்பி கேட்டேன். அப்போது தான் அவர் அந்த ஆடு செத்து விட்டது என்பதையே கவனித்தார்.
கரையான்.